சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஆட்டோ எக்ஸ்போவில் ஜகுவார் XE அறிமுகம்: சோதனை ஓட்டத்தின் போது உளவாளிகளின் கண்களில் தென்பட்டது

published on ஜனவரி 11, 2016 04:24 pm by nabeel for ஜாகுவார் எக்ஸ்இ 2015-2019

ஜகுவார் நிறுவனம், தனது புதிய XE சேடான் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தத் தயாராகி விட்டது. 2016 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியின் போது, இந்த கார் இந்தியாவில் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்படும். BMW 3 சீரிஸ், ஆடி A4 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் C கிளாஸ் போன்ற கார்களுடன் போட்டியிடவுள்ள ஜாகுவாரின் இந்த புதிய தயாரிப்பின் விலை, இன்றைய தேதி வரை ஏனைய மாடல்களின் விலையை விட குறைந்ததாகவே இருக்கிறது. மற்றுமொரு உற்சாகமான செய்தி என்னவென்றால், இந்த காரின் முன்பதிவு ஆரம்பம் ஆகிவிட்டது, எனவே, நீங்கள் இதை வாங்க வேண்டும் என்று நினைத்தால், ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து இந்தக் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதே நேரம், இதன் தொடக்க விலை ரூ. 40 லட்சங்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புனேயில் உள்ள ஜகுவாரின் ஆலையில் இந்த கார் அசெம்பல் செய்யப்படுவதால், இதன் விலை சகாயமாக இருக்கும். அடுத்த மாதம் நடக்கவுள்ள கண்காட்சியில், XF சேடான் மற்றும் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ஃப்-பேஸ் க்ராஸ் ஓவர் போன்ற கார்களுடன் இணைந்து, இந்த XE சேடான் காட்சிப்படுத்தப்படும்.

தற்போது உளவாளிகளின் கண்களில் தென்பட்டுள்ள இந்த வேரியண்ட், XE மாடலின் ஒரு அடிப்படை ரகமாக இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது, ஏனெனில், ஆடம்பர அம்சங்களான DRLகள் மற்றும் புரொஜெக்டர் ஹெட் லாம்ப்கள் போன்றவை இதில் இடம்பெறவில்லை. மேலும், பனி விளக்குகளும் இந்த மாடலில் இல்லவே இல்லை. இத்தகைய ஆடம்பர அம்சங்களை XE காரின் அடிப்படை வேரியண்ட்டில் எதிர்பார்க்கக் கூடாது என்பதை, இது நமக்கு உணர்த்துகிறது. புதிதாக வந்த மாடலாக இருந்தாலும், ஜாகுவாரின் கம்பீர சின்னமான ‘சிறுத்தைப் புலி' இந்த காரின் கிரில் பகுதியில் இடம்பெற்றிருப்பது, இந்த காருக்கு தனி மரியாதையையும், கம்பீரத்தையும் தருகிறது. அனைவரும் திரும்பிப் பார்க்கும் விதத்தில் ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ள ஜாகுவாரின் இந்த புதிய காரும், இதற்கு முன் சந்தையில் அறிமுகமான அனைத்து ஜாகுவார் கார்களையும் போலவே, ஜெர்மானிய கார் தயாரிப்பாளர்களை கதிகலங்கச் செய்யும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஜகுவார் XE காரின் அடிச்சட்டம் (சேசிஸ்) பகுதி முழுவதும் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. 194 bhp சக்தி மற்றும் 320 Nm டார்க் உற்பத்தி செய்யும் 2.0 லிட்டர் பெட்ரோல் இஞ்ஜின் அல்லது 161 bhp சக்தியை உற்பத்தி செய்யும் 2.0 லிட்டர் டீசல் இஞ்ஜின் இதில் பொருத்தப்படும். 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் இந்த இஞ்ஜின்களுடன் இணைக்கப்பட்டு, பின்புற சக்கரங்களை இயங்க வைக்கும். அது மட்டுமல்ல, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களான லோ-பிரஷர் எக்ஸாஸ்ட் கேஸ் ரி-சர்குலேஷன், செலெக்டிவ் கேடாலிடிக் ரிடக்ஷன் மற்றும் வேரியபிள் எக்ஸாஸ்ட் கேம் டைமிங் போன்ற தொழில்நுட்பங்கள், XE மாடலின் புத்தம் புதிய இங்கேனியம் டீசல் இஞ்ஜின்களில் இடம்பெறுகின்றன. மற்றுமொரு மகிழ்ச்சிகரமான செய்தி என்னவென்றால், 2016 ஐரோப்பிய கார் ஆஃப் தி இயர் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 7 முன்னணி கார்களுள் ஒன்றாக ஜகுவார் XE தேர்வு செய்யப்பட்டுள்ளது. வித்தியாசமான உயர்தொழில்நுட்ப பயன்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர்கள் அளிக்கும் பணத்திற்கு அதிக மதிப்பு தரும் கார்களே இந்த உயர்ந்த விருது பெறுவதற்கு தகுதியானவை ஆகின்றன. எனவே, ஜகுவார் XE காரின் சிறப்பை, எந்தவித கூடுதல் விளக்கமும் இன்றி நாம் அறியலாம்.

மேலும் வாசிக்க

n
வெளியிட்டவர்

nabeel

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஜாகுவார் எக்ஸ்இ 2015-2019

Read Full News

trendingசேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்
Rs.2.03 - 2.50 சிஆர்*
எலக்ட்ரிக்
Rs.41 - 53 லட்சம்*
Rs.11.53 - 19.13 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை