ஜாகுவார் பார்முலா E பந்தயங்களில் பங்கு கொள்ள போவதாக அறிவித்துள்ளது.
published on டிசம்பர் 16, 2015 10:05 am by manish
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் : முன்பு ஜாகுவார் ரேஸிங் என்ற பெயரில் சில காலம் பார்முலா ஒன் பந்தயங்களில் கலந்து கொண்ட இந்தியரை உரிமையாளராக கொண்ட ஜாகுவார் நிறுவனம் மீண்டும் விரைவில் நடைபெற உள்ள பார்முலா E மோட்டார் பந்தயங்களில் கலந்துக் கொள்ள போவதாக அறிவித்துள்ளது. பார்முலா E பந்தயங்கள் மின்சாரத்தால் இயங்கும் கார்கள் கலந்து கொள்ளும் போட்டியாகும். ஜாகுவார் இதில் ஒரு போட்டியாளராக பங்கேற்கப் போவதாக அறிவித்துள்ளது.
நிக் ரோஜெர்ஸ், ஜேஎல்ஆர் குழுமத்தின் பொறியியல் பிரிவு இயக்குனர் இது பற்றி கருத்து தெரிவிக்கையில் , “ எதிர்காலத்தில் அறிமுகமாக உள்ள எங்கள் தயாரிப்புக்களில் மின்சாரத்தில் இயங்கும் கார்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கும். மேலும் இது போன்ற வாய்ப்புகள் எங்கள் மின்சார வாகன தொழில்நுட்பத்தை சோதனைக்கு உட்படுத்தி, அதனை மேம்படுத்திக் கொள்ள உதவும்" என்று கூறியுள்ளார்.
டாடாவிற்கு சொந்தமான இந்த ஜாகுவார் நிறுவனம், மோட்டார் பந்தயங்களில் மீண்டும் நுழையும் அதே வேளையில், முன்னாள் பார்முலா ஒன் சேம்பியனான வில்லியம் குழுமத்தின் , வில்லியம் அட்வான்ஸ்ட் என்ஜினீரிங் உடன் கை கோர்க்க உள்ளது. ஜாகுவார் மற்றும் ஆஸ்டன் மார்டின் நிறுவனங்களுக்கு , போர்ட் மோட்டார்ஸ் நிறுவனம் உரிமையாளராக இருந்த போது ஜாகுவார் பார்முலா ஒன் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டது. 2004 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு மோட்டார் பந்தயங்களிலும் ஜாகுவார் கலந்து கொள்ளவில்லை. இத்தாலியின் ட்ரூலி அணி விட்டு சென்ற பத்தில் ஒரு இடத்தை ஜாகுவார் அணி வரும் பார்முலா E போட்டிகளில் நிரப்பும். பல ஆண்டுகளுக்கு முன்பு மோட்டார் பந்தயங்களில் கலந்து கொள்வதன் மூலம் பிரபல ப்ரேன்ட்கள் தங்கள் கார்களின் தரம் உயர்தப்பட்டு , பின் அதுவே மக்கள் பயன்பாட்டு கார்களை உருவாக்குவதற்கு வழி வகுக்கும் என்று நம்பப்பட்டது. இந்த நிலையும், இப்போது கார் பந்தயங்கள் ஏரோனாடிக்ஸ் உடன் நெருக்கமாக உள்ளது போல் இல்லாமல் வாகன தொழிற்துறைக்கு பார்முலா ஒன் பந்தயங்கள் நெருக்கமாக இருந்த காலத்தில் நிலவிய எண்ணமாகும். இப்போது மின்சாரத்தில் இயங்கும் வாகனத்திற்கு பெருகி வரும் வரவேற்பை பார்க்கும் போது நாம் மேலே சொன்ன அதே சட்டம் புழக்கத்திற்கு வரும் என்று நினைக்க தோன்றுகிறது. இதன் காரணமாகவே பத்து வருடத்திற்கு மேலான மௌனத்தை கலைத்து ஜாகுவார் நிறுவனம் பார்முலா E பந்தயங்களில் கலந்து கொண்டு, அதன் மூலம் மின்சாரத்தில் இயங்கும் கார்களுக்கான செல்வாக்கை உயர்த்தி , பின் அதையே முதலீடாக வைத்து மின்சார கார்களை விற்பனைக்கு கொண்டு வரலாம் என்று திட்டமிட்டுள்ளது.
மேலும் வாசிக்க