ஜாகுவார் லேண்ட் ரோவரின் தீவிர விரிவாக்க திட்டம்

published on ஆகஸ்ட் 14, 2015 09:26 am by nabeel

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

ஜாகுவார் லேண்ட் ரோவர், தனது புதிய தொழிற்சாலையை ஸ்லோவாக் குடியரசு நாட்டில் நிறுவ உள்ளது. இதற்காக ஸ்லோவாக் குடியரசு நாட்டுடன் அதிகாரபூர்வமான கடிதம் ஒன்றில் அந்நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இதன்படி அந்நாட்டின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள நித்ரா என்ற நகரில் புதிய தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவ உள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் 3,00,000 வாகனங்களை தயாரிக்கும் ஒரு தொழில்கூடத்தை நிறுவ ஸ்லோவாகியா அரசு திட்டமிட்டுள்ளது.

ஜாகுவார் லேண்ட் ரோவர், மிகவும் எடை குறைந்த வாகனங்கள் மற்றும் அலுமினியம் ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற வாகனங்களை தயாரித்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. வரும் 2018 ஆம் ஆண்டு தயாரிப்பு தரப்பில் இருந்து முதல் கார் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாட்டு பகுதிகளில், தகுந்த இடம் கிடைக்க முழுமையான ஆய்வு செய்த பிறகு, வாகன தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஜாகுவார், ஸ்லோவாகியா நாட்டில் உள்ள வலுவான விநியோக சங்கிலி மற்றும் பொருட்களை வைக்க தகுந்த கட்டமைப்பு ஆகியவை உள்ளதை கண்டு, அங்கு தொழிற்சாலை அமைக்க தகுந்த இடமாக தேர்வு செய்தது. இது குறித்த ஒரு விரிவான செயலாக்க ஆய்வை நடத்திய பிறகு, இந்த ஆண்டின் முடிவில் இறுதி முடிவு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிக்கோ கூறுகையில், “ஜாகுவார் லேண்ட் ரோவருக்கு தகுந்த இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, செயலாக்க ஆய்வு நடத்தப்பட உள்ளதை எண்ணி ஸ்லோவாகியா அரசு மகிழ்ச்சி அடைகிறது. ஸ்லோவாகியாவின் பிரிமியம் ஆட்டோமோட்டிவ் தொழில்துறையை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல கடமைப்பட்டுள்ள நிலையில், அந்த வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் முக்கிய முன்னோக்கிய படியாக இந்த முதலீடு அமையும். எங்கள் நாட்டின் தொழில்துறை விரிவாக்கத்திற்கு இது ஒரு மூலோபாயமாகவும், அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் முழுமைக்கும் பயன் அளிப்பதாகவும் இருக்கும். இனி வரும் மாதங்களில், ஜாகுவார் லேண்ட் ரோவர் உடன் இணைந்து செயலாற்றி, ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட செய்வோம்” என்றார். இந்த நடவடிக்கையின் மூலம் ஜாகுவார் லேண்ட் ரோவரின் உற்பத்தி செயல்பாடுகள், புதிய சர்வதேச பகுதிகளுக்கு பரவி, சர்வதேச அளவிலான வியாபாரத்தில் அதிக போட்டியை ஏற்படுத்தும் அந்நிறுவனத்தின் நோக்கத்தை அறிய முடிகிறது.

ஜாகுவார் லேண்ட் ரோவரின் வடிவமைப்பு, என்ஜினியரிங் மற்றும் தயாரிப்பு திறன்கள் ஆகியவை இங்கிலாந்தை மையமாக கொண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில், 20,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ள அந்நிறுவனம், மொத்தம் 36,000க்கும் மேற்பட்ட பணியாளர் படையை கொண்டுள்ளது. அதே வேளையில், புதிய தயாரிப்பு உருவாக்கம் மற்றும் மூலதன செலவிற்காக, அந்நிறுவனம் 11 பில்லியன் பவுண்டுகளை முதலீடு செய்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள கேஸ்டில் பிரோம்விச், ஹேல்வுட் மற்றும் சோலிஹூல் ஆகிய பகுதிகளில் உள்ள வாகன தயாரிப்பு வசதிகளை கொண்ட ஆலைகளுக்கு, புதிய வாகனங்களான ஜாகுவார் XE, F-PACE, ரேன்ஜ் ரோவர் இவோக் மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகியவற்றின் அறிமுகத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த வாகன தயாரிப்பு நிறுவனம் இங்கிலாந்தில் அதிகளவில் முதலீடு செய்துள்ளது. இதனோடு இங்கிலாந்தில் உள்ள புதிய என்ஜின் தயாரிப்பு சென்டருக்கு 500 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முதலீடு செய்து, 1,400 புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஒயிட்லே, கோவன்ட்ரி ஆகிய பகுதிகளில் உள்ள அட்வான்ஸ்ட் என்ஜினியரிங் அண்டு டிசைன் சென்டரை விரிவுப்படுத்தவும், வார்விக் பல்கலைக் கழகத்தில் உள்ள நேஷ்னல் ஆட்டோமோட்டிவ் இன்னோவேஷன் சென்டரில் முதலீடு செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவரின் இந்த நீடித்த முதலீடு, இங்கிலாந்தின் தொழில்துறை மூலோபாய விரிவாக்கத்திற்கு ஆதரவாக அமைகிறது.

ஜாகுவார் லேண்ட் ரோவர் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ரல்ஃப் ஸ்பித் கூறுகையில், “எங்களின் மீள்தன்மை கொண்ட நீண்டகால வளர்ச்சிக்கு, சர்வதேச அளவில் வியாபாரத்தை விரிவாக்கம் செய்வது அத்தியாவசியமாகிறது. அதே நேரத்தில் அதிக திறன்களை உருவாக்கி, புதிய வாகனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் முதலீடு செய்யவும், இங்கிலாந்தில் அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கவும் உதவுகிறது. நிறுவப்பட்ட பிரிமியம் ஆட்டோமோட்டிவ் தொழில்துறையை கொண்டுள்ள ஸ்லோவாகியா, எங்களுக்கு கிடைத்த கவர்ச்சிகரமான வளர்ச்சி வாய்ப்பு ஆகும். இந்த புதிய தொழிற்சாலை, ஏற்கனவே இங்கிலாந்து, சீனா, இந்தியா மற்றும் கட்டுமான பணியில் உள்ள பிரேசில் ஆகிய இடங்களில் உள்ள ஆலைகளின் வசதிகளை நிறைவு செய்யும் வகையில் அமையும்” என்றார்.

சீனாவில் புதிய கூட்டு முயற்சியை துவக்கி உள்ள ஜாகுவார் லேண்ட் ரோவர், கடந்த 2014 ஆம் ஆண்டு பிரேசிலில் அதன் உள்ளூர் உற்பத்தி தொழிற்சாலையின் கட்டுமான பணியை துவக்கி உள்ளது. இந்த நடவடிக்கைகளின் மூலம் ஜாகுவார் லேண்ட் ரோவரின் வளர்ச்சி சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ள இடங்களில் அதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், நாணய ஏற்றத்தாழ்வுகளில் பாதுக்காக்கப்பட்டு, வியாபாரத்தில் அதிக திறமையான சர்வதேச அளவிலான போட்டியாளராக மாற முடியும்.

முக்கிய குறிப்புகள்:

1. 2015/16-ல் புதிய வாகனங்களின் உருவாக்கம் மற்றும் மூலதன செலவுகளுக்காக, ஜாகுவார் லேண்ட் ரோவர் 3.6 பில்லியன் பவுண்டுகள் செலவு செய்ய உள்ளது. அதே கால அளவில், சோலிஹூல் இருந்து வெளிவரும் ஜாகுவார் F-PACE உட்பட இங்கிலாந்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து 12 புதிய மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வாகனங்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

2. ஜாகுவார் லேண்ட் ரோவருக்கு மூன்று வாகன தயாரிப்பு வசதிகளை கொண்ட ஆலைகளும், ஒரு புதிய என்ஜின் தயாரிப்பு சென்டரும் இங்கிலாந்தில் உள்ளது.

a. ஜாகுவார் XF, ஜாகுவார் XJ மற்றும் ஜாகுவார் F-TYPE ஆகிய வாகனங்களின் பிறப்பிடம், 3,500 பணியாளர்களை கொண்ட கேஸ்டில் பிரோம்விச் ஆகும்.

b. ரேன்ஜ் ரோவர் இவோக் மற்றும் லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகிய வாகனங்களின் பிறப்பிடம் 4,500 பணியாளர்களை கொண்ட ஹேல்வுட் ஆகும்.

c. ரேன்ஜ் ரோவர், ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட், லேண்ட் ரோவர் டிஸ்கவரி, லேண்ட் ரோவர் டிஃப்பேன்டர் மற்றும் ஜாகுவார் XE ஆகிய வாகனங்களின் பிறப்பிடம் 9,000 பணியாளர்களை கொண்டு இயங்கும் சோலிஹூல் ஆகும்.

d. ‘இன்ஜினியம்’ என்ஜின் குடும்பம், ஜாகுவார் XE-ல் 2.0 லிட்டர் டீசல் என்ஜின்கள் ஆகியவற்றின் பிறப்பிடம், 1,400 பணியாளர்களை கொண்ட என்ஜின் தயாரிப்பு சென்டர் ஆகும்.

3. இந்தியாவை பொறுத்த வரை, ஜாகுவார் லேண்ட் ரோவருக்கு 2 தயாரிப்பு வசதி கொண்ட வெளிநாட்டு ஆலைகளும், உள்ளூரிலேயே கூட்டி இணைக்கும் ஆலை ஒன்றும் உள்ளது.

a. சீனாவுடனான கூட்டு முயற்சியில் உருவான செர்ரி ஜாகுவார் லேண்ட் ரோவர் மூலம் ரேன்ஜ் ரோவர் இவோக் மற்றும் டிஸ்கவரி ஸ்போர்ட் ஆகியவை தயாரிக்கப்படுகிறது. இதில் 2,500-க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள்.

b. அந்நிறுவனத்தின் முழுவதும் சொந்தமான முதல் வெளிநாட்டு தயாரிப்பு தொழிற்சாலை, பிரேசிலில் அமைகிறது. வரும் 2016 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இது செயலாற்ற ஆரம்பித்து, டிஸ்கவரி ஸ்போர்ட் தயாரிப்பில் ஈடுபடும். இது ஏறக்குறைய 400 பணியாளர்களை கொண்டிருக்கும்.

c. கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில், ஜாகுவார் லேண்ட் ரோவரின் உள்ளூர் கூட்டி இணைக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. தற்போது அங்கு, ரேன்ஜ் ரோவர் இவோக், ஜாகுவார் XF மற்றும் XJ ஆகிய வாகனங்களை கூட்டி இணைக்கும் பணி நடைபெறுகிறது.

4. ஆஸ்திரியாவை சேர்ந்த மேக்னா ஸ்டியர் உடன் ஒப்பந்த முறையில் தயாரிப்பு ஒப்பந்தத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கையெழுத்திட்டுள்ளது.

5. கடந்த 2014 ஆம் ஆண்டு ஜாகுவார் லேண்ட் ரோவர் 462,678 வாகனங்களை விற்று, 9% உயர்ந்தது. இதில் ஜாகுவார் 81,570 வாகனங்களையும், லேண்ட் ரோவர் 381,108 வாகனங்களையும் விற்றது.

6. 2015/16-ன் முதல் காலாண்டில், ஐரோப்பாவில் ஏறக்குறைய 30,000 வாகனங்களை விற்றுள்ளது. இது 28% அதிகமாகும்.

7. அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 தயாரிப்புகளுக்கான பணிகளில் ஈடுபட ஜாகுவார் லேண்ட் ரோவர் திட்டமிட்டுள்ளது.

8. இங்கிலாந்தின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட் ரோவர், அதன் 80%க்கும் அதிகமான வருவாயை, ஏற்றுமதியின் மூலம் பெறுகிறது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience