டூர் டி ஃபிரான்ஸ் மாநாட்டில் ஜாகுவார் F-பேஸ் டீம் ஸ்கை அணிக்கு சாதக வாகனமாக அறிமுகமாகும்
ஜாகுவார் நிறுவனம், டூர் டி ஃபிரான்ஸ் மாநாட்டில் டீம் ஸ்கை அணிக்கு சாதக வாகனமாக, விரைவில் வெளிவரவுள்ள தனது SUV வகை ஜாகுவார் F-பேஸ் கலந்து கொள்ளபோவதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இந்நிறுவனம் F-பேஸ்-இன் மாறுபட்ட வண்ணக்கலவையை டீம் ஸ்கை அணியின் பிரதான ரைடர் கிறிஸ் ஃப்ரோம்க்கு வழங்கவுள்ளது (புகைபடத்தைப் பார்க்கவும்). தற்போது தன் இறுதி கட்ட சோதனையில் உள்ள ஜாகுவார் F-பேஸ்-ன் பயன்பாட்டு செயல்திறனை 2015 செப்டெம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் பிராங்க்பேர்ட் மோட்டார் ஷோவில் ஜாகுவார் நிறுவனம் பிரகடனப்படுத்தவுள்ளது.
மேலும் டீம் ஸ்கை அணியின் ஆதரவு வாகனமான ஜாகுவார் F-பேஸ், டீம் ஸ்கையின் விளையாட்டு இயக்குனர், டாக்டர், மெக்கானிக் மற்றும் இன்னொரு மூத்த உறுப்பினரும் உட்பட நான்கு பேர் கொண்ட குழுவுடன் டூர் டி ஃபிரான்ஸ்-க்கு பயணிக்க உள்ளது. அதன் விசாலமான பூட் அறை குழுவிற்கு தேவையான பானங்கள், எனர்ஜி ஜெல், ஆடைகள், கருவிகள், பைக் உதிரி பாகங்கள் ஆகியவற்றை எடுத்து செல்லும்.
டீம் ஸ்கை ரைடர் கிறிஸ் ஃப்ரோம் கார் பற்றிய தனது கருத்தை தெரிவிக்கையில், “ஜாகுவார் F-பேஸ் மிகவும் அற்புதமான வாகனம்" எனவும், அதன் “உயர்ந்த செயல்திறன், சாலையில் இயங்கும் நேர்த்தி மற்றும் அதன் செயல்திறன் பரிணாமங்கள் அனைத்தையும் தனது முந்தைய ஜாகுவார் வாகனங்களிடம் இருந்து பெற்றுள்ளது. இது வாகன உலக சந்தையில் ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்கும்," என்றும் கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, "டீம் ஸ்கை அணி திறமையின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. ஜாகுவார் பொறியியல் நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப நூதனங்களைக்கொண்டு வடிவமைத்த பினாரேல்லோ டாக்மா F8 மற்றும் டாக்மா K8-S பைக் சிறந்த செயல்திறனைக்கொடுத்து, கடந்த 12 மாதங்களாக டீம் ஸ்கை அணியை தொடர்ந்து சிறந்த அணியாக பரிமளிக்க உதவுகின்றது. இப்படிப்பட்ட அருமையான தொழில்நுட்பங்களைக் கொண்ட ஜாகுவார் நிறுவனத்தின் F-பேஸ்-ன் செயல்திறன் மிகவும் சிறப்பாகவும் உயர்தரமானதாகவும் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று கூறினார்.