மிக விரைவில் இந்தியாவில் வெளிவரவிருக்கிற சுவாரசியமான கார்களின் தொகுப்பு
published on நவ 16, 2015 12:42 pm by raunak for ரெனால்ட் டஸ்டர் 2016-2019
- 17 Views
- 2 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
கடந்த சில மாதங்களாக, கார் தயாரிப்பாளர்கள் புதிய ஃபேஸ்லிஃப்ட்கள் மற்றும் புதிய மாடல்களை தீபாவளியை முன்னிட்டு வெளியிட்ட வண்ணம் இருந்தனர். இந்த அறிமுகப்படலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது, ஏனெனில், இரண்டு வருடங்களுக்குப் பிறகு, இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ என்னும் மிகப் பெரிய வாகன கண்காட்சி இந்தியாவில் நடக்கவுள்ளது. எனவே, எக்கச்சக்கமான புதிய கார்களின் அறிமுகங்களை, வரும் மாதங்களில் நாம் எதிர்பார்க்கலாம். கடந்த 2014 எக்ஸ்போவில் அறிவிக்கப்பட்ட மாடல்களின் அறிமுகங்கள் இப்போதுதான் முடிவடைந்துள்ள வேளையில், மேலும் ஒரு புதிய தொகுப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது. பல விதமான கார் பிரிவுகளில் இந்த புதிய கார்கள் அறிமுகமாகி, வாகன சந்தையைப் புரட்டிப் போடத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் 2016 ஆட்டோ எக்ஸ்போ, 2016 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதியில் இருந்து 9 ஆம் தேதி வரை, நொய்டாவில் நடைபெறும். முதலில், பிரகதி மைதானில் நடந்து கொண்டிருந்த இந்த கண்காட்சி, கடந்த முறை க்ரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியன் எக்ஸ்போ மார்ட்டில் நடைபெற்றது. இம்முறையும் இந்தியன் எக்ஸ்போ மார்ட்டிலேயே நடைபெறவுள்ளது. அநேக மக்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்று வெற்றி வாகை சூடிய கார்களில் இருந்து புத்தம் புதிய மாடல்கள் வரை பல விதமான மாடல்களை, வாகன தயாரிப்பாளர்கள் இங்கு காட்சிப்படுத்த உள்ளனர். வெகு விரைவில் அறிமுகமாகவுள்ள சுவாரஸ்யமான மற்றும் மிக முக்கியமான மாடல்களின் தொகுப்பை நாம் இங்கே கொடுத்துள்ளோம்.
ஃபோர்ட் முஸ்டாங்க்
முஸ்டாங்க் இந்தியாவிற்கு திடீர் வருகை தந்து, புனேவில் உள்ள ARAI (ஆட்டோமோடிவ் ரிசர்ச் அஸ்சோசியேஷன் ஆஃப் இந்தியா) பகுதியில் நின்று கொண்டிருந்த போது, நமது உளவாளி நிருபர்களின் கண்களில் முதல் முறையாக பட்டுவிட்டது. அநேகமாக ஒப்புதல் சான்றிதழ் பெருவதற்காக அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்று யூகிக்கப்பட்டது. பெரும்பாலும், இந்த கார் அடுத்து வரவுள்ள ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் முதல் முதலாக வெளியிடப்படும். பின்னர், வாகன சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது.
இதையும் படியுங்கள்
ஜீப் பிராண்ட்
ஃபியட் கிறிஸ்லர் ஆட்டோமொபைல் நிறுவனம் தனது அபார்த் பிராண்டை கடந்த 2014 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியது. 595 காம்படிஷன் மாடலுடன் இணைந்து, இந்த வருடம் அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், அபார்த் புண்ட்டோ மாடலும் இவற்றுடன் இணைந்தது. அடுத்து நடைபெறவுள்ள எக்ஸ்போவில், இந்த இத்தாலிய- அமெரிக்க தயாரிப்பாளரின் குடையின் கீழ் ஜீப் பிராண்ட் இந்தியாவிற்கு வரவுள்ளது. இந்தியர்களுக்கு SUV மாடல்களின் மேல் உள்ள மோகத்தின் காரணமாக, சர்வ நிச்சயமாக இந்த பிராண்ட் இந்தியாவில் வெற்றி பெற்று நிலைத்திருக்கும் என்று யூகிக்கப்படுகிறது. மேலும், இந்த வருடத்தில் ஃபியட் நிறுவனத்தின் ரஞ்சன்காவுன் ஆலையை விரிவாக்கம் செய்ய $280 மில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த அமர்க்களமான சூழ்நிலையில், ஜீப் பிராண்ட்டின் புதிய காம்பாக்ட் SUV மாடலின் உலக அறிமுகம், தாரை தப்பட்டைகள் கிழிய ஆடம்பரமாக இந்தியாவில் நடைபெறும் என்று தெரிகிறது.
இதையும் படியுங்கள் : 2016 –ஆம் ஆண்டு ஜீப் இந்தியாவிற்கு வருகிறது – அநேகமாக இது இறுதியான முடிவாக இருக்கும்
டாடா – கைட் ஹாட்ச்/சேடான், நெக்ஸான், ஹெக்ஸா
கடந்த முறையைப் போலவே, இந்த ஆட்டோ எக்ஸ்போவிலும் இந்திய மண்ணில் பிறந்து விண்ணெட்டும் புகழைப் பெற்றுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு மிகுதியாக இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. சென்ற முறை, 2014 எக்ஸ்போவில், டாடா நிறுவனம் செஸ்ட் மற்றும் போல்ட் மாடல்களையும், நெக்ஸான் காம்பாக்ட் SUV –க்கான கான்செப்ட்டையும் அறிமுகம் செய்தது. எனவே, அடுத்து வரும் 2016 எக்ஸ்போவில், கைட் வரிசையில் புதிய மாடல்களையும், நெக்ஸான் SUV மற்றும் ஹெக்ஸா க்ராஸ் ஓவர் மாடல்களில் புதிய வெர்ஷன்களையும் நாம் எதிர்பார்க்கலாம். கைட் மாடலின் வரிசையைப் பற்றி பேசும் போது, இந்த ஹாட்ச் பேக் கார் அடுத்த மாதம், காம்பாக்ட் சேடானின் அறிமுகத்திற்கு முன்பே, வெளிவந்துவிடும் என்று தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், லியோனால் மெஸ்ஸியை தனது சர்வதேச விளம்பர தூதராக அறிவித்த பின், புதிய கைட் ஹாட்ச் காரின் புகைப்படங்களை வெளியிட்டது.
ஃபோர்ட் எண்டேவர்
ஃபோர்ட் இந்தியா நிறுவனம் தனது அனைத்து வித மாடல்களையும் இந்த வருடம் புதுப்பித்துள்ளது. ஃபோர்ட் எண்டேவர் முதல் ஜெனரேஷன் வெளியான கிட்டத்தட்ட ஒரு தசாப்தத்திற்குப் பிறகு, தற்போது இரண்டாவது ஜெனரேஷனை அறிமுகப்படுத்த ஃபோர்ட் நிறுவனம் முழுமையான ஆயத்தத்தில் உள்ளது. புதிய எண்டேவரை ஓட்டிப்பார்க்கும் ஒரு அபூர்வ வாய்ப்பு நமக்கு தாய்லாந்தில் கிடைத்தது. இதற்கு முன்பு வெளியிடப்பட்டு, இடையே நிறுத்தி வைக்கப்பட்ட முதல் ஜெனரேஷன் எண்டேவர் SUV -யை ஒப்பிட்டுப் பார்த்தால், இது முற்றிலும் புதியதாகவும் அருமையானதாகவும் இருக்கிறது. இந்த அமெரிக்க கார் தயாரிப்பாளரின் புதிய டெர்ரைன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் தவிர, புது விதமான இஞ்ஜின்கள் மற்றும் ட்ரான்ஸ்மிஷன்களும், புதிய SUV – யில் பொருத்தப்பட்டு வரும்.
மேலும் வாசிக்க : ஃபோர்ட் இந்தியா 2016 எக்கோ ஸ்போர்ட்டின் விவரங்களை வெளியிட்டது
ரினால்ட் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட்
காம்பாக்ட் க்ராஸ் ஓவர் பிரிவில், ஹுண்டாய் கிரேட்டா மாடல் விற்பனையில் சக்கை போடு போட்டு, முன்னணி வகித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்தப் பிரிவில் முதல் முறையாக இந்தியாவில் அறிமுகமான ரினால்ட் டஸ்டர் தனது பழைய மாடலை தூசி தட்டி, வடிவமைப்பிலும், மெக்கானிக்கலாகவும் பல விதமான மேம்பாடுகளையும், மாற்றங்களையும் செய்து, மீண்டும் தனது முதலிடத்தை நோக்கி பயணம் மேற்கொள்ளத் தயாராகிக் கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன், இந்த புதிய உலகளாவிய ஃபேஸ்லிஃப்ட் பற்றிய விவரம் வெளியானது. எனவே, 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த மாடல் இடம்பெறப் போவது உறுதி. மேம்படுத்தப்பட்ட டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில், இதன் இஞ்ஜின் AMT கியர் பாக்ஸுடன் (ஆட்டோமேட்டட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்) இணைக்கப்பட்டு இதன் மெக்கானிக்கல் அமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது, சமீபத்தில் உளவு பார்க்கும் போது தெரிய வந்துள்ளது.
ஹோண்டா BR-V
அடுத்து அறிமுகமாகவுள்ள BR-V மாடலின் வழியாக, ஹோண்டா நிறுவனமும், கச்சிதமான காம்பாக்ட் க்ராஸ் ஓவர்/ SUV பிரிவிற்குள் நுழையவிருக்கிறது. நாம் இதை ஜப்பானில் ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால், BR-V மாடல்தான் பரிபூரணமாக 3 வரிசை இருக்கைகளைக் கொண்ட முதல் காம்பாக்ட் க்ராஸ் ஓவர்/ SUV காராகும். இஞ்ஜின் ஆப்ஷன்கள் சிட்டி காரில் பொருத்தப்பட்டதைப் போலவே இருக்கும். ஆனால், ட்ரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் புதிதாக BR-V மாடலுக்காகவே பிரெத்தியேகமாக தயாரிக்கப்பட்டதாக இருக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் வரும் இஞ்ஜின்களுடன் 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டிருக்கும். எனினும், பெட்ரோல் மாடலில் மட்டும் புதிய E-CVT இணைக்கப்பட்டு வரும்.
இதையும் படியுங்கள் : ஜப்பானில் இருந்து பிரெத்தியாகமாக வெளிவந்திருக்கும் ஹோண்டா BR-V -இன் படத்தொகுப்பு (பிக்சர் கேலரி)
மாருதி சுசுகி – விட்டாரா, இக்னிஸ் மற்றும் YBA காம்பாக்ட் SUV
இந்தியாவின் மிகப் பெரிய வாகன தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து நாம் புதிய விட்டாரா, இக்னிஸ் மற்றும் YBA காம்பாக்ட் SUV ஆகிய கார்களை, அடுத்து வரும் மாதங்களில் எதிர்பார்க்கலாம். கடந்த வருடத்தில் ஐரோப்பாவில், விட்டாரா காட்சிப்படுத்தப்பட்டது; இக்னிஸ் கார் 2015 டோக்கியோ மோட்டார் ஷோவில் உலகில் முதல் முறையாக வெளியிடப்பட்டது; எனவே, தற்போது நடக்கவுள்ள இந்திய எக்ஸ்போவில் YBA கார் உலகிலேயே முதல் முறையாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும், மாருதியின் பிரெத்தியேக பிரிமியம் நெக்ஸா டீலெர்ஷிப் வழியாக ரீடைல் செய்யப்படும்.
இதையும் படியுங்கள்: 2015 டோக்கியோ மோட்டார் ஷோவில் இருந்து சுடச்சுட வந்த செய்தி: சுசுகி இக்னிஸ் உலகிற்கு முதன் முறையாக அறிமுகம்