ASEAN-NCAP சோதனையின் முடிவில் இன்னோவா கிரிஸ்டாவிற்கு 4 நட்சத்திர அந்தஸ்து
published on பிப்ரவரி 16, 2016 03:01 pm by manish for டொயோட்டா இனோவா கிரிஸ்டா 2016-2020
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் டொயொட்டோ இன்னோவா கிரிஸ்டா MPV, இந்த ஆண்டு இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனினும், இந்தோனேசியா சந்தையில் வலம் வந்து கொண்டிருக்கும் புதிய இன்னோவா மாடலை மூலமாகக் கொண்டு, நமது உளவாளிகள் திரட்டியுள்ள புகைபடங்கள், வீடியோக்கள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, அடுத்து இந்திய சந்தையில் வெளிவரவுள்ள இன்னோவா கிரிஸ்டா MPV காரைப் பற்றிய ஏகப்பட்ட விவரங்களை இன்னோவா ஆர்வலர்களுக்காக நாம் தொகுத்துள்ளோம். அது மட்டுமல்ல, இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைப் பற்றிய ஒரு சிறப்புக் கண்ணோட்டத்தையும் இங்கே கொடுத்துள்ளோம். இந்தோனேசியாவில் அறிமுகமாகியுள்ள அடுத்த தலைமுறை டொயோடா இன்னோவா மாடல், சமீபத்தில் ASEAN-NCAP விபத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. முடிவில், இந்த கார் 16 மதிப்பெண்ணுக்கு 14.10 மதிப்பெண் வாங்கியது. மேலும், பாதுகாப்பு அம்சங்களுக்கான 5 நட்சத்திர மதிப்பீட்டில், 4 நட்சத்திரங்களை வாங்கியது. ஏனெனில், 5 நட்சத்திர மதிப்பீடு பெறுவதற்கு கட்டாயமாக்கப்பட்டிருக்கும் எலெக்ட்ரானிக் ஸ்டபிலிட்டி கண்ட்ரோல் (ESC) அமைப்பு, இந்த காரில் இடம்பெறவில்லை.
அடுத்த தலைமுறை டொயோடா ஃபார்ச்யூனர் காரைத் தயாரிக்க உபயோகப்படுத்தப்பட்ட அதே தொழில்நுட்பத்தையே டொயோடா இன்னோவா கிரிஸ்டாவைத் தயாரிக்கவும் இந்நிறுவனம் உபயோகப்படுத்தியுள்ளது. புத்தம் புதிய 2.4 லிட்டர் 2GD FTV 4 சிலிண்டர் டீசல் இஞ்ஜின் கொண்டு, இந்தப் புதிய MPV கார் இயக்கப்படும். இந்த இஞ்ஜின், 149 PS என்ற அளவு சக்தி மற்றும் 342 Nm என்ற அளவு அதிகபட்ச டார்க்கையும் உற்பத்தி செய்யவல்லதாக இருக்கிறது. டீசல் இஞ்ஜினுடன் 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கட்டாயமாக இணைக்கப்பட்டு வரும். அதே நேரம் புத்தம் புதிய 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் அமைப்பு ஆப்ஷனாகத் தரப்படும். மேலும், கூடுதல் பாதுகாப்பு அம்சங்களான ABS, EBD, 7 காற்றுப் பைகள் மற்றும் ப்ரேக் அசிஸ்ட் அமைப்பு ஆகியவை டொயோடா இன்னோவா கிரிஸ்டாவின் டாப் எண்ட் மாடலில் இடம் பெறுகின்றன. அனைத்து வேரியண்ட்களிலும் முன்புறத்தில் இரட்டை காற்றுப் பைகள் வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க : டொயோட்டா இனோவா கிரைஸ்ட்டாவில், நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை!