• English
  • Login / Register

Hyundai Venue இப்போது ரூ. 10 லட்சத்தில் புதிய எக்ஸிகியூட்டிவ் வேரியன்ட்டை பெறுகிறது

published on மார்ச் 05, 2024 07:06 pm by rohit for ஹூண்டாய் வேணு

  • 31 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இது 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் கனெக்டட் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் மட்டுமே வழங்கப்படுகிறது.

Hyundai Venue Executive variant launched

  • வென்யூ எஸ்யூவி -யின் மிட்-ஸ்பெக் S மற்றும் S(O) வேரியன்ட்களுக்கு இடையே புதிய எக்ஸிகியூட்டிவ் வேரியன்ட்.

  • S(O) வேரியன்ட் போலவே தோற்றமளிக்கிறது ஆனால் LED ஹெட்லைட்கள் மற்றும் கனெக்டட் LED டெயில்லைட்கள் கொடுக்கப்படவில்லை.

  • பின்புற இருக்கைகள் மற்றும் அட்ஜஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்களுக்கு 2-ஸ்டெப் ரிக்ளனிங் ஃபங்ஷனை பெறுகிறது.

  • 8 இன்ச் டச் ஸ்கிரீன் பின்புற வென்ட்களுடன் கூடிய மேனுவல் ஏசி 6 ஏர்பேக்குகள் மற்றும் TPMS ஆகியவை உள்ளன.

  • S(O) வேரியன்டில் முன்பக்கத்தில் இருப்பவர்களுக்கான சன்ரூஃப் மற்றும் கேபின் லைட்ஸ் ஆகியவை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன

  • வென்யூ S(O) MT -யின் விலை இப்போது ரூ.10.75 லட்சமாக உள்ளது. S(O) DCT -யின் விலை ரூ.11.86 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது.

ஹூண்டாய் வென்யூ டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்ன் ரூ.10 லட்சம் விலையில் புதிய எக்ஸிகியூட்டிவ் வேரியன்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலமாக இப்போது குறைவான விலையில் கிடைக்கிறது. இந்த வேரியன்ட்டின் அறிமுகத்திற்கு முன் வென்யூவின் டர்போ வேரியன்ட்கள் மிட்-ஸ்பெக் S(O) வேரியன்ட் விலை ரூ.10.40 லட்சமாக இருந்தது. 

வென்யூ எக்ஸிகியூட்டிவ் வேரியன்ட்டின் கூடுதல் விவரங்கள்

வெளிப்புறத்தில் வென்யூ எக்ஸிகியூட்டிவ் நெக்ஸ்ட்-இன்-லைன் S(O) வேரியன்ட்டை போலவே தெரிகிறது. பெரிய வீல் கவர்கள், ரூஃப் ரெயில்ஸ் மற்றும் டெயில்கேட்டில் புதிய 'எக்ஸிகியூட்டிவ்' பேட்ஜ் கொண்ட 16-இன்ச் சக்கரங்கள் உள்ளன. S(O) வேரியன்ட்டில் இருந்த கனெக்டட் LED டெயில்லைட்கள் இதில் இல்லை. வென்யூ எக்ஸிகியூட்டிவ் ஆட்டோ-ஹாலஜன் ஹெட்லைட்களுடன் வருகிறது அதே சமயம் S(O) LED ப்ரொஜெக்டர் யூனிட்களுடன் LED DRLகள் மற்றும் கார்னரிங் விளக்குகளுடன் வருகிறது.

Hyundai Venue rear seats

வென்யூ எக்ஸிகியூட்டிவ் உட்புற ஹைலைட்ஸ்களில் அனைத்து பயணிகளுக்கும் அட்ஜஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட்கள் 60:40 ஸ்பிளிட்-ஃபோல்டு பின்புற இருக்கைகள், ஸ்டோரேஜுடன் கூடிய சென்ட்ரல் மைய ஆர்ம்ரெஸ்ட் மற்றும் பின்புற இருக்கைகளுக்கு 2-ஸ்டெப் ரிக்ளைனிங் ஃபங்ஷன் ஆகியவை அடங்கும். இருப்பினும் S(O) வேரியன்டில் கிடைக்கும் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வகையிலான டிரைவர் இருக்கையை வென்யூ எக்ஸிகியூட்டிவ் வேரியன்ட் பெறவில்லை. பின்புற பார்க்கிங் கேமராவும் கொடுக்கப்படவில்லை

போர்டில் உள்ள வசதிகள்

Hyundai Venue 8-inch touchscreen

ஹூண்டாய் வென்யூ எக்ஸிகியூட்டிவ்வை வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்ட் உடன் கூடிய 8-இன்ச் டச்ஸ்கிரீன், செமி-டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, ஸ்டீயரிங்-மவுண்டட் கண்ட்ரோல்கள், க்ரூஸ் கன்ட்ரோல்கள் பின்புற வென்ட்களுடன் கூடிய மேனுவல் ஏசி மற்றும் வாஷருடன் பின்புற வைப்பர் ஆகியவை கொடுக்கப்படவுள்ளன.

பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), மற்றும் அனைத்து பயணிகளுக்கும் 3-பாயின்ட் சீட்பெல்ட்கள் உள்ளன.

மேலும் படிக்க: ஹூண்டாய் கிரெட்டா N லைன் வேரியன்ட் வாரியான பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன

S(O) வேரியன்டில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன 

ஹூண்டாய் இப்போது S(O) டர்போ வேரியன்ட்களை மேலும் புதிய இரண்டு வசதிகளுடன் வழங்குகிறது. முன்பக்க பயணிகளுக்கு சன்ரூஃப் மற்றும் கேபின் விளக்குகள். இதனால் S(O) MT இப்போது ரூ. 10.75 லட்சமாகவும் S(O) DCT -ன் விலை ரூ.11.86 லட்சமாகவும் உள்ளது.

வென்யூ டர்போ-பெட்ரோல் விவரங்கள்

Hyundai Venue 1-litre turbo-petrol engine

புதிய வென்யூ எக்ஸிகியூட்டிவ் வேரியன்ட் 1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (120 PS/172 Nm) 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் மட்டுமே வழங்கப்படுகிறது. S(O) வேரியன்ட் ஒப்பிடுகையில் 7-ஸ்பீடு DCT (டூயல்-கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்) ஆப்ஷனையும் பெறுகிறது.

ஹூண்டாய் சப்காம்பாக்ட் எஸ்யூவி மற்ற இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது: 1.2-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் (N/A) பெட்ரோல் இன்ஜின் (83 PS/114 Nm) மற்றும் 1.5-லிட்டர் டீசல் யூனிட் (116 PS/250 Nm). முந்தையது 5-ஸ்பீடு MT உடன் கனெக்ட் உள்ளது பிந்தையது 6-ஸ்பீட்ய் MT உடன் வருகிறது.

மேலும் பார்க்க: Hyundai Ioniq 5 Facelifted Unveiled: 7 முக்கிய மாற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன

விலை மற்றும் போட்டியாளர்கள்

ஹூண்டாய் வென்யூ -வின் விலை ரூ.7.94 லட்சம் முதல் ரூ.13.48 லட்சம் வரை உள்ளது. இது டாடா நெக்ஸான், கியா சோனெட், மாருதி பிரெஸ்ஸா, மஹிந்திரா XUV300, ரெனால்ட் கைகர், நிஸான் மேக்னைட் மற்றும் இந்த மாருதி ஃப்ரான்க்ஸ் கிராஸ் ஓவர் ஆகிய கார்களுடன் போட்டியிடும்.

அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) -க்கான விலை ஆகும்

மேலும் படிக்க: ஹூண்டாய் வென்யூ ஆன் ரோடு விலை

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Hyundai வேணு

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience