ஹயுண்டாய் நிறுவனம் இதுவரை இல்லாத அளவு அக்டோபர் மாத விற்பனையை பதிவு செய்துள்ளது; க்ரேடா தொடர்ந்து வேகமான விற்பனை
published on நவ 03, 2015 12:31 pm by raunak for ஹூண்டாய் கிரெட்டா 2015-2020
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
மேலும் ஹயுண்டாய் இதுவரை இல்லாத அளவு மொத்தம் 14,079 க்ரேண்ட் i10 வாகனங்களை கடந்த மாதம் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் நுழைந்த பிறகு முன் எப்போதும் இல்லாத அளவு கடந்த மாதத்தில் தான் மிக அதிகப்படியாக 47, 015 வாகனங்களை இந்திய சந்தையில் விற்று புதிய சாதனை புரிந்துள்ளது ஹயுண்டாய் நிறுவனம். இதைத் தவிர மேலும் 14, 777 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ள ஹயுண்டாய் நிறுவனம் மொத்தமாக 61, 792 வாகனங்களை போன மாதம் விற்பனை செய்துள்ளது.
அக்டோபர் மாத அமோக விற்பனையை பற்றி ஹயுண்டாய் நிறுவனத்தின் மூத்த துணை தலைவர் - விற்பனை மற்றும் மார்கெடிங் பிரிவு, திரு. ராகேஷ் ஸ்ரீவாத்சவா, “ இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு 47, 015 வாகனங்கள் கடந்த மாதம் விற்பனை ஆகி உள்ளது மட்டுமின்றி எங்களது i10 கார்களும் இதுவரை இல்லாத மிக அதிகப்படியான 14,079 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது . மேலும் சமீபத்திய ப்ரீமியம் ப்ரேன்ட் வாகனங்களும் ( க்ரேடா மற்றும் எளிட் i20 / ஆக்டிவ் ) 18 , 244 விற்பனை ஆகியுள்ளன. வாடிக்கையாளர்கள் புக் செய்துவிட்டு காத்திருக்கும் காலத்தை குறைக்கும் பொருட்டும், வரும் மாதங்களில் வாடிக்கையாளர் தேவைகள் பண்டிகை காலத்தை முன்னிட்டு கூடும் என்பதாலும் தயாரிப்பு செயல்பாடுகளை ஹயுண்டாய் நிறுவனம் முடுக்கிவிட்டுள்ளது " என்று கூறினார்.
அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து பார்த்தால் போன மாதத்தில்தான் க்ரேண்ட் i10 அதிகப்படியான விற்பனையை எட்டியுள்ளது. எளிட் i20 மற்றும் க்ரேடா கார்களும் கூட தொடர்ந்து நல்ல முறையில் விற்பனையாகி வருகின்றன. கடந்த ஜூலை மாதத்தில் காம்பேக்ட் SUV பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்ட க்ரேடா கார்கள் மாதம் 7000 வாகனங்கள் விற்பனை ஆகி வருகின்றன என்பது. குறிப்பிடத்தக்கது. அதே சமயம் எளிட் i20/ ஆக்டிவ் கார்கள் மாதம் 1000 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகின்றன. மேலும் சமீபத்தில் தான் க்ரேடா மற்றும் i20 கார்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தவற விடாதீர்கள் : #2015 ப்ரேன்க்பர்ட் மோட்டார் ஷோ: மேம்படுத்தப்பட்ட சாண்டா - பி காட்சிக்கு வைப்பு
மேலும் படியுங்கள் : ஹயுண்டாய் க்ரேடா