அசுரகதியில் பெருகி வரும் தேவையை சமாளிக்க ஹயுண்டாய் நிறுவ னம் க்ரேடா உற்பத்தியை மாதத்திற்கு 7000 ஆக உயர்த்தி உள்ளது
raunak ஆல் செப் 03, 2015 09:38 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்: ஹயுண்டாய் நிறுவனம் தனது சமீபத்திய வெளியீடான கச்சிதமான SUV பிரிவை சேர்ந்த க்ரேடா கார்கள் பெற்றுள்ள அபார வெற்றியை தக்கவைத்துக் கொள்ள பல முடிவுகளை எடுத்து கடுமையாக உழைத்து வருகிறது. அறிமுகமாவதற்கு முன்னரே 15,000 வாகனங்கள் புக் ஆகிவிட்டது என்று சொல்லி இருந்த ஹயுண்டாய் தற்போது 40,000 வாகனங்களுக்கான முன்பதிவை பெற்றுள்ளது. மேலும் ஹயுண்டாய் இந்த திணறடிக்கும் உள்ளூர் தேவையை சமாளிக்க தங்களது எற்றுமதி திட்டங்களை தள்ளிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
HMIL ன் (ஹயுண்டாய் மோட்டார் இந்தியா லிமிடட் ) விற்பனை மற்றும் மார்கெடிங் பிரிவின் மூத்த துணை தலைவர் திரு. ராகேஷ் ஸ்ரீவாத்சவா PTI செய்தி நிறுவனத்திற்கு பின்வரும் தகவல்களை தெரிவித்துள்ளார். “ நாங்கள் க்ரேடா வை அறிமுகப்படுத்திய போது ஜூலை - டிசம்பர் வரையிலான காலத்தில் மாதம் 6,000 வாகனங்கள் தயாரிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். ஆனால் தற்போது க்ரேடாவிற்கு கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பை பார்த்தபின் எங்களது உற்பத்தியை முடுக்கி விட்டு செப்டம்பர் முதல் கூடுதலாக 1,000 க்ரேடாவை தயாரிக்க முடிவு செய்துள்ளோம். இதற்காக எங்கள் சப்ளையர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
“ டிசம்பர் வரையில் உற்பத்தியாக இருக்கும் வாகனங்கள் ஏற்கனவே விற்று விட்டன. அதுமட்டுமின்றி க்ரேடா வாகனத்தை புக் செய்துவிட்டு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க கூடாது என்பதற்காக உற்பத்தியை முடுக்கி விட்டுள்ளோம். “ என்றும் அவர் கூறினார்.
தவற விடாதீர்கள் : ஹயுண்டாய் க்ரேடா vs டஸ்டர் vs ஈகோஸ்போர்ட் vs எஸ் - கிராஸ் vs டேரானோ vs ஸ்டார்ம் vs ஸ்கார்பியோ
இந்த மிகவும் உற்சாகமூட்டும் செய்திக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் வகையில் உள்நாட்டு சந்தையில் ஹயுண்டாய் இந்தியா நிறுவனம் 40,505 வாகனங்களை கடந்த மாதம் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இது கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனையான 33,750 வாகனத்துடன் ஒப்பிடும் போது 20.01 சதவிகிதம் அதிகமாகும். க்ரேடா வின் விற்பனையை பற்றி மட்டும் பேசுகையில் இந்த கொரியன் கார் தயாரிப்பாளர்கள் ஜூலை மாதத்தில் 6,783 க்ரேடா வாகனங்களையும் ஆகஸ்ட் மாதத்தில் 7,473 வாகனங்களையும் விற்பனை செய்துள்ளது.