• English
  • Login / Register

ஹயுண்டாய் நிறுவனம் க்ரேடா எஸ்யூவி ரக கார்களை 8.59 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

published on ஜூலை 21, 2015 03:46 pm by akshit for ஹூண்டாய் கிரெட்டா 2015-2020

  • 11 Views
  • 8 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

டெல்லி: மற்ற எஸ்யூவி வகை கார்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் ஹயுண்டாய் நிறுவனத்தின் க்ரேடா கார்கள் இந்திய சந்தையில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கொரியன் கார் நிறுவனத்தின் புதிய அறிமுகமான இந்த க்ரேடா கார்கள் இதே எஸ்யூவி ரக கார்களான ரெனால் டஸ்டர், நிஸ்ஸான் டேரானோ, போர்ட் ஈகோஸ்போர்ட் மற்றும் விரவில்ன்விற்பனைக்கு வர உள்ள மாருதி எஸ் - கிராஸ் போன்ற கார்களுடன் போட்டியிட தயாராக உள்ளது.

பல கோணங்களில் இந்த க்ரேடா கார்களின் தோற்றம் இதற்கு முந்தைய, இதை விட கூடிதல் சிறப்பம்சங்களும், கூடுதல் விலையும் கொண்ட ஹுண்டாய் ஸாண்டா Fe கார்களை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. அதுவே இந்த க்ரேடா கார்களின் தோற்றத்திற்கு கூடுதல் பொலிவை தருகிறது எனலாம். முழுமையான குரோம் பூச்சு கொண்ட மூன்றடுக்கு ரேடியேடர் கிரில், ப்ரொஜெக்டர் மற்றும் டிஆர்எல்களை (அதிக விலை மாடல்களில் மட்டும்) உள்ளடக்கிய கழுகு கண்களின் சாயல் கொண்ட முகப்பு விளக்குகள் மற்றும் கூர்மையான ஒளியை பாய்ச்சிடும் செங்குத்தாக அமைக்கப்பெற்றுள்ள பாக் (FOG) விளக்குகள் என இவை யாவும் சேர்ந்து க்ரேடா கார்களின் முகப்பு தோற்றத்தை மிகவும் வசீகரமாகவும் எடுப்பாகவும் காட்டுகிறது என்று உறுதியாக சொல்லலாம். மேலும் க்ரேட கார்களின் டாப் எண்டு மாடல்களில் 17 இன்ச் அகலம் கொண்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் காரின் பக்கவாட்டு தோற்றமும் மேம்படுத்தப்பட்டு கட்டுறுதி மிக்கதாகவும். கம்பீரமாகவும் தோற்றமளிக்கிறது. இதைத்தவிர பிளாஸ்டிக் க்லாடிங், நேர்த்தியான பின்புற விளக்குகள் க்ரேடா கார்களுக்கு அழகுக்கு அழகு சேர்கிறது என்று சொன்னால் மிகையில்லை.

காரின் உட்புற தோற்றம் ஹயுண்டாய் நிறுவனத்தின் மிக பிரபலமான எளிட் I 20 யை ஒத்ததாகவே அமைக்கப்பட்டுள்ளது. காரின் மத்திய பகுதியில் இரண்டு இன்போடைன்மென்ட் சிஸ்டம்கள் பொருத்தப்படுள்ளது. இதைத்தவிர இப்போது அறிமுகப்படுத்தப்படும் எல்லா ஹுண்டாய் கார்களைப் போலவே க்ரேடாவிலும் 1 GB இன்பில்ட் மெமரி கொண்ட மியூசிக் சிஸ்டமும் பொருத்தப்படுள்ளது. இது மட்டுமா? ஆறு காற்று பைகள் (ஏர் பேக்), பின்புறம் வாகனத்தை எடுக்கும்போது பார்க்க வசதியாக ரிவெர்ஸ் கேமரா மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மின்னணு ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகியவையும் க்ரேடாவின் விசேஷ சிறப்பம்சங்கள் ஆகும். மற்ற யெஸ்யூவி கார்களை போல் நான்கு மீட்டருக்கும் குறைவான உட்புற இட வசதி கொடுக்கப்பட்டு இடுக்கமான ஒரு சூழலை உருவாக்காமல் க்ரேடா கார்களில் உட்புற இட வசதி மிக நேர்த்தியாகவும் தாராளமாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

எஞ்சின்கள் அடிப்டையில் பார்த்தால் க்ரேடா மூன்று விதமான இஞ்சின் ஆப்ஷன்ஸ் கொண்டு வெளியிடப்பட்டுள்ளது. 123 பி எஸ் - 1 .6 லிட்டர் பெட்ரோல், 90 பி எஸ் - 1 .4 லிட்டர் டீசல் மற்றும் 128 பி எஸ் -1.6 லிட்டர்.    

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Hyundai கிரெட்டா 2015-2020

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience