• English
    • Login / Register

    அனைவரையும் தன்வசப்படுத்தும் ஹுண்டாய் கிரேட்டாவின் விளம்பரப்படம் வெளியிடப்பட்டது

    ஹூண்டாய் கிரெட்டா 2015-2020 க்காக ஜூலை 29, 2015 01:26 pm அன்று saad ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 13 Views
    • 5 கருத்துகள்
    • ஒரு கருத்தை எழுதுக

    பலநாள் காத்திருப்பிற்குப் பின்னர், அனைவரும் எதிர்பார்த்த ஹுண்டாயின் கிரேட்டா க்ராஸ் ஓவர் ஜூலை 21 அன்று வெளியிடப்பட்டது. இப்போது ட்விட்டரில் ‘தி பெர்பெக்ட் SUV’ என்ற ஹாஷ் டாக்கில் இந்த கொரியன் SUV பிரபலமாகி, 15,000க்கும் மேற்பட்ட அலுவல் முறைசாரா (அன்அஃப்பிஷியல்) முன்பதிவு கார் வெளியிடுவதற்கு முன்னரே நடந்ததாக ஹுண்டாய் கார் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். புதுப்பிக்கப்பட்ட  (அப்டேடெட்) தகவல்களையும், அதன் விலைப் பட்டியலையும் ஹுண்டாய் கிரேட்டாவின் அறிமுகச் செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.  

    ஹுண்டாயின் கச்சிதமான கிரேட்டா SUV இப்போது இந்தியாவில் அனைவராலும் பேசப்படும் காராக உள்ளது. டஸ்டர் மற்றும் எக்கோ ஸ்போர்ட்டின் தீவிரமான போட்டியாளரான கிரேட்டா அறிமுகப்படுத்துவதற்கு முன் இறுதிக் கட்ட வேலைகள் ஹுண்டாய்யின் இந்தியத் தலைமையகத்தில் தீவிரமாக நடந்து கொண்டிருந்தபோது, அதனைக் கொண்டாடும் விதத்தில் புத்தம் புதிய TVC விளம்பரப்படத்தை முன் வெளியீடாக வெளியிட்டது. இந்த விளம்பர டீசர் நாடு முழுவதிலும் பல தொலைக்காட்சிகளிலும், வலைதளங்களிலும் ஒளிபரப்பப்பட்டு கார் வாங்குபவர்களைத் தன் வசம் திருப்பிக் கொண்டிருக்கிறது.

    கிரேடாவின் தொலைக்காட்சி விளம்பரப்படம் முடியும் தருணத்தில், ஹுண்டாய் சூசகமாக அதிகாரபூர்வ பதிவுகளை டீலர்களிடம் செய்யலாம் என்று கூறுகிறது. தற்போது வந்த தகவலின்படி, இந்த விளம்பரப்படம் வெளியிடுவதற்கு முன்பே டீலர்கள் ரூ. 50,000 பெற்றுக்கொண்டு முன்பதிவுகளைத் தொடங்கிவிட்டனர் என்று தெரிகிறது.

    ஹுண்டாய் கிரேட்டவானது, 21 ஜூலை முதல் அனைவரும் வாங்கும்படி சந்தைக்கு வந்து விட்டது. இதன் விலையானது, ரூ. 8 லட்சத்திலிருந்து 12 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்த்தாலும், ரூ. 8.59 லட்சத்திலிருந்து ரூ. 13.9 லட்சம் வரை இருக்கிறது.

    இந்தக் காரில் உள்ள முக்கியமான அம்சங்களை வாசகர்களுக்காக கீழே கொடுத்துள்ளோம்:

    • காலையிலும் பளீரென்று எரியும் LED பல்புகளைக் கொண்டு  பிரதிபலிக்கும் முகப்பு விளக்குகள் (ஹெட் லாம்ப்) பொருத்தப்பட்டுள்ளன.
    • வைரம் போல பட்டை தீட்டப்பட்ட அலாய் சக்கரங்கள் மேலும் மெருகு சேர்க்கின்றன.
    • காரின் ஏ-பில்லர் தவிர்த்து முழுமையான எழுச்சி மிக்க பாடி கிளாடிங்க், பின்புற விளக்குகள் வரை நீட்டிக்கப்பட்டு கவர்ச்சிகரமாக உள்ளது.
    • ஹுண்டாய்யின் பாய்ம சிற்பம் 2.0 (பிலூய்டிக் ஸ்கல்ப்டர்) வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    • 4270 mm நீளமாக உள்ள இந்த ஹுண்டாய் கிரேட்டா கார் எக்கோ ஸ்போர்ட்டை விட நீளமானதாகவும், டஸ்டரைவிட சிறியதாகவும் உள்ளது.
    • சக்கர அகலம் 2590mm- ஆக உள்ளது. மேலும், தரைஇளக்கமானது (கிரவுண்ட் க்ளியரன்ஸ்) சீனாவில் உள்ள ix25 போல உள்ளது.
    • தொடுதிரை இன்ஃபோடைன்மெண்ட் அமைப்பில் பயணமுறை வழிகாட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
    • பின்புறம் காற்றுப்பதன சிறுதுளைகளும் (ஏர் கண்டிஷன் வெண்ட்) மற்றும் பலவேறு பொருட்களை வைத்துக் கொள்ள இட வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • அனைவரும் எதிர்பார்த்த விதமாக 1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இயந்திரமும், 1.6 லிட்டர் பெட்ரோல் இயந்திரமும் ஹுண்டாயின் வெர்னா செடானைப் போல அமைக்கப்பட்டுள்ளது.
    • மேலும், இதில் உள்ள 5 வேக மற்றும் 6 வேக ஆளியக்க ஓடும் திறன், 6 வேக ஆட்டோ பாக்ஸும் எதிர்பார்த்ததே.

    was this article helpful ?

    Write your Comment on Hyundai கிரெட்டா 2015-2020

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience