2,23,578 கார்களை திரும்ப பெற்றுக்கொள்ள மறுஅழைப்பு (ரீகால்) விடுத்தது ஹோண்டா: உங்கள் மாடலை சோதித்து கொள்ளுங்கள்!
modified on செப் 21, 2015 04:31 pm by nabeel
- 15 Views
- ஒரு கருத ்தை எழுதுக
ஜெய்ப்பூர்: ஹோண்டா இந்தியா நிறுவனத்தின் சில கார்களின் ஏர்பேக் ஊதிகளில் (இன்ஃபிளாடர்ஸ்) ஒரு குறைபாட்டை, அந்நிறுவனம் கண்டறிந்துள்ளதாக தெரிகிறது. இதன் முந்தைய அடிப்படையில், ஜப்பானைச் சேர்ந்த அந்நிறுவனம் தனது 2,23,578 கார்களில் உள்ள அந்த ஏர்பேக் ஊதிகளை மாற்றி தருவதற்கான தன்னார்வ அழைப்பை விடுத்துள்ளது. எனவே ஹோண்டா கார்களின் உரிமையாளர்கள் ஹோண்டா இந்தியாவின் இணையதளமான www.hondacarindia.com உள்ளே சென்று தங்களிடம் உள்ள மாடலின் 17 இலக்க வாகன அடையாள எண்ணை (வெஹிக்கிள் ஐடென்டிஃபிக்கேஷன் நம்பர் – VIN), அந்த இணையதள பக்கத்தில் அளித்து பரிசோதித்துக் கொள்ளலாம்.
2007-2012 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஹோண்டா சிட்டியும், 2009-2011 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஹோண்டா ஜாஸ் காரும், 2003-2012 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஹோண்டா சிவிக் காரும், 2003-2012 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஹோண்டா CR-V காரும் தயாரிக்கப்பட்டது. மேற்கூறிய அனைத்து மாடல்களும் மறுஅழைப்பு விடுக்கப்பட்டதில் சேர்ந்தவை. இந்த பிரச்சனையில் அதிகளவில் ஹோண்டா சிட்டியின் 1,40,508 கார்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறைந்த அளவில் CR-V மாடலில் 13,073 கார்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் ஜாஸ் மற்றும் சிவிக் ஆகியவற்றில் முறையே 15,707 மற்றும் 54,290 கார்கள் பாதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் ஆகும். மேலே குறிப்பிட்டுள்ள ஹோண்டா ஜாஸின் சில கார்களில், ஓட்டுநர் பகுதியில் உள்ள ஊதிகளை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது. மறுஅழைப்பு விடுக்கப்பட்ட மற்ற மாடல்களிலும், ஓட்டுநர் பகுதி மற்றும் பயணிகள் பகுதி ஏர்பேக் ஊதிகளை மாற்றி அமைக்க வேண்டியுள்ளது.
அக்டோபர் 12 ஆம் தேதியில் இருந்து மறுஅழைப்பு பணிகள் துவக்கப்பட்டு, பல கட்டங்களாக நடைபெறும். இந்த காலக் கட்டத்தில் வாடிக்கையாளர்களை நேரடியாக சந்திக்க போவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மே மாதத்தில், ஹோண்டா நிறுவனம் நடத்திய இதற்கு முந்தைய மறுஅழைப்பு நிகழ்ச்சியில், கடந்த 2004 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட CR-V மற்றும் 2003-2007 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட அக்கார்டு கார்களின் பயணிகள் பகுதியில் உள்ள ஏர்பேக் ஊதிகளை மாற்றி அமைப்பதற்காக நடத்தப்பட்டது.
உங்கள் மாடல் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
மாடல் | தயாரித்த ஆண்டு | ஓட்டுநர் பகுதி ஊதிகள் பாதிப்பு | பயணிகள் பகுதி ஊதிகள் பாதிப்பு | பாதிக்கப்பட்ட எண்ணிக்கை |
சிட்டி | 2007-2012 | 1,40,508 | 2,646 | 1,40,508 |
சிவிக் | 2003-2012 | 54,288 | 40,083 | 54,290 |
ஜாஸ் | 2009-2011 | 15,707 | NA | 15,707 |
CR-V | 2004-2011 | 8,330 | 11,495 | 13,073 |
மொத்தம் | 2,23,578 |
0 out of 0 found this helpful