BRV –யின் உட்புற அலங்கரிப்புக்களுடன் வரும் மேம்படுத்தப்பட்ட ஹோண்டா மொபிலியோ: இந்தோனேஷியாவில் அறிமுகம்

published on ஜனவரி 20, 2016 05:20 pm by raunak for ஹோண்டா மொபிலியோ

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஹோண்டாவின் புதிய மேம்படுத்தப்பட்ட மொபிலியோ, இந்த வருடம் இந்தியாவில் அறிமுகமாவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது!

ஹோண்டா நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட மொபிலியோ காரை இந்தோனேசிய வாகன சந்தையில் அறிமுகப்படுத்தியது. இரண்டு வருடங்களுக்கு முன், இந்த MPV முதல் முறையாக இந்தோனேசிய சந்தையில் அறிமுகமானதை நாம் இங்கு நினைவு கூறவேண்டும். தற்போதைய மொபிலியோ மாடலின் விற்பனை எண்ணிக்கை குறைந்து வருவதால், ஹோண்டா கார் இந்தியா நிறுவனம் வெகு விரைவில் புதிய மேம்படுத்தப்பட்ட மொபிலியோவை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 2016 மொபிலியோ காரின் வெளிப்புறத் தோற்றத்தில் ஒரு சில மாற்றங்களை மட்டுமே நம்மால் பார்க்க முடியும். ஆனால் அதே நேரம், அதன் கேபினுக்குள் உள்ள புதிய டாஷ்போர்டு உட்புறத் தோற்றத்தின் அழகை மெருகூட்டுகிறது. தற்போது சந்தையில் உள்ள மொபிலியோவில் பொருத்தப்பட்டுள்ள டாஷ்போர்டு, பிரியோ மாடலில் உள்ளதைப் போல இருப்பதால், பலவித எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தன. எனவே, ஹோண்டா இந்த டாஷ்போர்டை ஒட்டுமொத்தமாக மாற்றிவிட்டது. 


புதிய அலாய் சக்கரங்கள் மற்றும் பளீரென்று கண்ணுக்குப் புலப்படாத மாற்றங்களைத் தவிர, வெளியே இருந்து பார்க்கும் போது, புதிய மேம்படுத்தப்பட்ட மொபிலியோ மாடலில் பெரிய மாறுதல்களை நம்மால் கண்டு பிடிக்க முடியாது. எனினும், புதிய பாகங்கள் மற்றும் குரோம் வேலைப்பாடுகளை மேம்படுத்தப்பட்ட மொபிலியோ காரில் ஹோண்டா நிறுவனம் சேர்த்துள்ளதை நாம் பாராட்ட வேண்டும். ஒரு சில மாற்றங்களை மட்டுமே கொண்ட வெளிப்புறத்தை விட்டு, ஏராளமான மாற்றங்களை உள்ளடக்கியுள்ள கேபின் பகுதியைப் பற்றி பார்ப்போம். நம் கண்ணில் முதலில் தென்படும் புதிய டாஷ்போர்டில் இருந்து ஆரம்பிப்போம். புதிய மொபிலியோவில் உள்ள டாஷ்போர்டின் மாடல், அடுத்து வெளிவரவுள்ள ஹோண்டா BR-V காம்பாக்ட் SUV காரில் பொருத்தப்பட்டுள்ளதைப் போலவே இருக்கிறது. உண்மையில், BR-V மாடலில் உள்ள டாஷ்போர்டும் புதிதாக உருவாக்கப்பட்டது இல்லை. அது, ஜாஸ் மற்றும் சிட்டி மாடல்களில் இடம்பெற்றதாகும். மேலும், புதிய காரில் பொருத்தப்பட்டுள்ள இன்ஸ்ட்ரூமெண்டேஷன் க்லஸ்டரில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனினும், இதுவும் புதிதல்ல, ஏனெனில் ஜாஸ் மற்றும் சிட்டி மாடலின் அடிப்படை வேரியண்ட்டில் உள்ளதையே புதிய மொபிலியோவிலும் பொறுத்தியுள்ளனர். இப்போது, மல்டி-ட்ரைவ் இன்ஃபோ ஸ்கிரீன் மற்றும் நீல நிறத்தில் விளக்குகள் கொண்ட 3 பாட் அமைப்பு போன்றவை இன்ஸ்ட்ரூமெண்டேஷன் க்லஸ்டர் பகுதியில் இடம்பெறுகின்றன. அதுமட்டுமல்ல, இதமான களைப்பில்லாத பயணத்திற்கு அவசியமான ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் அமைப்பும் புதிய மொபிலியோவில் இணைக்கப்பட்டுள்ளது. 3 ஸ்போக் ஸ்டியரிங் வீல் மட்டுமே, இதற்கு முந்தைய மாடலில் உள்ளதைப் போல இருக்கிறது, மற்ற அனைத்தும் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளன. இந்த RS வெர்ஷனிலும் ஆல்-பிளாக் தீம் கடைபிடிக்கப்படுவதால், அனைத்து கருவிகளும் கருப்பு நிறத்திலேயே காட்சி அளிக்கின்றன. 


இஞ்ஜின் ரீதியான மாற்றங்கள் எதுவும் புதிய மொபிலியோவில் இடம்பெறவில்லை. அதே 1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் இஞ்ஜின், இந்தோனேசிய சந்தையில் வெளியான மாடலில் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் வெளியாகும் போது, 1.5 லிட்டர் i-VTEC இஞ்ஜின் தவிர, தற்போதுள்ள 1.5 லிட்டர் i-DTEC இஞ்ஜினும் தொடரும். இரண்டு விதமான இஞ்ஜின்களும், கட்டாயமாக 5 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும். இது தவிர, புதிய மேம்படுத்தப்பட்ட மொபிலியோ மாடலுக்கான ஆட்டோமேடிக் பெட்ரோல் வேரியண்ட்டையும், ஹோண்டா அறிமுகப்படுத்துவதற்கான  வாய்ப்பு உள்ளது. 
மேலும் வாசிக்க 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது ஹோண்டா மொபிலியோ

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience