மிஸ்டி கிரீன் பேர்ல் நிறத்திட்டத்தில் ஹோண்டா BR-V காட்சிக்கு வந்தது
published on நவ 06, 2015 11:47 am by manish for ஹோண்டா பிஆர்-வி
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
இந்தோனேஷியா மோட்டார் ஷோவில் முதல் முறையாக வெளியிடப்பட்ட ஹோண்டா BR-V-வின் முழுஉருவத்தையும் வெளிப்படுத்தும் ரோடுஷோவை நடத்தி வருகிறது. இந்த அணுகுமுறையின் மூலம் தனது தயாரிப்பு எப்படி இருக்கிறது என்பதை வாடிக்கையாளர்கள் அறியும் வகையில், ஹோண்டா நிறுவனம் ஒரு வாய்ப்பை அளிக்கிறது. ஹோண்டாவின் இந்த அணுகுமுறையை தொடரும் வகையில், புதிய மிஸ்டி கிரீன் பேர்ல் நிறத்திட்டத்தில் அமைந்த BR-V மாதிரி காரை காட்சிக்கு வைத்துள்ளது. இந்த காரை சுராபயா ஆட்டோமோட்டிவ் கண்காட்சி 2015-ல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், அநேகமாக வரும் பிப்ரவரியில் நடைபெற உள்ள 2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
இந்த புதிய கச்சிதமான SUV-யை, இப்பிரிவிற்கு அளித்துள்ள ஹோண்டா நிறுவனம், அநேகமாக மிஸ்டி கிரீன் பேர்ல், டாஃப்பிடா வைட், பேஷன் ரெட் பேர்ல், கிரிஸ்டல் பிளாக் பேர்ல், மார்டன் ஸ்டீல் மெட்டாலிக் மற்றும் லூனார் சில்வர் மெட்டாலிக் ஆகிய ஆறு நிறத்திட்டங்களின் தேர்வுகளை அளிக்கலாம் என்று தெரிகிறது. இந்த காரின் அறிமுகத்திற்கு பிறகு, ரெனால்ட் டஸ்டர், நிசான் டெரானோ மற்றும் ஹூண்டாய் க்ரேடா ஆகியவற்றை எதிர்த்து போட்டியிடும்.
ஹோண்டா சிட்டி மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஜாஸ் ஹேட்ச்பேக் ஆகியவற்றில் காணப்படும் சில ஆக்கக் கூறுகளை தன்னகத்தே கொண்டுள்ள ஹோண்டா BR-V, 7 சீட்களை கொண்ட கார் ஆகும். இந்த கார், பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளை கொண்டுள்ளது. இதன்படி, 1.5 லிட்டர் iVTEC பெட்ரோல் ஆற்றலகத்தை கொண்டு 118 PS மற்றும் 145 Nm முடுக்குவிசையும், 1.5 லிட்டர் டீசல் மில்லை கொண்டு 100 PS மற்றும் 200 Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையையும் வெளியிடுகிறது. இந்த ஆற்றலகங்கள், ஒரு 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது ஒரு 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படும். மேலும் பெட்ரோல் வகைகளுக்கு ஒரு CVT தேர்வு கூட அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்