ஹோண்டா BR-V மாடலின் சிறப்பம்ஸங்களை முழுமையாக விளக்கும ் விளம்பர வீடியோ வெளியிடப்பட்டது
published on டிசம்பர் 04, 2015 04:40 pm by manish for ஹோண்டா பிஆர்-வி
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹோண்டாவின் “ஹௌவ் ப்ரேவ் ஆர் வீ ” என்ற விளம்பர பிரச்சாரத்துடன், ஹோண்டா BR-V கார் இந்தோனேஷிய சந்தையில் நேற்று அறிமுகப்படுத்தபட்டது. அறிமுகப் படலம் முடிந்த பின், ஜப்பானிய வாகன தயாரிப்பாளரின் இந்தோனேஷிய துணை நிறுவனம், இந்த காம்பாக்ட் SUV மாடலின் அனைத்து அம்சங்கள் அடங்கிய, முழுமையான விவரங்களை கொண்ட ஒரு விளம்பர வீடியோவை வெளியிட்டுள்ளது. மொபிலியோவின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த புதிய SUV மாடலின் விலை, தோராயமாக ரூ.10.93 லட்சம், அதாவது, IDR 226.5 மில்லியன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. BR-V மாடலின் இந்த விளம்பர வீடியோ “ஒன்லி தி பிரேவர்” என்ற டேக்லைன் இணைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. பேஸ் ஜம்ப்பர் ஒருவரின் ஏரியல் ஷாட்டுடன் இந்த வீடியோ அமர்க்களமாக ஆரம்பமாகி, SUV மாடலின் விரிவான சிறப்பம்சங்களான DRL, புரொஜெக்டர் ஹெட்லாம்ப்ஸ், டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள், மடக்கக் கூடிய மூன்றாவது வரிசை சீட்கள், டச்ஸ்கிரீன் இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமாட்டிக் கிளைமேட் கண்ட்ரோலுடன் இணைந்த பின்புற AC வெண்ட்கள், மின்சாரத்தால் இயங்கும் விங் மிரர், ரியர் பார்க்கிங் காமிரா மற்றும் பல விதமான சிறப்பம்ஸங்கள் இந்த வீடியோவில் விரிவாக மக்களின் மனதை கவரும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
120PS @ 6600rpm சக்தி மற்றும் அதிகபட்சமாக 145Nm @ 4600rpm டார்க்கை உற்பத்தி செய்யவல்ல BR-V 1.5 லிட்டர் i- VTEC பெட்ரோல் இஞ்ஜின், புதிய இன்தோனேஷியன் வகை ஹோண்டா BR-V காரில் பொருத்தப்பட்டுள்ளது. செயல்திறன் மிகுந்த இந்த இஞ்ஜின், ஸ்டாண்டர்ட் 6- ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன்னுடன் இணைக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆட்டோமாட்டிக் CVT வசதி ஆப்ஷனாக வழங்கப்பட்டுள்ளது. இந்த க்ராஸ்ஓவர் SUV மாடல் FWD முறையில் இயக்கும் வசதியில் மட்டுமே வருகிறது, இத்துடன் 4*4 வசதி இல்லை. BR-V மாடலில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த, ஏர் பேக்குகள், ஹில் ஸ்டார்ட் அஸ்சிஸ்ட் அமைப்பு மற்றும் EBD -யுடன் கூடிய ABS வசதி போன்ற முக்கியமான அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடக்கவுள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், புதிய BR-V கார் அறிமுகம் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தானில் உள்ள டபுகார ஆலையில் இந்த BR-V கார் உற்பத்தி செய்யப்படும். மாருதி S-க்ராஸ், ஹுண்டாய் கிரேட்டா, ரினால்ட்- நிஸ்ஸான் கூட்டணியில் வெளிவந்த டஸ்டர் மற்றும் டெர்ரனோ ஆகியவற்றுடன் போட்டியிட இந்த கார் தயாராகிக் கொண்டிருக்கிறது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful