சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

டாடா நெக்ஸான் இ‌வியின் இணைக்கப்பட்ட அம்சங்களைக் கொண்டு நீங்கள் என்னென்ன செய்யலாம் என இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது

published on ஜனவரி 21, 2020 05:21 pm by dhruv for டாடா நிக்சன் ev prime 2020-2023

இதை கண்காணிக்கலாம், படமாக்கலாம், மற்றும் இதை யாரேனும் வைத்திருந்தால், இதை நிறுத்தலாம். தொலைதூரத்திலிருந்து பயன்படுத்தலாம்.

  • த்திற்குப் பின்னும் நீங்கள் வாகனம் ஓட்டிய பாணியை மதிப்பிடுகிறது.

டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் இ‌வி ஐ இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தும். பல கார் தொழில்நுட்பங்களை இணைத்து வடிவமைக்கப்பட்ட மின்சார எஸ்‌யு‌வி தொகுப்புகள் ஆனது உங்கள் வாழ்க்கையை எளிதாக உருவாக்குவதோடு மட்டுமல்லாது, பாதுகாப்பையும் அளிக்கிறது. இந்த அம்சங்களில் பல, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இசட்கனெக்ட் பயன்பாட்டின் வாயிலாகவே அணுகப்படும். அவைகளைப் பற்றிக் காண்போம்:

இ‌விக்காக பொருத்தப்பட்ட அம்சங்கள்

மின்சாரமாக இருப்பதால், இ‌வியை பெறுவதற்கான சவால்களுக்கு உதவும் அம்சங்களின் தொகுப்புகள் இங்கு உள்ளன. உங்களது காரின் மின்கலத்தின் நிலையை எண்ணி நீங்கள் கவலையுறுகிறீர்கள் எனில், அதைச் சரிபார்ப்பதற்காக நீங்கள் வெகு தொலைவு நடக்கத் தேவையில்லை. மின்னூட்டத்தின் அளவு, இருப்பின் அளவு, மின்னூட்டத்தின் வரலாறு மற்றும் அருகே உள்ள மின்னூட்ட நிலையங்கள் போன்றவை குறித்த தகவல்களை இசட்கனெக்ட் பயன்பாட்டிலேயே தேடல் செய்யலாம்.

மேலும் படிக்க: டாடா நெக்ஸான் இ‌வி: மாதிரி வகைவாரியான சிறப்பம்சங்களின் தகவல்கள்

காரின் தொலைதூர கட்டுப்பாடு

நீங்கள் இந்த செயலியைப் பயன்படுத்தி காரின் அநேக சிறப்பம்சங்களைத் தொலைதூரத்திலிருந்து இயக்கலாம். உதாரணமாக, உங்கள் காரிலிருந்து ஏதேனும் ஒன்றை எடுத்து வர நீங்கள் ஒருவரை அனுப்புகிறீர்கள் – ஆனால் சாவியை அவர்களிடம் கொடுக்க விரும்பவில்லை – அத்தகைய சூழலில் நீங்கள் தொலைதூரத்திலிருந்து காரை திறந்து மூடலாம். நீங்கள் தொலைதூரத்திலிருந்து விளக்குகள், ஒலிபெருக்கிகள் போன்றவற்றையும் இயக்கலாம், அவ்வாறு செய்வதால் நெருக்கமாக நிறுத்தப்பட்டிருக்கும் பல கார்களிலிருந்து உங்களது நெக்ஸான் இ‌வியை கண்டறிவது எளிதாக இருக்கும். மேலும் இதில் காரின் குளிர் சாதனத்தைத் தொலைதூரத்திலிருந்து இயக்கச் செய்வதற்கான முன்னதாக-குளிர்விக்கும் அமைப்பு உள்ளது.

விரைவான மின்கல மின்னூட்டம்

அருகில் மின்னூட்ட நிலையம் எங்கு உள்ளது என அறிய வேண்டுமா? நல்லது, இசட்கனெக்ட் பயன்பாடு உங்களுக்காக வடிவமைக்கப்பட்டது – ஒரே கிளிக்கில், இது உங்களை அருகே உள்ள மின்னூட்ட நிலையத்திற்கான வழியை உங்களுக்குக் காட்டும். பெரு நகரங்களில் டாடாவுடன் இணைக்கப்பட்ட 300 மின்னூட்ட நிலையங்களில் நீங்கள் முன்னுரிமை அணுகலை பெறுவீர்கள், அதோடு இதன் பட்டியல் மேலும் விரிவடையும்.

நீண்ட பயணங்களுக்குத் திட்டமிடுதல்

இசட்கனெக்ட் பயன்பாடு நீண்ட சாலைப் பயணங்களை நீங்கள் திட்டமிடுவதற்கும் உங்களுக்கு உதவுகிறது. நீங்கள் செல்லவிருக்கும் இருப்பிடத்தைத் தட்டச்சு செய்தாலே போதும், இது அந்த திசையை அளிப்பதோடு மட்டுமல்லாது உங்கள் நெக்ஸான் இ‌வியை மின்னூட்டம் செய்யும் இடங்களுக்கான வழியையும் காட்டுகிறது. உங்கள் கார் செல்லும் இருப்பிடத்தை நேரலையாக காணும் அமைப்பை குடும்பம் அல்லது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விருப்பத்தையும் நீங்கள் தேர்வு செய்யலாம், அவ்வாறு செய்வதால் அவர்கள் எல்லா நேரமும் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வார்கள்.

மேலும் படிக்க: டாடா நெக்ஸான் இ‌வி 312 கிமீ வரம்பு அளவையும் பெறுகிறது

தொழில்நுட்ப உதவி

இந்த செயலியின் வாயிலாக, நீங்கள் அருகே உள்ள டாடா சேவை நிலையத்தைக் கண்டறியலாம். நீங்கள் அவர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்களை அவர்களோடு இணைக்கும் டாடாவின் 24x7 என்ற அழைப்பு மையத்தைப் பயன்படுத்தலாம். இந்த அம்சத்தின் வாயிலாக சாலையோர உதவி சேவையையும் அணுகலாம்.

உடனடி எஸ்‌ஓ‌எஸ்

எஸ்‌ஓ‌எஸ் செய்திகளை அனுப்புவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு இல்லாமல் இருக்கும் நேரங்களும் உண்டு. இது போன்ற நேரங்களில், நெக்ஸான் இ‌வியின் இணைக்கப்பட்ட அம்சங்கள் உங்களை பாதுகாக்கும். கார் மோதும் போது, இது தானாகவே எஸ்‌ஓ‌எஸ் செய்திகளைத் தேவையான நபர்களுக்கு அனுப்பும், அதோடு இந்த அமைப்பில் நீங்கள் முன்பே-பதிவிட்ட நபர்களுக்கும் அனுப்பும்.

இயக்கத்தைத் தடுக்கும் முறை

உங்களுடைய நெக்ஸான் இவி திருடப்பட்டால், அதை ஒரு பிரத்தியேக 24x7 அழைப்பு மையம் மூலமாக தொலைதூரத்திலிருந்து அதன் இயக்கத்தைத் தடுக்க முடியும்.

எச்சரிக்கைகள்

வாகனத்தின் நிலை, பாதுகாப்பு, இட-அமைவு, தனிப்பயன் வேக அமைப்பு மற்றும் இன்னும் பலவற்றை உள்ளடக்கிய 20 வெவ்வேறு வரைக்கூறுகள் பற்றி உங்கள் நெக்ஸான் இவி தானாகவே இசட்கனெக்ட் செயலி வாயிலாக உங்களுக்கு அறிவிப்புகளை அனுப்பும்.

மேலும் படிக்க: டாடா நெக்ஸான் இவி எதிராக எம்ஜி இசட் இவி எதிராக ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக்: சிறப்பம்சங்கள் ஒப்பீடு

ஓட்டுநரின் நடத்தை கண்காணிப்பு

இசட்கனெக்ட் செயலியானது ஓட்டுநரின் நடத்தையையும் கண்காணிக்கிறது, மேலும் ஒவ்வொரு பயணத்தின் இறுதியிலும் புள்ளிகளை நிர்ணயிக்கிறது. இந்த புள்ளிகள் விரைவு மற்றும் தடுத்துநிறுத்தும் அமைப்பு போன்ற வரைக்கூறுகளை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் இந்த புள்ளிகளை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க: டாடா நெக்ஸான் ஏஎம்டி

d
வெளியிட்டவர்

dhruv

  • 48 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது டாடா நிக்சன் EV Prime 2020-2023

Read Full News

explore மேலும் on டாடா நிக்சன் ev prime 2020-2023

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை