போர்ட் மாண்டேயோ மற்றும் க்யூகா 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவிற்கு வருகிறது
நடைபெற உள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் போர்ட் நிறுவனம் தனது ப்ரீமியம் செடான் கார்களான மாண்டேயோ மற்றும் க்யூகா SUV வாகனங்களை காட்சிக்கு வைக்க உள்ளது. கிரேடர் நொய்டாவில் வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் , க்யூகா பயன்பாட்டு வாகனங்கள் ( யுடிலிடி வாகனங்கள் ) போர்ட் ஈகோஸ்போர்ட் வாகனங்களுக்கு ஒரு படி மேலேயும், ப்ரீமியம் SUVயான எண்டீவர் வாகனங்களுக்கு ஒரு படி கீழேயும், இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் காட்சிபடுத்தப்படும் என்று தெரிகிறது.
சௌபா வலைத்தள தகவலின் படி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக சமீபத்தில் மாண்டேயோ மற்றும் க்யூகா கார்கள் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இஞ்சின் அமைப்பை பொறுத்தவரை இரண்டு வெவ்வேறு அளவிலான ஆற்றலை வெளியிடும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ள 2.0 லிட்டர் டீசல் என்ஜின் க்யூகா SUV வாகனங்களில் பொருத்தப்படலாம் என்று தெரிகிறது. 150PS மற்றும் 180PS என்று இரண்டு வெவ்வேறு அளவுகளில் ஆற்றலை வெளியிடும் வேரியன்ட்கள் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் தெரிய வருகிறது. அதே போல இரண்டு வெவ்வேறு அளவுகளில் சக்தியை வெளியிடக்கூடிய வகையில் ட்யூன் செய்யப்பட்ட 1.5 லிட்டர் ஈகோபூஸ்ட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட ஆப்ஷன்களும் காட்சிக்கு வைக்கப்படலாம் என்றும் தெரிகிறது. இந்த என்ஜின்கள் ஆப்ஷனல் பவர்ஷிப்ட் இரட்டை - க்ளட்ச் ட்ரேன்ஸ்மிஷன் வசதியுடன் இணைக்கப்பட்டு நான்கு சக்கரங்களுக்கும் (4WD) சக்தியை கடத்தும் என்று தெரிகிறது . இதைத் தவிர மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் வசதி கொண்ட மாடலும் காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிகிறது.
மாண்டேயோ ப்ரீமியம் செடான் கார்களைப் பொறுத்தவரை 1.5- லிட்டர், 1.6- லிட்டர் மற்றும் 2.0- லிட்டர் என்று மூன்று வகையான டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிகிறது. BMW – 3 சீரிஸ் கில்லர் கார்களும் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட ஈகோபூஸ்ட் என்ஜின் மூலம் சக்தியூட்டப்படுகிறது என்பது ஒரு கூடுதல் செய்தி. இந்த கார்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா என்பது தெளிவாக தெரியாத போதும் இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார்கள் மற்றும் போர்ட் முஸ்டாங் கார்கள் காட்சிக்கு வைக்கப்படுவதால் வரும் ஆட்டோ எக்ஸ்போவில் போர்ட் நிறுவனத்தின் ஸ்டால் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் கவர்ந்திழுக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.
மேலும் வாசிக்க