ஃபோர்ட் இந்தியா நிறுவனம், தனது புதிய கார் அறிமுக விழாவிற்கான அழைப்பிதழ்களை தற்போது அனுப்ப ஆரம்பித்துவிட்டது
ஃபோர்ட் இந்தியா நிறுவனம், தனது புதிய கார் அறிமுக விழாவிற்கான அழைப்பிதழ்களை தற்போது அனுப்ப ஆரம்பித்துவிட்டது. ஃபோர்ட்டின் அழைப்பிதழில் புதிய வாகனத்தின் பெயரைக் குறிப்பிடாமல், ‘அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் புத்தம் புதிய வாகனம்' என்ற ரகசிய அடைமொழியை மட்டும் குறிப்பிட்டுள்ளது. அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ள ‘ஜனவரி 28' என்ற அறிமுக தேதியை வைத்துப் பார்க்கும் போது, அறிமுகமாகவுள்ள இந்த புதிய கார், புதிய ஃபோர்ட் முஸ்டங்காக இருக்கும் என்று தெரிகிறது. ஏனெனில், ஜனவரி 28 –ஆம் தேதி ஃபோர்ட் முஸ்டங்க் வெளியிடப்படும் என்று பல்வேறு நம்பகமான தகவல்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளன.
இந்திய சந்தையில் வெளிவரும் ஃபோர்ட்டின் முதல் இரட்டை கதவுகள் பொருத்தப்பட்ட RWD ஸ்போர்ட்ஸ் கார் என்ற பெருமையை உலகெங்கிலும் பிரபலமான, கட்டுறுதி மிக்க ஃபோர்ட் முஸ்டாங் கார் தட்டிச் செல்கிறது. வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் குதிரையின் சின்னத்தைத் தன் முகப்பு கிரில் மேல் தாங்கி, முரட்டுக் குதிரையைப் போலவே ஓடும் இந்த காரில், இடதுபுறம் பொருத்தப்பட்டுள்ள ஸ்டியரிங் வீல், முதல் முறையாக வலது புறத்தில் மாற்றப்பட்டு, இந்திய சந்தையில் களமிறங்குகிறது. இதற்கு முன்பு வந்த அனைத்து முஸ்டங்க் கார்களிலும், இடது புறம் ஸ்டியரிங் வீல் பொருத்தப்பட்டு வெளிவந்தன. ஆனால், அமெரிக்க வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ட், தனது பிரெத்தியேக தயாரிப்பான முஸ்டங்க் காரின் 6 –வது ஜெனரேஷன் மாடலின் சந்தையை தற்போது விரிவாக்க திட்டமிட்டுள்ளதால், பாரம்பரியமான LHW அமைப்பை மாற்ற, இந்நிறுவனம் சற்றே வளைந்து கொடுக்க வேண்டியிருக்கிறது. உலகமெங்கிலும், ஃபோர்ட் நிறுவனத்தின் போனி காரின் பிரதிநிதியான முஸ்டங்க்கை வாங்க வேண்டும் என்று துடிப்பவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த ஃபோர்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதால், RWD அமைப்பு பொருத்தப்பட்டுள்ள இந்த காரை, இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த அதிர்ஷ்ட காற்று இந்திய மண்ணிலும் அடிக்கிறது. அதாவது, அமெரிக்க பாரம்பரியத்தைப் பறைசாற்றும் இந்த கார், இந்திய ரோடுகளிலும் நகர்வலம் வரப்போவது உறுதி.
கடந்த சில மாதங்களாக, இந்திய பத்திரிக்கையாளர்களின் கண்களில் பலமுறை ஃபோர்ட் முஸ்டங்க் கார் தென்பட்டுக் கொண்டே இருந்தது. சமீபத்தில், ARAI வளாகத்தில், இந்த காரின் 5.0 லிட்டர் V8 வேரியண்ட் தென்பட்டது. எனவே, அபாரமான சக்தியை முடுக்கிவிடும் அற்புதமான இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ள இந்த கார், விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்ற விவரங்கள், ஏற்கனவே இணையத்தில் வெளியாகின. உண்மையில், முஸ்டங்கின் V8 இஞ்ஜின், மகத்தான சக்தியை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இந்த இஞ்ஜின், 65000 rpm என்ற அளவில் 418 PS சக்தி மற்றும் அதிகபட்சமாக 524 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யவல்லதாக இருக்கிறது. இந்தியாவில் அறிமுகமாகவிருக்கிற புதிய முஸ்டங்க் காரில், 2.3 லிட்டர் டர்போ சார்ஜ்ட் 4 சிலிண்டர் எக்கோ பூஸ்ட் இஞ்ஜின் பொருத்தப்பட்ட ஒரு வேரியண்ட்டும் அறிமுகமாவதற்கு வாய்ப்பு உள்ளது. 6 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் இந்த இஞ்ஜின்கள் இணைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனினும், 6 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷனும் ஆப்ஷனலாக வழங்கப்படும்.
மற்றுமொரு நற்செய்தி என்னவென்றால், க்ரேட்டர் நொய்டாவில் பிப்ரவரி மாதம் 5 –ஆம் தேதி முதல் 9 –ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 2016 இந்திய ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், இந்த RWD அமெரிக்க ஸ்போர்ட்ஸ் கார் காட்சிப்படுத்தப்படும்.
மேலும் வாசிக்க