ஃபோர்டு எண்டோவரின் உயர்தர (டாப் - எண்டு) மாடல் வேவுப் பார்க்கப்பட்டது (விரிவான படங்கள் உள்ளே)
published on டிசம்பர் 15, 2015 05:59 pm by manish for போர்டு இண்டோவர் 2015-2020
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
அடுத்து வரவுள்ள தலைமுறை மாற்றம் பெற்ற ஃபோர்டு எண்டோவர் வேவுப் பார்க்கப்பட்டுள்ளது. ஃபோர்டில் முதல் முறையாக அமைந்த 5 சிலிண்டர் யூனிட்டான ஒரு 3.2-லிட்டர் டீசல் என்ஜினை இந்த கார் பெற்று, ஒரு 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த பிரிமியம் SUV-யின் AWD வகை, தமிழகத்தில் உலா வந்ததாக நாங்கள் செய்தியை வெளியிட்டிருந்தோம். இந்த ஃபோர்டு எண்டோவர், இரு என்ஜின் தேர்வுகளை பெற்று, அவை இரண்டிலும் மாறுபட்ட ஜியோமெட்டரி டர்போசார்ஜர்களை கொண்டு, 2-வீல் டிரைவ் மற்றும் 4-வீல் டிரைவ் என்ற இரு கட்டமைப்புகளிலும் கிடைக்க உள்ளது. ஆற்றலகத்தை பொறுத்த வரை, மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் என்ற ஏதாவது ஒன்றை தேர்வு செய்யும் வசதியை கொண்டுள்ளது. அடுத்த தலைமுறையை சேர்ந்த ஃபோர்டு ஈகோஸ்போர்ட் காரை, ஒரு சர்வீஸ் நிலையத்தின் உள்ளே வேவுப் பார்க்கப்பட்டது. இந்த வேவுப் பார்க்கப்பட்ட SUV-யில், ஒரு ஆல் வீல் டிரைவ் கட்டமைப்பை கொண்டு, இந்த பிரிவிலேயே உயர்ந்த தயாரிப்பாக அமையும் வாய்ப்பை பெற்றுள்ளது.
இந்த காரின் வெளிபுற அமைப்பியலில், ஒரு சன்ரூஃப், ரூஃப் ரெயில்கள், அலாய் வீல்கள் மற்றும் ஒருங்கிணைந்த இன்டிகேட்டர்களுடன் கூடிய ORVM-கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. உட்புற அமைப்பியலில், ஒரு பட்டு வரவேற்பை கொண்டுள்ளதோடு, ஒரு டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், பன்முக பயன்பாட்டு ஸ்டீயரிங் வீல், டயல் டோன் டேஷ்போர்டு உடன் கூடிய பிரஷை கொண்ட அலுமினியம் இன்சர்ட்கள், லேதர் அப்ஹோல்ஸ்டரி மற்றும் ஒரு லேதரால் சூழப்பட்ட ஸ்டீயரிங் வீல் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. அதேபோல ரோட்டரி கன்ட்ரோல் கினாப்-பை ஒட்டி, எளிதில் பயன்படுத்த கூடிய வகையில், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் லீவர் இருப்பதை காணலாம். நிலப்பகுதிக்கு ஏற்ப கட்டமைப்பை தேர்வு செய்ய டிரைவருக்கு இது உதவுகிறது.
ஃபோர்டு எண்டோவரின் ஆற்றலகத்தை பொறுத்த வரை, ஒரு 2.2 லிட்டர் டீசல் என்ஜினையும் பெற்று, 158bhp ஆற்றல் வெளியீடையும், 385Nm முடுக்குவிசையையும் அளிக்கிறது. 3.2 லிட்டர் 5 சிலிண்டர் டீசல் TDCI வகை (வேவுப் பார்க்கப்பட்ட வாகனம்) 197bhp ஆற்றலையும், 470Nm முடுக்குவிசையையும் வெளியிடுகிறது. இந்த 2.2 லிட்டர் என்ஜின், ஒரு 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் AT-க்கு தேர்வுக்குரியதாகவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிரிமியம் SUV அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, ஹூண்டாய் சாண்டா பி, மிட்சுபிஷி பஜேரா ஸ்போர்ட் மற்றும் சாங்யாங் ரெக்ஸ்டன் ஆகிய வாகனங்களுடன் போட்டியிட உள்ளது.
மேலும் வாசிக்க