• English
  • Login / Register

போர்ட் எண்டீவர் மீண்டும் படம்பிடிக்கப்பட்டது!

published on அக்டோபர் 13, 2015 12:31 pm by அபிஜித் for போர்டு இண்டோவர் 2015-2020

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர் :

எண்டீவர் SUV வாகனங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவது ஏன் என்பது பற்றி போர்ட் நிறுவனம் எந்த ஒரு தகவலையும் வெளியிடாத நிலையில் , தமிழ் நாடு பதிவு எண்ணுடன் இந்த கட்டுமஸ்தான SUV வாகனம் எந்த வித மறைப்பும் இன்றி கடைசி கட்ட சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போது நம் கண்களில் தென்பட்டது.

நமக்கு கிடைத்த வேவு பார்க்கப்பட்ட படங்களை பார்க்கும் போது , வாகனத்தை சுற்றி பொறிக்கப்பட்டுள்ள குறியீடுகள் , ( பேட்ஜ்) இந்த வாகனம் என்டீவரின் ஒரு டாப் - எண்ட் வேரியன்டாகத் தான் இருக்கும் என்று எண்ண வைக்கிறது. சற்று சேறு பட்டுள்ள வாகனத்தின் பக்கவாட்டு பகுதியில் 3.2 என்ற பேட்ஜ் பொறிக்கப்பட்டுள்ளதையும் காண முடிகிறது. இதன் மூலம் புதிய எண்டீவர் SUV இந்த பிரிவு வாகனங்களிலேயே முதல் முறையாக இன்லைன் - 5 சிலிண்டர் பொருத்தப்பட்டு சக்தியூட்டபடுகிறது என்பதை நாம் தெரிந்துக் கொள்ளலாம். மேலும் சற்று கூர்ந்து பார்க்கையில் முகப்பு விளக்குகளில் பகல் நேரத்திலும் ஒளிரும் DRL பொருத்தப்படவில்லை என்பதையும் காண முடிகிறது. அதற்கு பதிலாக குரோம் பூச்சு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சக்கரங்களிலும் தாய்லாந்து நாட்டில் சோதிக்கப்பட்ட போது பொருத்தப்பட்டிருந்த குட்இயர் ரேங்க்ளர் AT டயர்களுடன் கூடிய பெரிய அளவிலான 20 அங்குல சக்கரங்கள் இந்த வாகனத்தில் காணப்படவில்லை.. இதன் மூலம் நாம் பார்த்த இந்த எண்டீவர் 3.2 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ள வேரியன்ட்களிலேயே விலை குறைந்த வேரியன்டாக இருக்க வாய்பிருக்கிறது என்று சொல்லலாம்.

இன்ஜினைப் பொறுத்தவரை இரண்டு ஆப்ஷன்களை எதிர்பார்க்கலாம். மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல 3.2 லிட்டர் 1-5 மற்றும் இன்னொன்று சிறிய 2.2 லிட்டர் இன்லைன் 4 சிலிண்டர் ஆகும். 3.2 லிட்டர் என்ஜின் 200 PS அளவு சக்தியையும் 2.2 லிட்டர் என்ஜின் 160 PS சக்தியையும் வெளியிடும் ஆற்றல் கொண்டவை. சிறிய 2.2 லிட்டர் என்ஜின் ஆப்ஷனில் மேனுவல் (கைகளால் இயக்கக் கூடிய) மற்றும் ஆட்டோமாடிக் (தானியங்கி ) ட்ரேன்ஸ்மிஷன் அமைப்பு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பெரிய என்ஜின் ஆப்ஷனுடன் வரும் என்டீவரில் 6 - வேக தானியங்கி ட்ரேன்ஸ்மிஷன் வசதி மட்டும் தான் இணைக்கப்பட்டுள்ளது .

முதலில் அறிமுகமான காலத்தில் மிக அதிகமாக விற்பனையாகும் பிரிமியம் SUV வாகனமாக விளங்கிய இந்த போர்ட் எண்டீவர், டொயோடா நிறுவனத்தின் பார்சூனர் அறிமுகமான பின்பு கடும் போட்டியை சந்தித்தது. போதிய மேம்பாடுகள் மற்றும் சிறப்பம்சங்கள் சரியான நேரத்தில் இணைக்கப்பட்டு மேம்படுதப்படாததால்

என்டீவரின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. ஆனால் இன்னும் கணிசமான எண்ணிக்கையில் எண்டீவர் கார்களின் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் அறிமுகமாக உள்ள இந்த மேம்படுத்தப்பட்ட கட்டுமஸ்தான என்டீவரை மிகுந்த ஆவலுடன் எதிர் பார்த்து காத்து இருக்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

படங்கள் மூலம் : திரு. ரங்கராஜ முரளி , போர்ட் பீகோ ஓனர்ஸ் க்ளப்பில் இருந்து.

படியுங்கள் பர்ஸ்ட் டிரைவ் உணர்வுகள் : போர்ட் எண்டீவர் - பார்ஸ்ட் டிரைவ் ஆய்வு

போட்டியை பாருங்கள் : டொயோடா பார்சூனர் | மிட்சுபிஷி பேஜிரோ

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your Comment on Ford இண்டோவர் 2015-2020

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience