• English
  • Login / Register

போர்ட் டிசெம்பர் மாத தள்ளுபடிகள்!

published on டிசம்பர் 21, 2015 02:32 pm by nabeel

  • 17 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர் :

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் வேளையில் , அதனை முழுமையாகப்  பயன்படுத்தி பல்வேறு கார் தயாரிப்பாளர்கள் தங்கள் மாடல்கள் மீது பல்வேறு தள்ளுபடிகளை  தந்து விற்பனையை அதிகரிக்க முயன்று வருகின்றனர். டாடா , ரெனால்ட் மற்றும் இன்னும் பல கார் தயாரிப்பாளர்கள் சலுகைகளை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து இப்போது போர்ட் நிறுவனமும் தங்கள் மாடல்கள் மீது ரூ. 62 000 வரை ரொக்க சலுகைகளை  மிகக் குறைந்த வட்டி விகிதத்தில்  அறிவித்துள்ளது. ஈகோஸ்போர்ட் ,போர்ட் பீகோ மற்றும் போர்ட் பீகோ ஆஸ்பயர் மாடல்கள் மீது இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசெம்பர் 1 , 2015 முதல் டிசெம்பர் 31, 2015 வரை புக்கிங் செய்யப்படும் மேற் குறிப்பிட்டுள்ள மாடல்கள் மீது மட்டுமே இந்த சலுகைகள் செல்லுபடியாகும்.  மேலும் கூடுதலாக , போர்ட் கார்கள் மீது  ரூ. 25,000  வரை எக்ஸ்சேன்ஜ் போனஸ் மற்றும் போர்ட் அல்லாத மற்ற ப்ரேண்ட்கள் மீது எக்ஸ்சேன்ஜ் போனஸ் ரூ. 18,000 வரையும் வழங்கப்படுகிறது. 

போர்ட் ஈகோஸ்போர்ட் 

போர்ட்  ஈகோஸ்போர்ட் கார்கள் மீது 7.99%. வட்டி விகிதத்தில் ரூ. 44,000 வரை ரொக்க சலுகைகள் வழங்கப்படுகிறது.  இதைத் தவிர , ஏற்கனவே ஈகோஸ்போர்ட் கார்களின் உரிமையாளர்களுக்கோ அல்லது அவர்களின் நெருங்கிய சொந்தங்களுக்கோ நீட்டிக்கப்பட்ட 3 - வது வருட வாரண்டி சலுகையை  லாயல்டி போனஸ் என்ற பெயரில் போர்ட் வழங்குகிறது.    இந்த சலுகை , முதல் முறையாக கார் வாங்கப்பட்ட  3 வருடத்திற்கு உள்ளாகவோ அல்லது 100,000 கி.மீட்டருக்கு குறைவாகவோ ஓடி உள்ள ( எது முதலாக வருகிறதோ அதன் அடிப்படையில் ) ஈகோஸ்போர்ட் கார்கள் மீது மட்டும் தான் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த சலுகை   போர்ட் கிரெடிட் இந்தியா ப்ரைவேட் லிமிடெட் மூலம் நிதிஉதவி பெற்றிருந்தால் மட்டும் , நாடு முழுதும் உள்ள குறிப்பிட்ட  டீலர்ஷிப் மையங்களில்  இந்த சலுகைகளை பெற்றுக் கொள்ளலாம்   என்று போர்ட் அறிவித்துள்ளது.

போர்ட் பீகோ ஆஸ்பயர் 

கார் முதலில்  வாங்கப்பட்டதில் இருந்து  3 வருடத்திற்கு உட்பட்டதாகவோ  அல்லது 60,000 கி.மீட்டருக்கு  குறைவாக ஓடிய காராக இருக்கும் பட்சத்தில் அதன் மீது 7.99% வட்டி விகிதத்தில் ரூ. 62,000  வரையிலான ரொக்க சலுகைகள் ஆஸ்பயர் கார்கள் மீது வழங்கப்படும் என்று போர்ட் அறிவித்துள்ளது. "போர்ட் கிரெடிட்" மூலம் நிதியுதவி பெற்றிருக்கும் பட்சத்தில் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்ஷிப் மையங்களில் மட்டும் இந்த சலுகைகளைப் பெற்றுக் கொள்ளல்லாம்.  

புதிய போர்ட் பீகோ   

புதிய போர்ட் பீகோ மீது ரூ. 53,000  வரை ரொக்க சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience