• English
  • Login / Register

ஜெய்பூர்: போர்ஸ் மோட்டார் நிறுவனம் 2016 ட்ரேக்ஸ் க்ரூஸர் டீலக்ஸ் வாகனங்களை 8.68 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியது.

nabeel ஆல் அக்டோபர் 26, 2015 03:54 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 23 Views
  • 2 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர் :

போர்ஸ் மோட்டார் நிறுவனம் தங்களது பிரபலமான மக்கள் மற்றும் சரக்குகளை ஏற்றி செல்ல உதவும் பயன்பாட்டு வாகனமான ட்ரேக்ஸ் வாகனத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு ஒன்றை 8.68 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது இந்த வாகனத்தில் இரண்டு வண்ணத்தில் உட்புறம், புதிய டேஷ்போர்ட் மற்றும் இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் போன்ற அம்சங்களை காண முடிகிறது. மேலும் இந்த புதிய ட்ரேக்ஸ் டீலக்ஸ் வாகனத்தில் பயணிகளின் கூடுதல் வசதிக்காக குளிர்சாதன வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ட்ரேக்ஸ் டீலக்ஸ் வாங்குபவர்களுக்கு 3 வருடம் / 3 லட்சம் கி.மீ வாரண்டி மற்றும் 7 இலவச சர்வீஸ் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

இந்த குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள புதிய ட்ரேக்ஸ் டீலக்ஸ், மெர்சிடீஸ் OM616 , 2.6 லிட்டர் 81hp  சக்தியையும், 1800 - 2000rpm ல் 230  nm அளவு டார்க் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் என்ஜின் மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த ஏஸி மாடலில் வெளிப்புற மாற்றங்களையும் பார்க்க முடிகிறது. புது முன்புற க்ரில், புதிய முன்புற மற்றும் பின்புற பம்பர்கள் மற்றும் வட்ட வடிவுள்ள முகப்பு விளக்குகள் போன்றவை இந்த வாகனத்தின் தோற்றத்தை மேம்படுத்தி சிறப்பாக காட்டுகிறது. இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் மிகவும் ஸ்டைலான பக்கவாட்டு க்ரேபிக்ஸ், வீல் கேப், மற்றும் வீல் ஆர்செஸ் போன்றவைகள் இந்த வாகனத்திற்கு நல்ல மாடர்ன் தோற்றத்தை தருகிறது என்று சொல்லலாம். திரு. அஷுதோஷ் கோஸ்லா , தலைவர் , விற்பனை மற்றும் மார்கெடிங் , போர்ஸ் மோட்டார்ஸ் பேசுகையில் பின்வருமாறு கூறினார். "ட்ரேக்ஸ் முழுதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட பன்முக பயன்பாட்டு வாகனம். கடந்த 30 ஆண்டுகளாக நாட்டின் கிராமப்புறம் மற்றும் வளந்து வரும் டவுன் பகுதிகளில் மக்களின் போக்குவரத்திற்கும், பொருட்களை ஏற்றி செல்வதற்கும் சரியான வாகனம் என்ற நம்பிக்கையை மக்களிடையே பெற்றுள்ளது ட்ரேக்ஸ். போர்ஸ் நிறுவனம் இந்த வாகனத்தை பல கால கட்டங்களில் தொடர்ந்து மேம்படுத்தி வந்துள்ளது. அதனால் இந்த ட்ரேக்ஸ் நீண்ட காலமாக இன்றுவரை எந்த போட்டியுமின்றி ராஜநடை போட்டுக் கொண்டிருக்கிறது. . எண்கள் பயணத்தில் இன்னொரு மைல்கல்லாக இந்த புதிய வேரியன்ட் ஏஸி ட்ரேக்ஸ் பயனிகல்லுக்கு கூடுதல் வசதி தரும் பொருட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.”

இதையும் படியுங்கள் :

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience