அடுத்து வரவுள்ள 124 ஸ்பைடர் ரோட்ஸ்டரின் முதல் படத்தை ஃபியட் வெளியிட்டது
published on நவ 16, 2015 10:44 am by raunak
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
ஃபியட் நிறுவனம், தனது புதிய ரோடுஸ்டரான 124-யின் முதல் படத்தை (டீஸர்), சமூக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த மாற்றத்திற்குட்பட்ட (கன்வெர்டபிள்) கார், அடுத்து வரவுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் மோட்டார் ஷோவில் வெளியிடப்படலாம் என்ற ஊகம் நிலவுகிறது. இந்த மாதம் (நவம்பர்) 20 முதல் 29 ஆம் தேதி வரை உள்ள நாட்களில், இந்த ஷோ பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும். அதே நேரத்தில், இம்மாதம் (நவம்பர்) 17 முதல் 19 ஆம் தேதி வரை உள்ள நாட்கள், ஊடகத் துறையினருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 1966 ஆம் ஆண்டு நடைபெற்ற டுரின் மோட்டார் ஷோவில் ஒரிஜினல் 124 ஸ்பைடர் என்ற பெயர் அறிமுகம் ஆனது. அதன்பிறகு 80க்களில் அந்த வாகனத்தை கைவிட்ட ஃபியட் நிறுவனம், தற்போது 124 பெயர் பலகைக்கு புத்துயிர் அளித்துள்ளது.
இந்த ஆண்டின் துவக்கத்தில், FCA-யின் (ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ்) தலைவர் செர்ஜியோ மார்ச்சியோன், இவ்வாகனத்தை குறித்து உறுதி அளித்திருந்தார். இந்த கார், மாஸ்டா உரிமை கொள்ளும் மாய்டாவின் பிளாட்பாமை அடிப்படையாக கொண்டது என்று கூறப்படுகிறது. எல்லா மாய்டாக்களைப் போலவே, இதிலும் புதிய சேஸை பெற்றிருப்பதால், தற்போதைய 4வது தலைமுறை மாடல் விறுவிறுப்பாகவும், ஓட்டுவதற்கு குதுகலம் அளிப்பதாகவும் இருக்கும். மேலும் இந்த சேசிஸ்ஸை பகிர்ந்து கொண்டுள்ளதன் மூலம் ஃபியட்டிலும் அதே பண்புகளை காண முடியும். வடிவமைப்பை குறித்து கூறுகையில், ஃபியட் 124 ஸ்பைடரின் தோற்றம், எந்த வகையிலும் மாஸ்டா மாய்டா / MX-5 ஆகியவற்றை ஒத்து காணப்படாமல், அதன் ஒரிஜினல் பின்னின்ஃபார்னியா வடிவமைப்பு மாடலின் வடிவமைப்பு தகவமைப்புகளை கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் இந்த இத்தாலிய வாகன தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள முதல் படங்களை பார்க்கும் போது, அவை ஒரு போஸ்ட் கார்டு போல காணப்படுகிறது. இதில் 2 படங்களின் மூலம், ஒரு கார்ட்டூன் வடிவிலான உண்மையான 2016 ரோடுஸ்டரின் நிழல்படம் போல தெரிகிறது.
இயந்திரவியலை பொறுத்த வரை, மாய்டாவின் 4 சிலிண்டர் மோட்டாரை கொண்டுள்ள 2.0-லிட்டர் ஸ்கை ஆக்டிவ்-வை, ஃபியட் நிறுவனம் பகிர்ந்து கொள்ளாது என்பது வெளிப்படையானது. ஃபியட் நிறுவனம் தற்போது அளித்து வரும் என்ஜின் தேர்வுகளின் வரிசையின்படி பார்த்தால், 1.4-லிட்டர் T-ஜெட்டை அளிக்க வாய்ப்புள்ளது. மேலும் 124 ஸ்பைடரின் ஒரு அபார்த் பதிப்பு கூட வெளியிடப்படலாம் என்ற வதந்தி பரவியுள்ளது. எனவே இந்த இத்தாலிய ரோடுஸ்டரை குறித்த அதிக விபரங்களுக்கு, தொடர்ந்து கார்தேக்கோ இணையதளத்தோடு இணைந்திருங்கள்.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful