பியட் இந்தியாவின் இலவச மழைக்கால சர்வீஸ் முகாம் ஏற்பாடு: ஜூலை 23 இருந்து 25 வரை
published on ஜூலை 28, 2015 04:15 pm by sourabh
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:ஜூலை மாதத்தை மழை பாதித்துள்ள நிலையில், ஜூலை மாதம் 23 முதல் 25 வரை இலவச மழைக்கால பரிசோதனை முகாமிற்கு பியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம் நாடெங்கும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பியட் நிறுவனத்தின் சேவை மையங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் பியட்டின் பயிற்சி பெற்ற பொறியாளர்கள் மூலம் 60 பயிண்ட்ஸ் பரிசோதனை, இலவச சுத்திகரிப்பு, பணி கட்டணங்களில் 10 சதவீத கழிவு உட்பட பல சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த மழைக்கால முகாம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளது மட்டுமின்றி, நுகர்வோரிடம் மெசேஜ் மற்றும் இ-மெயில் மூலம் எப்சிஏ வியாபாரிகள் தொடர்பு கொண்டு இந்த முகாம் குறித்த விவரங்களை தெரிவிப்பர். டீலர்ஷிப் மூலம் ஜிபிஎஸ் யூனிட்டில் ரூ.4,000 தள்ளுபடியும் கிடைக்கும்.
இது குறித்து எப்சிஏ தலைவரும், நிர்வாக இயக்குநருமான கெவின் பிளைன் கூறுகையில், “இந்த முகாமின் மூலம் தற்போதைய மற்றும் வருங்கால நுகர்வோரிடம் வெகுவிரைவில் சென்றடையும் முயற்சியில் எப்சிஏ இந்தியா ஈடுபட்டுள்ளது. இந்த பருவத்தில் விற்பனை மற்றும் சேவை பணிகளை நாங்கள் முடித்துள்ள நிலையில், நுகர்வோரின் வாகன பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியிருப்பதால், இந்த மழைக்கால பரிசோதனை முகாம் முக்கியமான ஒன்றாகிறது. கடந்த காலங்களில் நாங்கள் நடத்திய முகாம்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததை தொடர்ந்தும், தற்போதைய காலநிலையை கருத்தில் கொண்டும், மழைக்கால பரிசோதனை முகாமை நாடு முழுவதும் நடத்த முடிவு செய்தோம்.
இந்நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை வரிசைப்படுத்தி விரிவாக்கம் செய்யும் வகையில், பியட் 500 அபார்த் 595 காம்பெட்டிசியோன் என்ற புதிய மாடலை ஆகஸ்ட் 4, 2015 அன்று அபார்த் என்ற புதிய பிராண்டின் கீழ் இந்தியாவில் வெளியிட உள்ளது. இதனுடன் அடுத்த கட்ட நடவடிக்கையாக, 280 மில்லியன் டாலர் முதலீட்டில் பியட்டின் ரான்ஜன்கான்தொழிற்சாலையைமேம்படுத்தி, வரும் 2017 முதல் அங்கு ஜீப்பின் புதிய எஸ்யூவிகளை தயாரிக்க போவதாக எப்சிஏ (பியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸ்) அறிவித்துள்ளது.