பெர்ராரியின் ஐபிஓ: துள்ளிக் குதிக்கும் குதிரை விற்பனைக்கு
ஜெய்ப்பூர்: எப்சிஏ தன்னுடைய ஆடம்பர ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பாளரான பெர்ராரிக்காக ஷேர்கள் வெளியிட வேண்டி அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கட்டுப்பாட்டாளர்களிடம் ஒரு விண்ணப்பம் அளித்துள்ளது. கடந்த காலாண்டில், இந்நிறுவனம் விண்ணபித்தது.
எப்சிஏ உடன் பெர்ராரி இணைந்த பிறகு, 10 சதவீத பங்குகளை, பங்கு விற்பனை மூலம் விற்று, மற்ற வியாபார பங்குகளை பங்குதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.
பெர்ராரியின் நிறுவுனரான இன்ஸோ பெர்ராரி கடந்த 1988 ஆம் ஆண்டு இறந்தார். அவரது மகனும், நிறுவன துணை தலைவருமான பைரோ பெர்ராரியிடம் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகள் உள்ளன. மீதமுள்ள 90 சதவீத பங்குகள் எப்சிஏ-விடம் உள்ளது.
இந்நிலையில் 48 பில்லியன் யூரோ (53 பில்லியன் டாலர்) முதலீடு செய்து தனது விற்பனையை 60 சதவீதம் அதிகரிக்க எப்சிஏ யோசித்து வருகிறது. இதன்மூலம் 2018 ஆம் ஆண்டிற்குள் 7 மில்லியன் கார்களை விற்பனை செய்து, ஐந்து மடங்கு வருமானத்தை அதிகரிக்க முடியும். குறிப்பிட்ட இந்த முயற்சியினால் நிறுவனத்திற்கு உள்ள அதிகபட்ச கடன் குவியல்களை நீக்கிவிட எப்சிஏ பார்க்கிறது.
பெர்ராரியை குறித்த தரகர்களின் தர நிர்ணயத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக, 5 மில்லியன் யூரோவில் இருந்து 10 மில்லியன் யூரோ வரை சரிவை சந்தித்துள்ளது. பெர்ராரிக்கு முழு ஆடம்பர சரக்கு போன்ற விலை நிர்ணயம் செய்யலாம். அது குறைந்தபட்சம் 10 மில்லியன் யூரோ மதிப்பு கொண்டது என எப்சிஏ-யின் மூத்த தலைவரும், பெர்ராரியின் தலைவருமான சிர்ஜியோ மர்ச்சியான்னி நம்புகிறார்.
ஆனால் நிறுவனத்தின் பங்குகளின் எதிர்பார்ப்பு விலை மற்றும் எவ்வளவு பங்குகள் விற்பது என்பது குறித்தோ நிறுவனத்தின் திட்டங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கடந்த வியாழனன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளின் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பரிமாற்ற கமிஷனிடம் தக்கல் செய்யும் வேளையில், பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப யூபிஎஸ், பிஒஎப்ஏ மிர்ரில் லைச் மற்றும் சான்டான்டர் ஆகியவை, அக்டோபர் மாத மத்தியில் வெளியாகலாம் என்ற எதிர்ப்பார்ப்பு இருப்பதாக நிறுவனம் தெரிவித்தது.
இந்நிறுவனத்திற்கு சிறந்த இணைப்பு பங்குதாரர்கள் கிடைக்க, மர்ச்சியோன்னியின் இந்த ஐபிஓ முயற்சியின் வெற்றி முக்கியமானதாகும். ஏனெனில் நிறுவனம், உயர் வளர்ச்சி செலவுகள் மற்றும் வீழ்ச்சி கோட்டை எட்டியுள்ளது.
தனது சில குறிப்பிட்ட ஆய்வுகளின் மூலம், எப்சிஏ-விற்கு சிறந்த மதிப்பிடலையும், இணைப்பு பங்குதாரரையும் எளிதில் பெற்று தர முடியும் என பெர்ராரி கருத்து தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் அமெரிக்க ஐக்கிய நாட்டு போட்டியாளரான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு, மர்ச்சியோன்னி அனுப்பிய புரிந்துணர்வு ஒப்பந்த விருப்ப இ-மெயில் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.