இந்தியாவில் மீண்டும் ஃபெர்ராரி நிறுவன கார்கள் இன்று   மறு அறிமுகப்படுத்தப்படும்

published on ஆகஸ்ட் 26, 2015 09:35 am by manish

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

துள்ளும் குதிரை போன்ற கார்கள் இந்தியாவிற்கு மீண்டும் வருவதற்கு தயாராக உள்ளது. இத்தாலிய வாகன தயாரிப்பாளரான ஃபெர்ராரி, தனது கலிஃபோர்னியா T என்ற காரை இந்தியாவில் ஆகஸ்ட் 26 ஆம் தேதி, ரூபாய் 3.3 கோடிக்கு மும்பை எக்ஸ் ஷோரூம் விலையில் அறிமுகம் செய்கின்றனர். ஃபெர்ராரி கார்களில், இதுவே மிகவும் மலிவான விலை காராக இருக்கும். கலிஃபோர்னியா T காரை GT ரக காராக மாற்றி, ஒரு நீளமான பயணத்தை மிகவும் சொகுசாக உணர முடியும். மேலும், இது 1950 மற்றும் 60 களிலிருந்து வரும் கலிஃபோர்னியா கார் மாடல்களின் பிரத்யேக வரிசையில் இருந்து வருகிறது.

இந்த மாடல், முதலில் அமெரிக்க வடிக்கையாளர்களை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டது. கலிஃபோர்னியாவின் அருமையான வானிலையை முழுமையாக அனுபவிப்பதற்காக மேல் விதானத்தை திறந்து கொள்ளக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த காரின் வித்தியாசமான தோற்றத்தால் மட்டுமல்லாது, இதன் வாடிக்கையாளர்களாலும் மென்மேலும் புகழ் பெற்றுள்ளது. ஏனெனில், ஹாலிவூட்டில் புகழ் பெற்ற ஸ்டீவ் மேக்க்வீன் போன்றவர்கள் இதன் பிரேத்யேக வடிக்கையாளர்கள். வித விதமான அளவுகளில் வரும் கதவுகளைப் போல, அனைவரையும் ஈர்க்கக்கூடிய பலவிதமான அருமையான அமைப்புகளைக் கொண்டு இந்த கார்கள் புகழ் பெற்று விளங்குகின்றன. ஃபெர்ராரி நிறுவனத்தின் ஒவ்வொரு கார் மாடலும் தனித்துவமானது, ஏனெனில், ஒவ்வொரு காரும் ஆரம்பத்திலிருந்து பிரெத்யேகமாக வடிவமைக்கப்பட்டது.

புதிய கலிஃபோர்னியா கார், மாறுபட்ட செயல்திறனை அதிகாரிக்கும் மேலாண்மை அமைப்போடு (வேறியபுல் பூஸ்ட் மானேஜ்மென்ட் சிஸ்டம்) கூடிய, 552 bhp குதிரை திறனை கொடுக்கவல்ல 3.9 லிட்டர் இரட்டை டர்போ V8 இயந்திரத்தை கொண்டுள்ளது. இந்த இயந்திர முறை, பல்லிணைப்புகளுக்கு (கியர்) ஏற்றவாறு வேறுபட்ட முறுக்கு விசை அளவுகளை மாற்றி தரவல்லது. மேலும், அதிகப்படியான கியர்களில் அதிகப்படியான முறுக்கு விசையை பெறலாம். இத்தகைய முறைக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும், ஏனெனில் கார் ஓட்டும் போது தொடர்ந்து வேகத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. மேலும், இந்த தொழில்நுட்பம் டர்போ பின்னடைவை பெரும்பாலும் தவிர்த்து விடுகிறது.

தற்போது, மும்பை மற்றும் டெல்லியில் ஃபெர்ராரி நிறுவனத்தின் வினியோகஸ்தர்கள் உள்ளனர். இந்த இரு விநியோகஸ்தர்களிடமும் கார் முன் பதிவு செய்து கொள்ளலாம். நீங்கள், இந்த அழகிய காரிகளின் உரிமையாளராக ஆக வேண்டும் என்று விரும்பினால், நாங்கள் சொல்லப்போகும் இந்த செய்தி மிகவும் வேதனையைக் கொடுக்கும். உண்மை சுட்டாலும், தற்போது வந்த சில அறிக்கைகளின் படி குறைந்த எண்ணிக்கையிலேயே இந்த கார்கள் கிடைக்கும் என்று தெரிகிறது. மேலும், அந்த எண்ணிக்கை கார்களும் ஏற்கனவே முன் பதிவு செய்யப்பட்டு விற்றுவிட்டன என்று தெரிகிறது. எனினும், வாழ்க்கை இருண்டு போய்விடவில்லை, அடுத்த 2016 ஆண்டிற்கான முன் பதிவை இந்த விநியோகிஸ்தர்கள் இப்பொழுதே தொடங்கி விட்டனர் என்றும் தெரிகிறது.

கலிஃபோர்னியா T உட்பட, ஃபெர்ராரி தனது பிற கார்களான லா ஃபெர்ராரி ஹைபர் கார் போன்ற கார்களையும் சந்தைப்படுத்த உள்ளது. ஃபெர்ராரி கார்களின் வரிசையில் மிகவும் விலை உயர்ந்ததான F – 12 பெர்லினேட்டா காருக்கு ரூபாய் 4.72 கோடி என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விலை பட்டியல், சில்லறை பாகங்கங்கள் மற்றும் விருப்ப தேர்வுகளுக்கு ஏற்றவாறு மாறுபடும்.

இந்தியாவில் உள்ள ஃபெர்ராரி கார்களின் விலை வேறுபாடுகளைக் களைய ஃபெர்ராரி நிறுவனமும், அதன் விநியோகஸ்தரான ஷ்ரேயன்ஸ் குரூப்புடன் சேர்ந்து, மும்பை ஷோரூம் விலைப் பட்டியலை வெளியீட்டு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

ஃபெர்ராரி இந்தியா கார்களின் விலைகள் (மும்பை ஷோரூம் விலை)

ஃபெர்ராரி கலிஃபோர்னியா T – ரூபாய் 3.30 கோடி

ஃபெர்ராரி 488 GTB – ரூபாய் 3.84 கோடி

ஃபெர்ராரி 458 ஸ்பைடர் – ரூபாய் 4.07 கோடி

ஃபெர்ராரி 458 ஸ்பெஷல் – ரூபாய் 4.25 கோடி

ஃபெர்ராரி FF – ரூபாய் 4.57 கோடி

ஃபெர்ராரி எஃப்-12 பெர்லினெட்டா – ரூபாய் 4.72 கோடி

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience