ஹூண்டாயின் ஆடம்பர பிராண்ட் ஆன ஜெனிசிஸை வழிநடத்த, லம்போர்கினியின் முன்னாள் நிர்வாகி மேன்ஃப்ரேட் ஃபிட்ஸ்ஜிரால்டு நியமனம்
புதுடெல்லி:
வரும் 2016 ஜனவரி மாதம் முதல், தனது ஆடம்பர பிராண்ட் ஆன ஜெனிசிஸை வழிநடத்த, லம்போர்கினி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியான மேன்ஃப்ரேட் ஃபிட்ஸ்ஜிரால்ட்டை, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் நியமித்துள்ளது.
இத்தாலியன் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனத்தின் பிராண்ட் மற்றும் டிசைன் பிரிவின் ஒரு முன்னாள் இயக்குனராக பணியாற்றிய ஃபிட்ஸ்ஜிரால்டு, தென் கொரியன் கார் தயாரிப்பு நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, ஆடம்பர கார் பிராண்ட்டான ஜெனிசிஸின் உலகளாவிய நிலைப்பாட்டிற்கான பொறுப்பை ஏற்பார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெர்மன் டிவி தயாரிப்பு நிறுவனமான லோவ்வியில் இணையும் வகையில், லம்போர்கினியில் இருந்து இந்த 52 வயதானவர் வெளியேறினார். கடந்த 2013 ஆம் ஆண்டு இது ஒரு பிராண்ட் கன்சல்டென்ஸி நிறுவனமாக நிறுவப்படும் வகையில், இந்த பிராண்ட் மற்றும் டிசைன் நிறுவனம் பெயரிடப்பட்டது. இந்த வகையில், கார் பிராண்ட் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் இவர் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்.
இது குறித்து ஹூண்டாயின் ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “லம்போர்கினியில் ஃபிட்ஸ்ஜிரால்டு பணியாற்றிய 12 ஆண்டு காலக்கட்டத்தில், லம்போர்கினியை ஒரு முன்மாதிரியான கார் நிறுவனம் என்ற நிலையில் இருந்து ஒரு ஆடம்பர கார் பிராண்ட்டாக மாற்றுவதில் மிக முக்கிய பங்கு வகித்தார். மேலும் இவர் அந்நிறுவனத்தின் பிராண்ட் மற்றும் டிசைன் பிரிவின் இயக்குனராக இருந்த போது, அதன் விற்பனை 10 மடங்காக அதிகரித்தது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிறுவனத்தின் கொரியன் நாட்டவர் அல்லாத நிர்வாகிகளில் திறமை வாய்ந்தவர்களில் ஒருவரும், மூத்த வடிவமைப்பு அதிகாரியுமான பீட்டர் செரேயர், பென்ட்லியில் இருந்து வந்த லூக் டான்கர்வோல்க் மற்றும் BMW-யில் இருந்து வந்த ஆல்பர்ட் பியர்மேன் ஆகியோருடன், சீயோலில் உள்ள ஹூண்டாயின் தலைமையகத்தில் இவரும் இணைந்து செயலாற்ற உள்ளார்.
உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்களின் பட்டியலில் கியா மோட்டார்ஸ் உடன் ஒருமித்து 5வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ள ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம், வருமானம் குறைந்த தயாரிப்புகளால் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க, உயர்தர வருமானமிக்க பிரிமியம் பிரிவில் களமிறங்க இலக்கு நிர்ணயித்து, கடந்த நவம்பர் மாதம் ஜெனிசிஸ் என்ற ஆடம்பர கார் தயாரிப்பு துணை நிறுவனத்தை அறிவித்து, அறிமுகம் செய்தது.
மேலும் வாசிக்க