• English
  • Login / Register

ஈகோஸ்போர்ட்டின் போட்டியாளரான செவ்ரோலேட் நிவா-வின் காப்புரிமை பெற்ற படங்கள் கசிந்தன

published on டிசம்பர் 23, 2015 06:14 pm by அபிஜித் for போர்டு இக்கோஸ்போர்ட் 2015-2021

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

ஃபோர்டு ஈகோ ஸ்போர்ட்டின் போட்டியாளரான செவ்ரோலேட் நிவா காரின் உட்புற அமைப்பு படங்களை தொடர்ந்து, காப்புரிமை பெற்ற படங்கள் கசிந்துள்ளன. வரும் 2017 ஆம் ஆண்டு இந்த கச்சிதமான SUV அறிமுகம் செய்யப்படலாம் என்ற நிலையில், இந்தியாவிற்கும் கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு மாஸ்கோ ஆட்டோ ஷோவில், இந்த காரின் தொழிற்நுட்ப பதிப்பு வெளியிடப்பட்டது.

இந்த படங்களை உற்று கவனிப்பதன் மூலம் இந்த காரில் உள்ள ஹெட்லெம்ப்கள், நிழல் உருவம், டெயில்கேட் மீதான ஸ்பேர் வீல் மற்றும் பின்புற விண்டுஸ்கிரீனை சூழ்ந்துள்ள திரை உள்ளிட்ட பல காரியங்கள் ஈகோஸ்போர்ட்-டை ஒத்து காணப்படுவதை அறியலாம். அதே நேரத்தில் செவ்ரோலேட்டின் டிசைன் திட்டத்தின் அடிப்படையில் அமைந்த முன்புற கிரில் உடன் அதன் அறுங்கோண வடிவிலான லேஅவுட்டை பெற்றுள்ளது.

இதன் உட்புற படங்களின் மூலம், முழு கருப்பு நிறத்திட்டம் மற்றும் பியனோ கருப்பு உட்புற அமைப்பு உடன் கூடிய கிரோம் குறிப்புகள் போன்ற வழக்கமான செவ்ரோலேட்டின் உட்புற அமைப்பை மேலோட்டமாக சார்ந்து காணப்படுகிறது. மியூசிக் சிஸ்டத்தை பொறுத்த வரை, துவக்க வகையை சேர்ந்தது என்பதால் டச்ஸ்கிரீனை காண முடிவதில்லை. பெரும்பாலும் இது ஒரு உண்மையான தயாரிப்பு பதிப்பின் படங்களாக இருக்க வாய்ப்பில்லை என்பதால், பிற்காலத்தில் இதில் ஒரு டச்ஸ்கிரீனை எதிர்பார்க்கலாம். மேலும் உட்புற அமைப்பின் படங்களை உற்று கவனித்தால், போனட் விரிவாக்கம் முன்பக்க விண்டுஸ்கிரீன் முடிவை எட்டுவதாக காண முடிவதில்லை. இதிலிருந்து இந்த உட்புற கூட்டை சோதனை பணிக்காக மட்டுமே பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். பொதுவாக ஒரு வாகனத்தின் வளர்ச்சி அடைந்த பருவத்தில் தான் இது நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிபுற அமைப்பில் தடித்த ஷோல்டர் வரிகள், சுற்றிலும் ஏகமாக அமைந்த பிளாஸ்டிக் கிளாடிங், நுட்பமான வீல் ஆர்ச்சுகள் (செவ்ரோலேட்டில் வழக்கமானது) மற்றும் ரூஃப் ரெயில்கள் ஆகியவை இக்காரில் உள்ள முக்கிய காரியங்கள் ஆகும். மற்றொருபுறம், ஒரு ஸ்போர்ட்டியான இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் மற்றும் பன்முக செயல்பாடு கொண்ட ஸ்டீயரிங் வீல் ஆகியவற்றை உட்புற அமைப்பு கொண்டுள்ளது.

மேலும் வாசிக்க

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Ford இக்கோஸ்போர்ட் 2015-2021

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience