• English
    • Login / Register

    ஹயுண்டாய் க்ரேடா vs ஈகோஸ்போர்ட் ஒப்பீடு – இரண்டு ஜாம்பவான்களின் மோதல்

    அபிஜித் ஆல் ஜூலை 17, 2015 05:03 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

    11 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    வரும் ஜூலை இருபத்தி ஒன்றாம் தேதி முதல் கச்சிதமான, ஸ்டைலான உயிரோட்டமுள்ள ஈகோஸ்போர்ட் கார்களுக்கு கட்டுக்கடங்காத வேகத்துடனும் கோபத்துடனும் ஒரு எதிரி கொரியாவில் இருந்து வரப்போகிறது. எதிரி என்றவுடனே ஏதோ போரைப்பற்றி நாங்கள் பேசப்போகிறோம் என்று நினைத்து விடாதீர்கள். அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஹயுண்டாய் க்ரேடா கார்களை தான் நாங்கள் அவ்வாறு குறிப்பிடுகிறோம்.இவ்வாறு எங்களை யோசிக்கவைத்த காரணங்களை ஒவ்வொன்றாக கீழே குறிப்பிட்டுள்ளோம்.

    ஹயுண்டையின் புதிய ப்ளுயடிக் வடிவமைப்பு கோட்பாடான – ப்ளுயடிக் டிசைன் 2.௦ பின்பற்றி தயாரிக்கப்பட்ட ஏராளமான ஸ்டைலான வாகனங்களை இன்று சந்தையில் காண முடிகிறது. க்ரேடா கார்களும் அதே ப்ளுயடிக் டிசைன் 2.௦ கோட்பாட்டை பின்பற்றி வடிவமைக்கப்பட்டு கம்பீரமாக தோற்றம் அளிக்கிறது, திகைக்க வைக்கும் ப்ரொஜெக்டர் ஹெட்லாம்புகள், அசத்தும் முன்புற மற்றும் 17 - இன்ச் டயமன்ட் கட் அலாய்ஸ் என பக்கவாட்டு தோற்றமும், பந்தய கார்களைப் போன்ற நேர்த்தியான பின் புற தோற்றமும் பார்பவரை பரவசப்படுத்துகிறது

    இடவசதியைப் பொருத்தமட்டில் ஈகோஸ்போர்ட் கார்கள் க்ரேடா கார்களை விட சற்று பின்தங்கி இருப்பதை காண முடிகிறது. ஈகோஸ்போர்ட் கார்கள் நான்கு மீட்டருக்கும் குறைவான அளவில் தான் உட்புற இடவசதியைக் கொண்டுள்ளது. இதனால் பின்புற இருக்கைகளில் மூன்று பேர் அமரும் போது மிக இடுக்கமாக உணர்வதை தவிர்க்க முடியவில்லை. இதுவே க்ரேடா கார்களில் 4.2 மீட்டர் அளவுக்கு உட்புற இடவசதி இருப்பதனாலும் சற்று அகலமான பின்புற உடலமைப்பினாலும் இந்த இட நெருக்கடி க்ரேடா கார்களில் சிறிதும் இல்லை. இந்த ஒரு விஷயத்தைத் தவிர ஈகோஸ்போர்ட் கார்கள் மற்ற எல்லா விஷயங்களிலும் க்ரேடா கார்களுக்கு இணையானது என்று சொல்லி விட முடியும்.

    ஈகோஸ்போர்ட் கார்களில் பொருத்தப்பட்டுள்ள 1.5 லிட்டர் TDCi என்ஜின்கள் 91 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது, இதை எந்த வகையிலும் க்ரேடாவின் 1.6 லிட்டர் CRDi என்ஜினுடன் ஒப்பிடுகையில் மந்தமானது என்று சொல்லி விட முடியாது. மேலும் போர்ட் வாகனங்களின் தனித்துவம் மிக்க சஸ்பென்சன் மற்றும் சேசிஸ் அமைப்பு, எவ்வளவு வேகமாக வாகனம் ஓடினாலும் சுகமான பயணத்தை தரும் வகையில் அமைக்கப்படுள்ளது.. இது மட்டுமா? 1 லிட்டர் ஈகோபூஸ்ட் மோட்டார் 125 பி எச் பி சக்தியை வெளிப்படுத்த வல்லது,.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் இந்த வகை கார்களில் முதல் முறையாகவும் ஹ்யுண்டாய் க்ரேடாவில் 127 பி எச் பி சக்தியை வெளிப்படுத்தும் விதமாக க்ரேடாவின் டீஸல் எஞ்சின் ஆறு ஆட்டோமாடிக் கியர் வசதியுடன் பொருத்தப்பட்டு நம்மை திகைப்பில் ஆழ்த்துகிறது.

    was this article helpful ?

    Write your Comment on Hyundai கிரெட்டா 2015-2020

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience