சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2016 கேமரோ-வின் செயல்திறன் விவரங்களை செவ்ரோலேட் வெளியிட்டது

published on செப் 15, 2015 11:46 am by raunak for செவ்ரோலேட் கேமரோ

புதிய பம்பல்பீ ஆன கேமரோ SS அதிவேக காராக வந்து, 4 விநாடிகளில் மணிக்கு 100 கி.மீ வேகத்தை அடைந்து, முஸ்டாங் GT-யை விட வேகமானதாக உள்ளது. இதற்கு அதிக சக்தி வாய்ந்த என்ஜினும், 177 கிலோ எடை குறைப்பும் காரணங்களாகும்.

ஜெய்ப்பூர்:ஆறாவது தலைமுறையை சேர்ந்த புதிய கேமரோவின் செயல்திறன் விவரங்களை செவ்ரோலேட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதுவரை வெளியாகி உள்ள SS-களிலேயே 2016 கேமரோ SS தான் மிகவும் வேகமானது என்று செவ்ரோலேட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் ஆட்டோமேட்டிக் பதிப்பின் மூலம் 4 விநாடிகளில் மணிக்கு 60 மைல் (சுமார் மணிக்கு 100 கி.மீ) வேகம் என்ற மைல்கல்லையும், மேனுவல் (கால் மைல் – 12.3 விநாடிகள்) பொருத்தப்பட்ட நிலையில், 4.3 விநாடிகளையும் எடுத்துக் கொள்கிறது. புதிய SS வாகனம், 6.2 V8 455-hp மோட்டார் உடன் இணைக்கப்பட்ட புதிய 8-ஸ்பீடு பெடல்-ஷிஃப்ட் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் இயக்கப்படுவதால், 2015 முஸ்டாங் GT-யை விட வேகமாக இயங்க முடிகிறது.

இது குறித்து கேமரோவின் மூத்த என்ஜினியரான அல் ஓபன்ஹைஸர் கூறுகையில், “1960-களில் இருந்த பிரபலமான கார்களுக்கு, கேமரோ 2.0 L டர்போவின் செயல்திறன் சவாலாக இருந்தது. 0.97 g கார்னரிங் உட்பட கேமரோ SS-ன் செயல்திறன் மூலம், சந்தையில் உள்ள 2+2 கூபேகளில், மிகவும் திறன் வாய்ந்தவைகளில் ஒன்றாக மாறி உள்ளது. செயல்திறன் அளவுகள், காரின் பாதி காரியங்களை மட்டுமே தெரிவிக்கும். ஏனெனில் பயணிகள் மற்றும் பொருட்கள் இல்லாத நிலையில், மிகவும் எடை குறைவாக உள்ள புதிய கேமரோ, சக்கரங்களின் வேகத்தில் பொறுப்புடனும், சுறுசுறுப்பாகவும் உள்ளது. மிகவும் சக்தியுடன் கூடிய பிரேக் பயன்பாடு, ஓரங்களில் வேகமாக பயணித்தல், வேகமான முடுக்கம் ஆகிய பண்புகள் மூலம் ஓட்டுவதற்கு இதுவரை இல்லாத குதூகலம் ஏற்படுகிறது” என்றார்.

6-வது தலைமுறையின் மற்ற கேமரோ கூபே மாடல்களும் ஈடான வேகம் கொண்டுள்ளன. 6-ஸ்பீடு மேனுவல் கொண்டு 275-hp (205) 2.0L டர்போ மூலம் 5.4 விநாடிகளில் மணிக்கு 0 – 60 மைல் வேகத்தை எட்டி, 14.0 விநாடிகளில் கால் மைல்லை அடைகிறது. 335-hp (250 kW) 3.6L V-6 மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கொண்ட கேமரோ, 5.1 விநாடிகளில் மணிக்கு 60 மைல் வேகத்தை எட்டி, கால் மைல்லை 13.5 விநாடிகளில் அடைகிறது.

r
வெளியிட்டவர்

raunak

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது செவ்ரோலேட் கேமரோ

Read Full News

trendingகூபே சார்ஸ்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை