செவ்ரோலேட் ட்ரையல்ப்ளேஸர்: அமேசான்.இன்-னில் கிடைக்கிறது

published on அக்டோபர் 15, 2015 01:12 pm by அபிஜித் for செவ்ரோலேட் ட்ரையல்

  • 12 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

தனது அடுத்து வரவுள்ள ட்ரையல்ப்ளேஸர் SUV-யின் விற்பனையை எளிமைப்படுத்தும் வகையில், செவ்ரோலேட் இந்தியா நிறுவனம், அமேசான் இந்தியா நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்கள் நேரடியாக ஷோரூமிற்கு சென்று வாகனத்தை முன்பதிவு செய்யும் வசதியும் உண்டு. ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி, இம்மாதம் (அக்டோபர்) 21 ஆம் தேதி முதல் துவங்குகிறது.

இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான திரு.அரவிந்த் செக்சேனா கூறுகையில், “சக்திவாய்ந்த காரான செவ்ரோலேட் ட்ரையல்ப்ளேஸருக்கு, ஒரு சக்திவாய்ந்த அறிமுகம் தேவை. இதற்காகவே, நாங்கள் அமேசான் இந்தியாவுடன் கூட்டணி அமைத்து, வாடிக்கையாளர்களின் கார் வாங்கும் முறையில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம். வளர்ந்து வரும் இந்திய இ-காமர்ஸ் மூலம் முதல் முறையாக ஒரு பிரிமியம் வாகனத்தின் விற்பனையை ஊக்கவிக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளதால், செவ்ரோலேட் ட்ரையல்ப்ளேஸர் வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் ஒரு புதுவிதமான மற்றும் தனித்தன்மையுள்ள அனுபவத்தை அளிக்க ஏதுவாக அமையும்” என்றார்.

இதையும் படியுங்கள்: ட்ரையல்ப்ளேஸரின் விபரங்களை செவ்ரோலேட் இந்தியா, தனது இணையதளத்தில் வெளியிடுகிறது!

திரு.செக்சேனா மேலும் கூறுகையில், “கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் ஆன்லைனின் வாடிக்கையாளர்களாக ஏறக்குறைய 40 மில்லியன் பேர் இருந்த நிலையில், இந்த ஆண்டு ஏறக்குறைய 65 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளதால், இ-காமர்ஸின் ஆதாரங்கள் எங்களை கட்டாயப்படுத்துவதாக அமைகிறது. அதேபோல எங்களின் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர், ஒரு வாகனத்தை வாங்குவதற்கு முன்பே, அதை குறித்து இணையதளத்தில் படித்து அறிந்து வைத்துள்ளது தெரிகிறது. எனவே பிரிமியம் பிரிவை சேர்ந்த செவ்ரோலேட் காரை வாங்குவதற்கு, வாடிக்கையாளர்களுக்கு எளிமையான செயல்முறை கொண்ட இந்த புதிய அணுகுமுறையிலான விற்பனையை அளித்துள்ளோம்” என்றார்.

இது குறித்து அமேசான் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நாட்டின் மேலாளரான அமித் அகர்வால் கூறுகையில், “நாடெங்கிலும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுக்கு, இந்த வசதியை ஏற்படுத்தி தருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவில் டிஜிட்டல் வர்த்தகம் வளர்ந்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களின் வாங்கும் பழக்கங்களிலும் மாற்றங்களை காண முடிகிறது. எனவே இந்தியாவில் நடைபெறும் வாங்கும் தன்மை மற்றும் விற்பனை முறைகளில், மாற்றம் செய்ய நாங்கள் தொடர்ந்து வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அந்த முயற்சிக்கு, இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்” என்றார்.

முழு உலகில்: 2016 கேமரோவின் செயல்திறன் விபரங்களை செவ்ரோலேட் வெளியிடுகிறது

செவ்ரோலேட் ட்ரையல்ப்ளேஸரை குறித்த முழு சிறப்பு அம்சங்கள் மற்றும் விபரங்கள், தற்போது போர்டலில் கிடைக்கிறது. இந்த SUV-யை ஒரு முன்கூறு தொகையை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். அதேநேரத்தில் வாடிக்கையாளரின் விருப்பத்தில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் இந்த முன்பணத்தை திரும்ப பெற்று கொள்ள முடியும்.

டொயோட்டா ஃபார்ச்யூனர் மற்றும் மிட்சுபிஷி பஜேரா ஸ்போர்ட் ஆகிய கார்களுடன், இந்த வலிமைமிக்க SUV போட்டியிட உள்ளது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது செவ்ரோலேட் ட்ரையல்

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience