கேப்டிவா இடத்தில் புதிய ட்ரெயில்ப்ளேசர் மாடலை அறிமுகப்படுத்தியது செவேர்லே; மேலும் 9 புதிய மாடல்களை 2020 ஆண்டிற்குள் அறிமுகப்படுத்த திட்டம்.
modified on அக்டோபர் 23, 2015 01:53 pm by nabeel for செவ்ரோலேட் ட்ரையல்
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
அமெரிக்காவின் மிகப் பிரபலமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் உலக அளவில் தனது வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவு செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் இந்தியாவில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு முதல் இதுவரை $1 பில்லியன் அளவுக்கு முதலீடு செய்துள்ளது. மேலும் ரூ. 6,400 கோடி( $1 பில்லியன்) வரை முதலீடு செய்து இந்தியாவில் வலுவாக காலூன்ற திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம். 2020 ஆம் ஆண்டு இறுதிக்குள் ஜிஎம் இந்தியா நிறுவனம் , முழுதும் இந்தியாவில் தயாரித்து , புதிதாக இன்னும் 10 மாடல்களை ( ஏற்கனவே உள்ள வாகனங்களின் மேம்படுத்தப்பட்ட வடிவம் மற்றும் புதிய மாடல்கள் என இரண்டையும் சேர்த்து ) அறிமுகப்படுத்தவுள்ளது.
இதையும் படியுங்கள் : செவேர்லே ட்ரெயில்ப்ளேசர் ரூ. 26.4 லட்சங்களுக்கு அறிமுகமானது.
செவர்லே தன்னுடைய ப்ரீமியம் SUV வகை காரான ட்ரெய்ல்ப்ளேசர் வாகனங்களை அக்டோபர் 21 ஆம் தேதி அறிமுகப்படுத்தியது . இந்த வாகனங்கள் தாய்லாந்து நாட்டில் முழுதும் தயாரிக்கப்பட்டு சிபியு(CBU) முறையில் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. செவர்லே நிறுவனத்தின் முந்தைய கேப்டிவா கார்களுக்கு மாற்றாக இந்த புதிய ட்ரெய்ல்ப்ளேசர் கார்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இந்த ப்ரீமியம் SUV பிரிவில் உச்சத்தில் இருந்த டொயோடா பார்ச்சுனர் வாகனங்களுக்கு சரியான போட்டியாக கேப்டிவா இருந்தது என்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இதைத் தவிர வரும் வருடங்களில் ஸ்பின் எம்பிவி வாகனங்களையும் களமிறக்க செவேர்லே திட்டமிட்டுள்ளது. இந்த வாகனங்கள் முழுதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும் என்றும் தெரிகிறது.
இவைகளைத் தவிர தற்போது புழக்கத்திலுள்ள மாடல்களை மேம்படுத்தியும் புதிய அடுத்த தலைமுறை மாடல்களை வெளியிடுவது சம்மந்தமாகவும் தீவிர ஆலோசனையில் செவேர்லே நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அடுத்த தலைமுறை கார்களில் முதலில் மேம்படுத்தப்பட்ட பீட் மற்றும் க்ரூஸ் கார்களே அறிமுகமாகும் என்றும் யூகிக்கப்படுகிறது. இவைகளைத் தவிர பீட் கார்களை அடிப்படையாக கொண்டு காம்பேக்ட் செடான் பிரிவிலும் ஒரு காரை 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்றும் தெரிய வருகிறது.
ஜெனெரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மேரி பர்ரா, "இந்தியாவில் செவர்லே நிறுவனம் ஒரு நீண்ட கால திட்டத்துடன் தனது செயல்பாடுகளை மேலும் சிறப்பாக்கி உள்ளது. இதன் மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு அற்புதமான வாகனங்களை எங்களால் கொடுக்க முடிவது மட்டுமல்லாமல் தகுதி வாய்ந்த இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஒரு உலக தரமிக்க உன்னதமான வாகன அனுபவத்தையும் தர முடியும் என்று அறுதியிட்டு கூறுகிறோம்" என்று கூறினார்.
இதையும் படியுங்கள் :