சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

செவர்லே இந்தியா தன் டீலர் நெட்வொர்கை இழக்கிறது.

published on நவ 05, 2015 04:59 pm by அபிஜித்

ஜெய்பூர்: இந்த அமெரிக்க கார் தயாரிப்பாளருக்கு இது போதாத காலம் போல் தோன்றுகிறது. கடந்த சில மாதங்களாக விற்பனையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியின் காரணமாக செவேர்லே டீலர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பலர் தங்கள் வியாபாரத்தை சுருக்கியும் , வேறு சிலர் தங்கள் டீலர்ஷிப்பை திருப்பி ஒப்படைத்தும் வருகிறார்கள். 280 ஆக இருந்த டீலர்ஷிப் எண்ணிக்கை 223 ஆக குறைந்துள்ளது.

கடந்த வருடத்தின் விற்பனை எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் 33% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் 2015 வரையிலான இரண்டு காலாண்டில் 19, 299 வாகனங்கள் ( அனைத்து பிரிவு வாகனங்களின் மொத்த விற்பனை ) மட்டுமே விற்பனை ஆகி உள்ளன. இந்த எண்ணிக்கையை தற்போது உள்ள 223 டீலர்ஷிப் மையங்களுக்கு சமமாக பகிர்ந்தால் ஒரு டீலர்ஷிப் மையம் மாதம் ஒன்றுக்கு வெறும் 15 வாகனங்களையே விற்பனை செய்துள்ளன.

மேலும் தனது டீலர்ஷிப் நெட்வொர்கை விரிவு படுத்தாமல் தற்போது உள்ள டீலர்கள் மீது கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. கடந்த ஜூலை 2015 ல் 6,400 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக செவேர்லே அறிவித்திருந்தது. இந்த முதலீட்டை தொடர்ந்து ஹலோல் தொழிற்சாலையில் தயாரிப்பு நிறுத்தப்படும் என்றும் தாலேகாவுன் தொழிற்சாலையின் உற்பத்தி திறன் மேலும் கூட்டப்பட்டு , அடுத்தடுத்து 10 புதிய வாகனங்கள் இந்த தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் ஆண்டுகளில் விற்பனைக்கு வெளியிடப்படும் என்றும் தெரிகிறது.

GM இந்தியாவின் செய்தி தொடர்பாளர் இது பற்றி கூறுகையில், “ தாக்குபிடிக்கக் கூடிய அளவுக்கு வியாபார சூழலை எங்களுக்கும் டீலர்களுக்கும் உருவாக்கும் பொருட்டு கடந்த 18 மாதங்களில் பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளோம். டீலர்களின் ஆனந்மைகாக அவர்களின் விற்பனை லாபத்தினை (மார்ஜின்) மற்ற எந்த நிறுவனமும் வழங்காத அளவுக்கு அதிகப்படுத்தி உள்ளோம். வரும் ஆண்டுகளில் நாங்கள் 10 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ள நிலையில் தாக்குபிடிக்கும் அளவுக்கு மட்டும் அல்ல நல்ல லாபம் தரும் அளவுக்கும் விற்பனை உயரும் என்று டீலர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். “ மேலும் அவர் , “ இந்திய வணிகத்துறை அடிப்படைகள் மற்றும் டீலர்களின் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சி பற்றிய தொலைநோக்குடன் செயல்படுகிறோம் " என்றும் கூறினார்.

செவேர்லேவின் மிக சமீபத்திய அறிமுகம் கம்பீரமான ட்ரெயில்ப்ளேசர் SUV வாகனங்களாகும்.

பரிந்துரைக்கப்படுகிறது :


செவேர்லே ட்ரெயில்ப்ளேசர் ரூ. 26.4 லட்சங்களுக்கு அறிமுகமானது
செவ்ரோலேட் ட்ரையல்ப்ளேஸர்: அமேசான்.இன்-னில் கிடைக்கிறது
2016 கேமரோ-வின் செயல்திறன் விவரங்களை செவ்ரோலேட் வெளியிட்டது

வெளியிட்டவர்

அபிஜித்

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை