• English
  • Login / Register

செவர்லே நிறுவனத்தின் புதிய 4 மீட்டருக்கு குறைவான செடான் கார்களின் பெயர் பீட் எஸன்ஷியா

அபிஜித் ஆல் பிப்ரவரி 01, 2016 10:34 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 20 Views
  • ஒரு கருத்தை எழுதுக

தங்களது புதிய காம்பேக்ட் செடான்  கார்களை வரும் ஆட்டோ எக்ஸ்போவில் செவர்லே நிறுவனம் காட்சிக்கு வைக்க உள்ளது.  நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி, இந்த கார்களுக்கு எஸன்ஷியா என்று பெயரிடப்படும் என்றும் தெரிய வருகிறது. ஸ்விப்ட் டிசையர் , ஹயுண்டாய் எக்ஸ்சென்ட், ஹோண்டா அமேஸ் மற்றும் போர்ட் பீகோ ஆஸ்பயர் கார்களுக்கு போட்டியாக இந்த எஸன்ஷியா  கார்கள் களம் இறக்கப்பட உள்ளது.

இந்த புதிய எஸன்ஷியா கார்களில் தற்போதய  செவர்லே பீட் கார்களில் பயன்படுத்தப்பட்டு வரும் அதே 1.0 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர்  பெட்ரோல் எஞ்சின்கள் பொருத்தப்படலாம் என்றும் தெரிய வருகிறது. காரின் வெளிப்புற வடிவமைப்பு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி எந்த விதமான தகவலும் வெளியிடப்படாத நிலையில் , நிச்சயம் இந்த புதிய கார்களின் தோற்றம் தற்போதய பீட் கார்கள் போல் இல்லாமல் பெரிய அளவில் மாறுபட்டிருக்கும் என்று தெரிகிறது.  அதுவும் இந்த கார்கள்  2013 ஆம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருந்து வந்துள்ளது என்பதைப் பார்க்கும் போது , இந்த காரின்  வெளிப்புற வடிவமைப்பில்  பெரிய அளவிலான மாற்றங்கள் இந்த புதிய   எஸன்ஷியாவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இருப்பினும், உட்புற வடிவமைப்பைப் பொறுத்தவரை பீட் கார்களில் உள்ள அதே போன்ற  இன்டீரியர்ஸ் இந்த புதிய கார்களுக்கும் கொடுக்கப்படும் என்று யூகிக்கப்படுகிறது. 

இந்த காரைத் தவிர ,  எதிர்வரும் ஆட்டோ எக்ஸ்போவில் தங்களது MPV வகை வாகனமான ஸ்பின்,  கேமரோ ஸ்போர்ட்ஸ் கார் மற்றும் கொலரேடோ SUV ஆகிய கார்களையும் செவர்லே நிறுவனத்தினர் காட்சிக்கு வைக்க உள்ளனர். ஸ்பின் MPV வாகனங்கள் இந்த வருட இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டோ இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பார்வையாளர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரிப்பதற்காக மட்டுமே கொலரேடோ மற்றும் கமேரோ வாகனங்களை செவர்லே நிறுவனம் காட்சிக்கு வைக்கும் என்று தெரிகிறது.  இந்திய சந்தையில் தங்களது பிடி வேகமாக தளர்ந்து வரும் நிலையில், விற்பனை ஆகக்கூடிய அளவில் இன்னும் சில தயாரிப்புக்களை வரும்  ஆட்டோ  எக்ஸ்போவில் இந்நிறுவனம்  காட்சிக்கு வைக்க வேண்டியதும் இங்கே அவசியமாகிறது.      

மேலும் வாசிக்க

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience