கார்பன் ஃபைபர் மூலம் தயாரான லம்போர்கிணி ஹுராகேன் கார்: மான்ஸோரி நிறுவனத்தின் கருப்பு வீரன்
published on செப் 14, 2015 03:48 pm by manish for லாம்போர்கினி ஹூராகான்
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
சந்தைபடுத்தபட்ட பின்பு வாகனங்களின் செயல்திறனை அதிகாரிக்கும் திறமை ஜெர்மனியர்களுக்கு உண்டு என்பது, நாம் அனைவருக்கும் தெரிந்ததே. இதற்கு உதாரணமாக, பல பிரபலமான கார்களின் செயல்திறனை மேம்படுத்திய பிரபஸ் நிறுவனத்தை மேற்கோள் காட்டலாம். தற்போது, ஜெர்மனியர்கள் கவர்ச்சியான சூப்பர் கார் பிரிவிலும் அடி எடுத்து வைத்துள்ளனர். மான்ஸொரி நிறுவனம், அடிப்படையில் சொகுசு கார்களை சீர் செய்யும் ஒரு ஜெர்மானிய நிறுவனம். இந்நிறுவனம் தற்போது, லம்போர்கிணி ஹுராகேன் காரில் ஏற்கனவே பொருத்தப்பட்ட 5.2 லிட்டர் V10 இஞ்ஜினை சிறிது மாற்றி அமைத்து, அதன் செயல்திறனை 1,250 PS குதிரை திறனும், 1,000 Nm உந்து சக்தியும் அளிக்கக் கூடியதாக மாற்றி அமைத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இத்தகைய மாற்றம் எப்படி சாத்தியமாகிறது என்றால், கூடுதலாக இரண்டு இரட்டை டர்போ சார்ஜர்களை, ஏற்கனவே இருந்த இஞ்ஜினில் பொருத்தி அதன் செயல்திறனை இந்நிறுவனம் அதிசயிக்க தக்க வகையில் மேம்படுத்தி உள்ளது.
இந்த கூடுதல் செயல்திறன் மூலம், லம்போர்கிணி ஹுராக்கேன் காரை முடுக்கி விட்டதும் 2.7 வினாடிக்குள், பூஜ்யத்தில் இருந்து எகிறி மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகம் வரை அதிகரிக்க முடியும். இந்த காரின் 4 சக்கரங்களும் இயங்கக் கூடியதாக 4 வீல் ட்ரைவ் அமைப்பில் வருவதால், நம்பமுடியாத அளவு அருமையாக கையாள முடியும். மேலும், இந்த 4 வீல் ட்ரைவ் திறன், அதிகப் படியாக மணிக்கு 340 கிலோ மீட்டர் வரை ஓட்டிச் செல்ல வகை செய்கிறது.
இஞ்ஜின் மட்டும் இல்லாமல், கலை உணர்வுடன் புதுப்பிக்கப்பட்ட வடிவமும், இதன் செயல்திறனை அதிகாரிக்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. இந்த காரை வடிவமைக்க, அதிகமான கார்பன் ஃபைபர் உபயோகித்துள்ளனர், ஏனெனில், இது காற்றியக்கவியலை (ஏரோ டைனமிக்ஸ்) அதிகரிக்கச் செய்யும். மேலும், இந்த கார்பன் ஃபைபர் மூலம் கார் வடிவமைக்கும் தொழில்நுட்பத்தின் உதவியால், லம்போற்கினி ஹுராக்கேன் காரை மேலும் 30 மிமீ அளவு முன்புறத்திலும், 40 மிமீ அளவு பின்புறத்திலும், மான்ஸோரி நிறுவனம் அகலப்படுத்தியுள்ளது. மேலும், சில மெக்கானிக்கல் பாகங்களை சேர்த்து, இதன் இஞ்ஜின் குளிர்ச்சியாக இருப்பதற்கு உதவுகிறது.
ஹுராகேன் காரின் பின்புறத்தில் உள்ள சக்கரங்கள் இரண்டும் 21 அங்குலத்தில் திடமான ஃபோர்ஜ்ட் அலாய் கலவையால் ஆனவை. இதன் முன்புற சக்கரங்களோ, சற்றே சிறியதாக 20 அங்குலத்தில் திடமான ஃபோர்ஜ்ட் அலாய் மூலம் ஆனவை. இந்த அமைப்பு, காருக்கு மிகவும் திடகாத்திரமான உருவத்தை கொடுக்கிறது. இந்த அலாய் கம்பிகள் மீது 245/ZR20 டயர்கள் முன்புறத்திலும், 325/25 ZR 21 டயர்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டுள்ளன. காரின் உட்புறத்தில், தோல் மற்றும் அல்கெண்டாரா மூலம் அலங்கரித்துள்ளனர். ஓட்டுனருக்காக பிரத்தியேகமாக, புதிய அலுமினிய பெடல்கள் பொருத்தப்பட்டு கவர்ச்சியாக உள்ளன. லம்போர்கிணி நிறுவனம், தனது அவேண்டாடர் காரில் உள்ளதைப் போலவே விமான தொழில்நுட்பத்தை, இந்த காரிலும் மீண்டும் பயன்படுத்தி உள்ளது. மான்ஸோரி நிறுவனம், இந்த ஒப்புமையை மாற்றாமல், ஹுராகேன் காரின் ஆகாய விமானத்தைப் போல தோற்றம் உள்ள முன்புறத்திற்கு பச்சை விளக்கு காட்டிவிட்டது மகிழ்ச்சியான செய்தி.