புகாட்டியின் விஷன் கிரான் டூரிஸ்மோ திட்டம், அறிமுகப்படுத்துவதற்கு முன்பே வெளியிடப்பட்டது (பட தொகுப்பு உள்ளே)
published on செப் 04, 2015 05:46 pm by nabeel
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்த மாதத்தின் இறுதியில் நடக்க இருக்கும் பிராங்க்ஃப்பர்ட் கார் காட்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கும் புகாட்டி நிறுவனம், தனது விஷன் கிரான் டூரிஸ்மோ திட்டத்தின் படங்களை வெளியிட்டுள்ளது. மொத்தம் 28 கார் உற்பத்தியாளர்கள், விஷன் கிரான் டூரிஸ்மோ திட்டத்தில், பங்கேற்கின்றனர். இந்த திட்டம், எப்போதும் தொடர்ச்சியாக புதுப்புது வடிவங்களை உருவாக்கும் காசுனோரி யாமௌசி அவர்கள் உருவாக்கிய திட்டமாகும். 2013 ஆம் ஆண்டு, அவர் தனது நெடுநாள் கனவான 2 இருக்கைகளைக் கொண்ட பந்தைய காரைப் பற்றி அவரது திட்டத்தை காண்பித்துக் கொண்டிருக்கும்போது, இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. ஹுண்டாய் நிறுவனமும், தனது N 2025 விஷன் கிரான் டூரிஸ்மோ கருத்து திட்டத்தை, 2015 பிரங்க்ஃபர்ட் மோட்டார் கண்காட்சியில் வெளியிடுவதற்கு முன்பே அதன் அறிமுகப் படங்களை, இந்த வார தொடக்கத்தில் வெயிட்டது.
இந்த திட்டத்தின் கருத்து, திட்டவட்டமாக புகாட்டியின் எதிர்கால வடிவமைப்பு தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இத்தகைய தத்துவத்தை இதற்கு முந்தைய சிரோன் மாடலிலும், சென்ற சில வாரங்களுக்கு முன் வெய்ரோன் மாடலிலும் பார்க்க முடிந்தது. இந்த காரில், புதிய பெரிய முட்டு தாங்கிகளும்; 4 வட்ட வடிவமான விளக்குகள் பொருத்தப்பட்ட முன்புற விளக்குகளும்; மற்றும் புகாட்டியின் முத்திரையை அழுத்தமாகவும் தெளிவாகவும் பதித்த அதன் கிரில்லும் பொருத்தப்பட்டுள்ளது. காரின் உட்புறத்தில், எதிர்காலத்தில் பிரபலமாக இருக்கப்போகும் அருமையான பந்தைய அமைப்பை, புகாட்டி உருவாக்கி உள்ளது. இதில், ஒரு புதிய ஓட்டு சக்கரமும் (ஸ்டியரிங் வீல்), முழுவதும் இலக்கமயமான கருவிகளைக் கொண்ட அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் பின்புற இறுதியில் ஒரு பெரிய குழிவான ஸ்பாய்லர், ஒரு நீண்ட மெல்லிய நிறுத்த விளக்கு (ப்ரேக் லைட்), மற்றும் 4 குழல்களைக் கொண்ட காற்று வழிப்போக்கி போன்றவை பொருத்தப்பட்டுள்ளன. புகாட்டி, இதன் வடிவமைப்பைப் பற்றி பேசும் போது- வேய்ரான் சகாப்தம் முடிந்ததும், தனது அடுத்த வெற்றி அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கு, இந்த காரின் புதிய வடிவம் மற்றும் வடிவமைப்பு வழிமுறையை இந்த நிறுவனமே தயார் செய்துள்ளது, என்று குறிப்பிட்டுள்ளது.
புகாட்டியின் வடிவமைப்பு தலைவரான ஆசிம் அன்ஷெய்ட், விஷன் கிரான் டூரிஸ்மோ திட்டத்தை அறிவிக்கும் அதே வேளையில், “புகாட்டியின் வடிவமைப்பு மரபணு, அதன் பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய கட்டத்தை அடைந்துள்ளது. இந்த திட்டத்தின் சரியான நோக்கில் பார்க்கும் போது, எங்களது விஷன் கிரான் டூரிஸ்மோவின் கருத்து கார், நிச்சயமாக மிகைப்படுத்தப்பட்டு, அறுதியான செயல்திறன் சார்ந்ததாக இருக்கும்,” என்று கூறினார். வேய்ரான் ரக கார்களின் இறுதியான ‘லா ஃபைணல்’ என்ற சிறப்பு வெளியீட்டை, 2014 ஆம் ஆண்டு ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் பார்த்த போதே, இதுதான் இந்த பழம்பெரும் வரிசையில் இறுதியான வெளியீடு என்பதை இந்நிறுவனம் உறுதிபடுத்தியது.