• English
  • Login / Register

வேய்ரான் சக்ஸசரின் அதிகாரபூர்வமான பெயர் புகாட்டி சிரான்!

published on டிசம்பர் 03, 2015 12:52 pm by raunak

  • 20 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

ஏற்கனவே சிரான் வாகனத்திற்கு 100-க்கும் மேற்பட்ட ஆர்டர்களை பெற்றுள்ளதாக புகாட்டி கூறுகிறது. 2016 ஜெனீவா மோட்டார் ஷோவில் இதன் சர்வதேச அளவிலான அரங்கேற்றம் நடத்தப்பட உள்ளது.

வேய்ரான் சக்ஸசரின் பெயரை புகாட்டி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி இந்த வாகனத்திற்கு சிரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. வரும் 2016 ஆம் ஆண்டு நடைபெற உள்ள 86-வது ஜெனீவா மோட்டார் ஷோவில், இந்த புதிய ஹைப்பர் காரின் சர்வதேச அளவிலான அரங்கேற்றத்தை நடத்த, பிரான்ஸ் வாகன தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த வாகனத்தை குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு காண்பித்த பிறகு, புகாட்டி நிறுவனம் கூறுகையில், ‘சிரானை குறித்த எங்கள் வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் கவனிக்கத்தக்கவையாக உள்ளன’ என்கிறது.

இது குறித்து புகாட்டி ஆட்டோமொபைல்ஸ் S.A.S.-யின் தலைவர் வோல்ஃப்கேங் துர்ஹைம்மர் கூறுகையில், “சிரானின் உருவாக்கத்தை குறித்து சுருக்கமாக, ஒரே வரிசையில் கூற முடியும். இதுவே ஆட்டோமொபைல் துறையின் வரலாற்றில் பெரும்பாலும் மிக சிறியதாக இருக்கலாம்: நாம் மிகவும் சிறந்ததை உருவாக்க, குறிப்பிடத்தக்க வகையில் சிறந்தது.

எல்லா பிரிவிலும் ஒரு புதிய தரத்தை சிரான் நிர்ணயிக்கும். நாங்கள் உலகின் அதிக சக்தி வாய்ந்த, வேகமான, அதிக ஆடம்பரமான மற்றும் அதிக எக்ஸ்க்ளூசீவ் தயாரிப்பைக் கொண்ட சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரை தொடர்ந்து தயாரிப்போம். இது புகாட்டி மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களின் கூற்று ஆகும்” என்றார்.

தற்போது அதன் கடைசிக்கட்ட சோதனையில் சிரான் ஈடுபட்டுள்ளதாக, மோல்ஷியம் நகரை அடிப்படையாக கொண்ட இந்த வாகன தயாரிப்பாளர் கூறுகிறார். இதற்காக பல கண்டங்களில் சோதனை வாகனங்களை வைத்து, பலவிதமான சாலைகள் மற்றும் காலநிலைகளில் இந்த வாகனத்தின் செயல்திறன் சோதிக்கப்பட்டு வருகிறது. இந்த சிரான் என்ற பெயரின் பொருள் என்ன என்று நீங்கள் யோசிக்கக் கூடும். கடந்த 1920-கள் மற்றும் 1930-களில் இந்த பிராண்டிற்காக கிட்டத்தட்ட பல முக்கிய கிராண்டு பிரிக்ஸ்களை வென்ற ஒரு பழம்பெரும் ரேஸிங் டிரைவர் லூயிஸ் சிரானின் பெயரை மையப்படுத்தி, இந்த வாகனத்திற்கு பெயரிடப்பட்டுள்ளதாக, புகாட்டி தெரிவிக்கிறது.

துர்ஹைம்மர் மேலும் கூறுகையில், “இந்த லூயிஸ் சிரான் என்பதில், எங்கள் பிராண்டின் வரலாற்றில் ஒரு புதிய மாடலுக்கான ஒரு மதிப்பு மிகுந்த ஆதரவாளரை கண்டறிந்தோம். இன்றைய சிறந்த சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார்களில், அவரது காலத்தின் சிறந்த ரேஸிங் டிரைவர் மற்றும் மாபெரும் வெற்றியாளராக திகழ்ந்த புகாட்டி டிரைவரின் பெயர் என்று மேற்கூறிய இரண்டும் இலட்சிய அடிப்படையில் இணைவதை காணலாம்” என்றார்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience