• English
    • Login / Register

    2015 IAA ஃபிராங்க்பார்ட் மோட்டார் ஷோவில் மனதைக் கொள்ளை கொண்ட கார்கள்: புகாட்டி விஷன் கிரான் டூரிஸ்மோ மற்றும் ஹுண்டாய் என் 2025

    புகாட்டி வேய்ரான் க்காக செப் 21, 2015 04:46 pm அன்று manish ஆல் திருத்தம் செய்யப்பட்டது

    • 13 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    IAA மோட்டார் ஷோ, எப்போதுமே சர்வதேச வாகன உலகுடன் தொடர்புடைய அனைவருக்கும் ஒரு உன்னதமான இடமாக இருந்து உள்ளது. இந்த ஆண்டும் அதே கோலாகலத்துடன், ஃபிராங்க்பர்ட் மோட்டார் ஷோ தற்போது நடந்தேறிக் கொண்டிருக்கிறது. மீண்டும், நம் மனதைக் கொள்ளைகொள்ளும் பிரத்தியேகமான பல விதமான கார்களை, கார் உற்பத்தியாளர்கள் இங்கு காட்சிக்கு வைத்துள்ளனர். இந்த 2015 ஃபிராங்க்பர்ட் மோட்டார் ஷோவில், நாம் இது வரை பார்த்தறியாத கேட்டறியாத வித்தியாசமான இரண்டு விதமான கார்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

    புகாட்டியின் கிரான் டூரிஸ்மோ கோட்பாடு

    புகாட்டி நிறுவனம், எதிர்காலத்தில் தான் உருவாக்கப்போகும் புது விதமான கார்களை பற்றிய கோட்பாட்டை, தனது அறிக்கையில் விவரித்தது. ஃபிரெஞ்சு கார் தயாரிப்பாளரான புகாட்டி நிறுவனத்தின் தலைவர், வொல்ஃப்காங் டர்கிமர் இது பற்றி கூறும் பொது, “வேய்ரான் காரின் திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, புகாட்டி நிறுவனம் தொடங்கவிருக்கும் தனது புதிய பயணத்தில், ‘புகாட்டி விஷன் கிரான் டூரிஸ்மோ’ என்பது முதல் நிலையாக இருக்கும்,” என்றார்.

    “இது உண்மையாக நெடுநாள் ஆகாது,” என்று அவர் மேலும் கூறினார். 1920 கள் மற்றும் 1930 களில் புகாட்டியின் பந்தைய கார்களின் வடிவமைப்பு, ஒரு அடிப்படையாகவும், உத்வேகத்தை தூண்டுவதாகவும் இருந்தது. 1937 மற்றும் 1939 போன்ற வருடங்களில் புகாட்டி லேமான்ஸ் பந்தயங்களில் வென்றது. ‘விஷன் கிராண் டூரிஸ்மோ’ திட்டமும், இத்தகைய நீளமான, நேரான பிரிவுகளைக் கொண்ட பந்தைய வழித்தடங்களில் அதி வேகமாக ஓடி வெற்றி பெருவதற்காகவே, பிரத்தியேகமாகவும் திறமையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    ஹுண்டாயின் N 2025 விஷன் கிரான் டூரிஸ்மோ

    இந்த கொரியன் கார் தயாரிப்பாளரின் புதிய கோட்பாட்டில் வெளிவரும் இந்த கார், 872 குதிரைத்திறனை உள்ளடக்கியதாக இருக்கும். ஹைட்ரஜன் எரிசக்தி அமைப்புடன் ஒருங்கிணைக்கப்பட்ட, 4 சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டாரின் உதவியோடு, இத்தகைய மாபெரும் சக்தி இந்த காருக்கு சென்றடையும்.

    ஹுண்டாய் நிறுவனம், இதன் புதிய வடிவமைப்பு அம்ஸங்களைப் பற்றி கூறுகையில், “இந்த அமைப்புகளுக்கு உத்வேக தூண்டுகோலாக விண்வெளி பயணமும் மற்றும் அதன் சோதனைக் களமான ‘முரோக் டிரை லேக்’ ஆகியவை இருக்கிறன. ஏனெனில், இங்குதான் விமான ஓடிட்டுனர்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் தங்களது விண்வெளி பயணத்திற்கு தேவையான பயிற்சியை, தங்கள் உயிரைப் பணயம் வைத்து மேற்கொள்வர்”.

    மேலும், ஹுண்டாய் நிறுவனத்தின் உயர் செயல்திறன்மிக்க கார்களின் பிரிவில் வரவிருக்கும் இந்த N2025 கார், விரைவில் வர இருக்கும் N ஃபிராண்ட் காருக்கு சவால் விடுவது போல இருக்கும். தற்போது, உயர் செயல்திறன்மிக்க (ஹை பெர்ஃபார்மன்ஸ்) கார்களின் கூட்டணியில் உள்ள மெர்சிடிஸின் AMG மற்றும் BMW வின் M டிவிஷன் போன்ற கார்களுடன் தனது N பிராண்டை இணைக்க ஹுண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    இத்தகைய கார்களின் விலை உங்களுக்கு கட்டுபடியாக இல்லை என்றால், கவலைப்பட வேண்டாம். ஏனெனில், கிரான் டூரிஸ்மோ 6 என்ற வீடியோ கேம் மூலம், இந்த பெருறுவ கார்களின் ஸ்டியரிங் சக்கரத்தைப் பிடித்து ஓட்டி, மெய்நிகர் (விர்சுவல்) அனுபவம் பெற்று மகிழ்ச்சி அடைய முடியும்.

    was this article helpful ?

    Write your Comment on Bugatti வேய்ரான்

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் கான்வெர்டிப்ளே சார்ஸ்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience