சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

பகாடி காய்ரன் மீண்டும் கண்ணில் தென்பட்டது.

published on ஆகஸ்ட் 12, 2015 10:40 am by அபிஜித்

ஜெய்பூர்: பகாடி நிறுவனத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காய்ரன் கார் தோற்றம் வெகுவாக மறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு முறை லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஒரு விமான நிலையத்தில் கண்ணில் பட்டது. அந்த கார் அநேகமாக பெபல் கடற்கரைக்கு ஒட்டி செல்லப்பட்டு அங்கு கண்டிப்பாக வாங்கும் நோக்கம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் காட்சிக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

இந்த கார் அதிகப்படியான திரைகளைக் கொண்டு மறைகப்பட்டிருந்ததால் அதனுடைய வடிவமைப்பைப் பற்றி ஏதும் நாம் சொல்ல முடியவில்லை. எனினும் இதற்கு முந்தைய மாடலான வைரான் கார்களை விட இந்த கார்கள் ஸ்போர்ட்டியாகவும் நன்கு வடிவமைப்பு மாற்றப்பட்டும் இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.

காய்ரன் (பெயர் இன்னும் உறுதியாகவில்லை ) கார்கள் நான்கு டர்போக் களுடன் கூடிய அதே W16 8.0 ( இந்தமுறை வேகத்தை பன்மடங்கு பெருக்க மின்னூட்டப்படும்) என்ஜின்களை இந்த முறையும் தக்க வைத்துக் கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது. .அதுமட்டுமின்றி இந்த மோட்டாரும் ஒரு மின்சார மோட்டாருடன் இணைக்கப்படுவதால் இவை இரண்டும் இணைந்து 1500 ps என்னும் அளவுக்கு சக்தியையும்

1500nm என்னும் அளவுக்கு அசுரத்தனமான உச்ச பட்ச முறுக்கு விசையையும் தரும். இவை எல்லாம் போதாது என்று கணிசமான அளவு எடையும் குறைக்கப்படுள்ளதால் 0 – 100 கி.மீ வேகத்தை நம்பவே முடியாத இரண்டே இரண்டு வினாடிகளில் தொட்டு நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது. மேலும் உச்ச பட்ச வேகம் மணிக்கு 450 கி.மீ. என்று சொல்லும் போதே வியப்பில் நம் விழிகள் விரிகிறது. இந்த வேகம் வைரான் SS WRE கார்களை பின்னுக்கு தள்ளிவிட்டது என்றே சொல்லவேண்டும் . ஏனெனில் வைரான் கார்கள் அதிக பட்சமாக மணிக்கு 415 கி.மீ வேகத்தை தான் தொடும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது..

இந்த கார் அதிகாரபூர்வமாக 2016 ஆம் ஆண்டு மத்தியில் வெளியிடப்படும்

என்று எதிர்பார்கப்பட்டலும் காரின் மாதிரியை அதற்கு முன்னரே காட்சிக்கு வைப்பார்கள் என்றே தோன்றுகிறது..

நீண்ட நெடு நாட்களாக வேகமான கார் என்றால் அது வைரான் கார்கள் தான் என்னும் அளவுக்கு வேகமான கார்களுக்கு ஒரு அளவுகோளாக திகழ்ந்த இந்த காரை கொனிசெக் ரேஜிரா போன்ற ஹைபர் கார்கள் பின்னுக்கு தள்ளிவிடும் அளவுக்கு சிறப்பான செயல்பாட்டினை காட்டுகின்றன.. ஆகவே சூப்பர் கார்களின் ஒட்டுமொத்த தரத்தினில் ஒரு புத்துணர்ச்சி ஏற்படவேண்டிய காலம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது.

வெளியிட்டவர்

அபிஜித்

  • 13 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை