• English
  • Login / Register

பிஎம்டபுள்யு நிறுவனம் அதிரடி விலை குறைப்பு: மேக் இன் இந்தியா திட்டத்தினால் விளைந்த பலன் !

published on ஜூலை 13, 2015 05:29 pm by konark

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டெல்லி: பிஎம்டபுள்யு நிறுவனம் இந்தியாவிலேயே தன்னுடைய 50 சதவிகித கார்களை உற்பத்தி செய்வதன் பலானாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்  தங்களது கார்களின் விலையை பெருமளவு குறைத்து  புது விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.இந்த நடவடிக்கை வாடிக்கையாளர் மற்றும் பிஎம்டபுள்யு நிறுவனம் இருவருக்குமே நல்ல பலனை தரும் என்று எதிர் பார்க்க படுகிறது. பிஎம்டபுள்யு நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலை 8 கார் மாடல்களை இரண்டு தனி தனி தொழில்நுட்ப குழுக்களின் உதவியுடன் உற்பத்தி செய்யும் திறன் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

பிஎம்டபுள்யு நிறுவனத்தின் இந்திய தலைவர் பிலிப் வான் சஹர்  கூறுகையில் " எதிர்கால கார் விற்பனை சந்தை இந்தியாவின் கையில் என்று சொன்னால் அது மிகையில்லை.பரந்த இந்திய நாட்டின் கார் விற்பனை சந்தையை நீங்கள் பயன் படுத்தி கொள்ள விரும்பினால் இன்றே செயல் பட துவங்குங்கள். சந்தைக்கு ஏற்ப தயாரிப்புக்கள் இருக்க வேண்டும் என்ற எங்கள் உத்தியை பின் பற்றுங்கள். இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதற்கான எல்லா விதமான கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்கான  செயல்களை முடுக்கி விட்டுள்ளோம் . வாடிக்கையாளர் மற்றும் பிஎம்டபுள்யு நிறுவனம் இருவருமே பயன் படும் வகையான சூழலை உருவாக்கி உள்ளோம். மேலும் எங்களது பிரத்தியேகமான சொகுசு கார்களை கவர்ச்சிகரமான குறைந்த விலையில் விற்பனை செய்ய உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

தற்போது சென்னையில் உள்ள  தங்களது இந்தியாவின் ஒரே தொழிற்சாலையில் பின் குறிபிடப்பட்டுள்ள கார்களை உற்பத்தி செய்கிறது.

பிஎம்டபுள்யு 1 சீரீஸ் , 3 சீரீஸ் , 3 சீரீஸ்  க்ரான் டுரிஷ்மோ , 5 சீரீஸ் , 7 சீரீஸ் , பிஎம்டபுள்யு X1, X3 மற்றும் X5.
 
ஜூலை 2015 மாத பிஎம்டபுள்யு கார்களின் விலை பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

பிஎம்டபுள்யு 1 சீரீஸ்
பிஎம்டபுள்யு 118d (ஸ்போர்ட் லைன்) – INR 2,950,000
பிஎம்டபுள்யு 3 சீரீஸ்
பிஎம்டபுள்யு 320d (பிரஸ்டீஜ் எடிஷன்) – INR 3,490,000
பிஎம்டபுள்யு 320d (லுச்ஷுரி லைன் எடிஷன்) – INR 3,890,000
பிஎம்டபுள்யு 320d (ஸ்போர்ட் லைன் எடிஷன்) – INR 3,890,000

பிஎம்டபுள்யு க்ரான் டுரிஷ்மோ
பிஎம்டபுள்யு க்ரான் டுரிஷ்மோ (ஸ்போர்ட் லைன்) – INR 3,990,000
பிஎம்டபுள்யு க்ரான் டுரிஷ்மோ (லுச்ஷுரி லைன்) – INR 4,290,000
பிஎம்டபுள்யு 5 சீரீஸ்
பிஎம்டபுள்யு 520d (பிரஸ்டீஜ் எடிஷன்) – INR 4,490,000
பிஎம்டபுள்யு 520d (பிரஸ்டீஜ் Plus எடிஷன்) – INR 4,790,000
பிஎம்டபுள்யு 520d (லுச்ஷுரி லைன் எடிஷன்) – INR 4,990,000
பிஎம்டபுள்யு 530d (M ஸ்போர்ட்) – INR 5,990,000
பிஎம்டபுள்யு 7 சீரீஸ்
பிஎம்டபுள்யு 730Ld (பிரஸ்டீஜ்) – INR 9,250,000
பிஎம்டபுள்யு 730Ld (எமினன்ஸ்) – INR 10,650,000
பிஎம்டபுள்யு 730Ld (சிக்னேச்சர் ) – INR 12,520,000
பிஎம்டபுள்யு X1
பிஎம்டபுள்யு X1 sட்ரைவ்20d (xலைன்) – INR 3,790,000
பிஎம்டபுள்யு X3
பிஎம்டபுள்யு X3 xட்ரைவ்20d (Expஎடிஷன்) – INR 4,690,000
பிஎம்டபுள்யு X3 xட்ரைவ்20d (xலைன்) – INR 5,190,000
பிஎம்டபுள்யு X3 xட்ரைவ்30d (M ஸ்போர்ட்) – INR 5,990,000
பிஎம்டபுள்யு X5
பிஎம்டபுள்யு X5 xட்ரைவ்30d (Expஎடிஷன்) – INR 6,590,000
பிஎம்டபுள்யு X5 xட்ரைவ்30d (டிசைன் ப்யூர் எக்ஸ்பீரியன்ஸ்) – INR 6,990,000
பிஎம்டபுள்யு X5 xட்ரைவ்30d (டிசைன் ப்யூர் எக்ஸ்பீரியன்ஸ் 7 சீட்டர்) – INR 7,290,000

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience