• English
    • Login / Register

    இந்தியாவில் வெளியிடப்பட்டது ஃபேஸ்லிப்டட் Audi Q7 கார்

    ஆடி க்யூ7 க்காக நவ 28, 2024 11:12 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 132 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஆடி -யின் தொழிற்சாலையில் 2024 ஆடி Q7 கார் அசெம்பிள் செய்யப்படுகிறது.

    • வெர்டிகல் குரோம் இன்செர்ட்களுடன் புதிய கிரில் மற்றும் புதிய 19-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    • உள்ளே இது பழைய மாடலில் இருந்த அதே டேஷ்போர்டு செட்டப் உடன் வருகிறது. இதில் டூயல் டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள் இடம் பெற்றுள்ளன.

    • பனோரமிக் சன்ரூஃப், 4-ஜோன் ஏசி மற்றும் ஏடிஏஎஸ் ஆகியவை காரில் உள்ள வசதிகள் ஆகும்.

    • Q7 காரில் 3-லிட்டர் V6 டர்போ-பெட்ரோல் இன்ஜின் (345 PS/500 Nm) உள்ளது.

    • 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மூலம் பவர் அவுட்புட் நான்கு சக்கரங்களுக்கும் கொடுக்கப்படுகிறது.

    பிரீ ஆர்டர் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 2 வாரங்களுக்குப் பிறகு ஆடி Q7 ஃபேஸ்லிஃப்ட் கார் ரூ.88.66 லட்சத்தில் (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த அப்டேட்டட் Q7 எஸ்யூவி ஆனது அதே 3-லிட்டர் V6 டர்போ-பெட்ரோல் இன்ஜின் உடன் வருகிறது. வெளிப்புற மற்றும் இன்ட்டீரியர் பகுதிகளில் குறைவாகவே அப்டேட்கள் உள்ளன. Q7 ஆனது இந்தியாவில் CKD (முற்றிலும் நாக் டவுன்) யூனிட்டாக விற்கப்படும் மற்றும் மகாராஷ்டிராவில் சத்ரபதி சாம்பாஜி நகரில் (முன்னர் அவுரங்காபாத்) உள்ள ஆடியின் ஆலையில் உள்ளூரில் அசெம்பிள் செய்யப்படுகிறது. இது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும். அவற்றின் விலை விவரங்கள் பின்வருமாறு:

    வேரியன்ட்

    விலை

    பிரீமியம் பிளஸ்

    ரூ.88.66 லட்சம்

    டெக்னாலஜி

    ரூ.97.81 லட்சம்

    விலை விவரங்கள் அறிமுகம் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை

    Q7 -ல் செய்யப்பட்ட மாற்றங்களை இங்கே பார்ப்போம்.

    வடிவமைப்பு: குறைவான புதுப்பிப்புகள் மட்டுமே உள்ளன

    Audi Q7 facelift front

    வடிவமைப்பில் உள்ள புதுப்பிப்புகள் மிகவும் குறைவான அளவுக்கு மட்டுமே இருக்கும் என்பதால் புதுப்பிக்கப்பட்ட ஆடி Q7 பழைய கார் போலவே உள்ளது. வெர்டிகல் குரோம் கார்னிஷ் உடன் புதிய வடிவ கிரில் கொடுக்கப்பட்டுள்ளதால் புதியதாகத் தெரிகிறது. இது திருத்தப்பட்ட HD மேட்ரிக்ஸ் LED ஹெட்லைட்கள், டிஜிட்டல் சிக்னேச்சர் உடன் புதிய LED DRL -கள் மற்றும் புதிய ஏர் இன்டேக்குகள் உடன் புதிய வடிவிலான பம்பர் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

    Audi Q7 facelift side
    Audi Q7 facelift rear

    புதிதாக வடிவமைக்கப்பட்ட 19-இன்ச் அலாய் வீல்கள் உள்ளன. எஸ்யூவி -யின் ஒட்டுமொத்த தோற்றம் இன்னும் அப்படியே உள்ளது.  டெயில் லைட்ஸில் புதிய LED இன்டர்னல் லைட் எலெமென்ட்கள் உள்ளன. அப்டேட்கள் இந்தியா-ஸ்பெக் Q7 ஆனது 5 எக்ஸ்ட்டீரியர் கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்: சாகிர் கோல்ட், வைட்டோமோ புளூ, மித்தோஸ் பிளாக், சாமுராய் கிரே மற்றும் கிளேசியர் ஒயிட்.

    மேலும் படிக்க: Honda Amaze காரின் ஸ்பை புகைப்படங்கள்

    கேபின் மற்றும் வசதிகள்

    Audi Q7 facelift interior

    காரின் உள்ளே 2024 Q7 அதன் ஃப்ரீ பேஸ்லிப்டட் பதிப்பு போலவே தெரிகிறது. இது ஆல் பிளாக் கலர் இன்ட்டீரியர் தீம் மற்றும் பிளாக் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி உடன் வருகிறது. ஆடி 2024 Q7காரை இரண்டு இன்ட்டீரியர் கலர் ஆப்ஷன்களில் கொடுக்கிறது: செடார் பிரவுன் மற்றும் சாய்கா பெய்ஜ்.

    Audi Q7 facelift centre console

    Q7 ஃபேஸ்லிஃப்ட்டில் பழைய காரில் இருந்த அதே ட்ரை-ஸ்கிரீன் செட்டப் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் கிளைமேட் கன்ட்ரோல் பேனல் இன்ஃபோடெயின்மென்ட் -க்கு கீழே மற்றொரு டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. 19-ஸ்பீக்கர் பேங் & ஓலுஃப்சென் ஆடியோ சிஸ்டம், 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பார்க் அசிஸ்ட்டுடன் கூடிய 360 டிகிரி கேமரா போன்ற வசதிகள் அப்படியே உள்ளன.

    பழைய காரில் இருந்த அதே 3-லிட்டர் V6 டர்போ-பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படலாம்

    Audi Q7 facelift continues with the 3-litre V6 petrol engine

    Q7 எஸ்யூவி -யின் ப்ரீ ஃபேஸ்லிஃப்ட் பதிப்பில் வழங்கப்பட்ட அதே 3-லிட்டர் வி6 டர்போ-பெட்ரோல் இன்ஜினை ஆடி அப்படியே கொடுத்துள்ளது. விரிவான விவரங்கள் இங்கே:

    இன்ஜின்

    3-லிட்டர் V6 டர்போ-பெட்ரோல் இன்ஜின்

    பவர்

    345 PS

    டார்க்

    500 Nm

    டிரான்ஸ்மிஷன்

    8-ஸ்பீடு ஏடி

    டிரைவ் டைப்

    AWD (ஆல்-வீல் டிரைவ்)

       

    போட்டியாளர்கள்

    2024 ஆடி Q7 ஆனது Mercedes-Benz GLE, BMW X5, மற்றும் வோல்வோ XC90 ஆகிய கார்களுடன் போட்டியிடும்.

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    மேலும் படிக்க: Q7 ஆட்டோமெட்டிக்

    was this article helpful ?

    Write your Comment on Audi க்யூ7

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience