• English
  • Login / Register

ஜெய்ப்பூரில் ஆடியின் முதல் ப்ரீ-ஓன்டு ஷோரூம் துவக்கம்

published on ஆகஸ்ட் 10, 2015 02:35 pm by அபிஜித்

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஆடியின் முதல் ப்ரீ-ஓன்டு சொகுசு கார் ஷோரூமை, ஆடி அப்ரூவ்டு: பிளஸ் என்ற பெயரில் ஜெய்ப்பூரில் ஆடி நிறுவனம் துவக்கி உள்ளது. இந்த ஷோரூம் 3700 சதுரஅடி சுற்றளவில் பரவி காணப்படுகிறது. இதில் ஒரே நேரத்தில் 7 கார்கள் வரை காட்சிக்கு வைக்கும் வசதி உள்ளது. இது இம்மாநிலத்தில் எங்கும் காண முடியாத ஒரு சிறப்பு தன்மை ஆகும். இந்த இடத்தில் ஆடி ஷோரூம் வந்திருப்பதன் மூலம் ஜெய்ப்பூருக்கு, அம்மாநிலத்தில் ஒரு முக்கிய இடத்தை பெற்று தந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் வளர்ந்து வரும் ப்ரீ-ஓன்டு சொகுசு கார்களின் தேவையை இந்த ஷோரூம் நிவர்த்தி செய்யும் “ஆடி அப்ரூப்டு: பிளஸ் நிகழ்ச்சி என்பது பிளஸ் வாரண்டி, எளிய பைனான்ஸிங் மற்றும் இன்ஸுரன்ஸ் அளித்து சொகுசு கார்களின் விரும்பிகளுக்கு, தங்களிடம் உள்ள கார்களை மேம்படுத்தி கொண்டு ஆடி குடும்பத்தின் ஒரு பகுதியாக இருக்க உதவுதல் ஆகிய ஒரு குழுவான நன்மைகளுக்கு வழிவகை செய்கிறது. தரம் மற்றும் மல்டி-பயின்ட் செக் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தும் ஆடி அப்ரூவ்டு: பிளஸ் கார்கள் ஜெய்ப்பூரில் உள்ள ப்ரீ-ஓன்டு ஷோரூமில் இருப்பது மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் ப்ரீ-ஓன்டு சொகுசு கார்களின் சந்தையில் காணப்படும் ஸ்போர்ட்டியான, ஸ்டைலான மற்றும் அதிக விற்பனையாகும் கார்கள் ஆகியவற்றை பெற சிறந்த ஒரு வழிவாசலாக ஆடி நுகர்வோருக்கு இது அமையும்” என்றார் ஆடி இந்தியாவின் தலைவரான திரு.ஜோய் கிங்.

இதன் நன்மைகள் குறித்து பார்க்கும் போது, இந்த பிளஸ் நிகழ்ச்சியின் மூலம் நுகர்வோருக்கு 2 வருடங்களுக்கான வாரண்டி மற்றும் எந்நேரமும் சாலையோர உதவி (ரோடுசைடு அசிஸ்டண்ட்ஸ்) ஆகியவை வழங்கப்படும். ப்ரீ-ஓன்டு கார்களை இயந்திரவியல், பாடிவர்க், உட்புற கட்டமைப்பு மற்றும் எலக்ட்ரிக்கல் பரிசோதனை என 110க்கும் அதிகமான இடங்களில் பரிசோதிக்கப்படுகிறது. இதில் ஏதாவது குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டால், அது விற்பனைக்காக வெளியே அனுப்பும் முன், ஆடியின் மூலம் சீரமைக்கப்படுகிறது.

இது குறித்து திரு.கிங் மேலும் கூறுகையில், “எங்கள் தயாரிப்புகள் ஒரு பிராண்ட் என்ற அங்கீகரிப்பை பெற்றுள்ள நிலையில், மறுவிற்பனை மதிப்பு சிறப்பான உள்ளது. இது ஆடி அப்ரூப்டு: பிளஸ் உடன் இணையும் போது, வாழ்நாள் முழுவதும் எங்கள் நுகர்வோரை தக்கவைத்து கொள்ள உதவும். ஜெய்ப்பூரில் அமைந்துள்ள புதிய ஆடி அப்ரூப்டு: பிளஸ் மூலம் ஆடி குடும்பத்திற்குள் ஏராளமான புதிய உறுப்பினர்களை கொண்டு வர முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த சந்தையை குறித்த எங்களின் சமர்ப்பணம் மற்றும் தீவிரத் தன்மையை இந்த ஷோரூம் உயிர்ப்பிக்கிறது. மேலும் இந்த பகுதியில் எங்களை ஊன்றி நிறுத்திக் கொள்ள இந்த ஷோரூம் உதவிகரமாக இருக்கும் என்று கூறினார்.

“ஆடி இந்தியா, ஆடி ஜெய்ப்பூர் மற்றும் ஆடி உதய்ப்பூர் உடன் கமல் ஆட்டோடெக் நீண்டகால நட்பை பகிர்ந்து வந்துள்ளது. ஜெய்ப்பூரில் ஆடி ஆப்ரூப்டு: பிளஸ் துவக்கத்தின் மூலம் இந்த நட்பை மேலும் தொடருவதில் பெருமை அடைகிறோம். தனித்தன்மை வாய்ந்த சொகுசு அனுபவத்தை அளிக்கும் பிராண்ட் என்று உலகமே அறிவது போல, இந்த புதிய ஷோரூமின் மூலம் நுகர்வோருக்கு அந்த அனுபவத்தை அளிக்க முடியும் என்று உறுதி அளிக்கிறோம். நுகர்வோருக்கு தங்களின் கனவு காரை கண்டறிந்து, அதை ஓட்டி செல்ல இந்த ஷோரூம் வழிவகை செய்யும்” என்று ஆடி ஜெய்ப்பூர் மற்றும் ஆடி உதய்ப்பூர் (கமல் ஆட்டோடெக் பிரைவேட் லிமிடேட் நிர்வாக இயக்குனர் திரு.ஆதித்யா கஸ்லிவால் கூறினார்.

இது தவிர, சேவைகளுக்கான தேவைகளை சந்திக்க, எளிய வழியில் சர்வீஸ்களுக்கு உதவுதல் மற்றும் கார் உரிமையாளர் அனுபவத்தை பெற, ஆடி ஜெய்ப்பூர் மூலம் புதிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த தொழில்கூடம் 50,000 சதுரஅடிக்கு பரவி, ராஜஸ்தான் மாநிலத்திலேயே சொகுசு பிரான்ட்டிற்கான பெரிய ஸ்தலமாக காணப்படுகிறது. இந்த யூனிட்டில் பாடிசாப் பே உட்பட 13 சர்வீஸ் பே-க்கள் காணப்படுகிறது. இந்த சர்வீஸ் நிலையத்தில் காணப்படும் எக்ஸ்சாஸ்ட் கியாஸ் எமிஷன் சிஸ்டம் என்ற முக்கியமான அம்சம் மூலம் சர்வீஸ் நிலையத்தின் சுற்றுபுறம் எங்கும் தூய்மையாக உள்ளது. இதனோடு பயிற்சி அளிக்கப்பட்ட டெக்னிஷியன்ஸ் இருப்பதால், ஆடி நுகர்வோருக்கு உலக தரம் வாய்ந்த சர்வீஸை நிச்சயம் அளிக்க முடியும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience