• English
  • Login / Register

புதிய 2016 வோல்ஸ்வேகன் டிகுவான்: கேமராக்களுக்கு காட்டிய போது சிக்கியது

published on செப் 02, 2015 04:07 pm by nabeel for வோல்க்ஸ்வேகன் டைகான் 2017-2020

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

கனடாவில் கேமராக்களுக்கு காட்டப்பட்ட புதிய தலைமுறையைச் சேர்ந்த 2016 வோல்ஸ்வேகன் டிகுவான் கார், படம் பிடிக்க கிடைத்தது. நடக்க இருக்கும் பிராங்பேர்ட் மோட்டார் ஷோ 2015-ல் இந்த கிராஸ்ஓவர் வெளியிடப்பட இருந்தது. விளம்பர ஷூட்டிங் எதுவும் இல்லாத நிலையில், இந்த கார் மறைக்கப்படாமல் காண கிடைப்பது இதுவே முதல் முறையாகும். வரும் 2016 ஆம் ஆண்டு டிகுவான், இந்திய சந்தைக்கு கொண்டு வரப்படலாம் என்ற நிலையில், சகானில் உள்ள வோல்ஸ்வேகன் தொழிற்சாலையில் இது அசம்பிள் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

வோல்ஸ்வேகன் குழுவின் மாடுலாரர் க்யூர்பாவ்கஸ்டன் அல்லது MQB பிளாட்ஃபாமை அடிப்படையாக கொண்ட 2016 டிகுவான், தற்போதைய PQ35 பிளாட்ஃபாமை விட சுமார் 100 கிலோ வரை எடை குறைவாக காணப்படும். இந்த புதிய பிளாட்ஃபாமில் அமைந்துள்ளதால், இந்த கார் 1.4 TSI மற்றும் 2.0 TSI என்ஜின்களை கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் பிரிவை சேர்ந்த கார்கள், 1.6 மற்றும் 2.0 TDI என்ஜின்கள் மூலம் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மனின் MQB பிளாட்ஃபாமை அடிப்படையாக கொண்ட 2015 வோல்ஸ்வேகன் கோல்ஃப் கூட இந்த என்ஜின்களையே பயன்படுத்தி வருகிறது. இந்த SUV-யில் கோல்ஃப் GTE-யின் ஹைபிரிட் மோட்டார் மற்றும் இ-கோல்ஃப் ஆல்-எலக்ட்ரிக் யூனிட் அம்சங்களையும் பயன்படுத்தக் கூடும். டிரான்ஸ்மிஷனைப் பொறுத்த வரை, வோல்ஸ்வேகனில் புதிய 10-ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக்கை ஏற்றுக் கொள்ளக் கூடும். இல்லாவிட்டால் பழைய 7-ஸ்பீடு DSG பாக்ஸையே தொடரவும் வாய்ப்புள்ளது.

இந்த கார், பார்வைக்கு ஒரு SUV-யின் தோற்றத்தையும் கடந்து நிற்கும் கிராஸ்ஓவராக காட்சியளிக்கிறது. இந்தாண்டு டெட்ராய்ட் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட வோல்ஸ்வேகனின் கிராஸ் கூபே GTE-யின் சில குறிப்புகளை கொண்டுள்ள இந்த கார் மிகவும் நேர்த்தியாக காட்சியளிக்கிறது. பக்க பகுதி மற்றும் மேற்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட படங்களின் மூலம், இந்த கார் 18 இன்ச் அளவிலான 10 ஸ்போக் அலாய்களை கொண்டு பயணிப்பதாக தெரிகிறது. காரின் பக்க பகுதியின் வழியாக செல்லும் கிரோம் பட்டைகள், பின்புறத்தை சுற்றிக் கொண்டு ஒரு கட்டு போல சிறப்பாக காட்சியளிக்கிறது. ஜன்னல் வரிகளிலும் கிரோம் அமையப் பெற்று, இந்த காருக்கு ஒரு மதிப்பு மிகுந்த தோற்றத்தை அளிக்கிறது. காரின் மேற்புறத்தில் ஒரு பெரிய கண்ணாடி, மேற்கூரையாக அமைய பெற்று, இருபுறமும் கூரை நகர்த்திகள் (ரூப் ரெயில்ஸ்) அம்சத்தை கொண்டுள்ளது. பின்புறத்தில் மட்டமாக அமைக்கப்பட்ட ஸ்டைலான புதிய பின்புற விளக்குகள் (டெயில்லைட்ஸ்), பெரிய வின்ட்ஸ்கிரீனுக்கு மேலாக அமைந்த ரூப் ஸ்பேயிலர் மற்றும் ட்வின் கிரோம் எக்ஸ்சாஸ்ட் டிப்ஸ் ஆகியவற்றை கொண்டு பார்வைக்கு கவர்ச்சியாக காட்சியளிக்கிறது.

வெளிநாட்டு சந்தையை பொறுத்த வரை, ஃபோர்டு எஸ்கேப் / குகா, டொயோட்டா RAV4, மாஸ்டா CX-5 மற்றும் நிஸான் குயாஸ்கி ஆகியவற்றுடன் டிகுவான் போட்டியிட உள்ளது. இந்த கார் 5-சீட்களை கொண்ட தரமான வீல்பேஸ், 7-சீட்களை கொண்ட நீளமான வீல்பேஸ் மற்றும் வரும் 2017 ஆம் ஆண்டு வெளியாக உள்ள ஸ்போர்ட்டியான ஐந்து-சீட்களை கொண்ட கூபே என்று 3 வகைகளில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Volkswagen டைகான் 2017-2020

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience