சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

அதிரடியான 542 bhp  திறனுடன் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் SVR  மாடல் விற்பனைக்கு வந்துள்ளது

அபிஜித் ஆல் அக்டோபர் 12, 2015 03:01 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

லேண்ட் ரோவெரின் செயல்திறன் மிக்க SUV வகை ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் SVR மாடல், இந்தியாவில் ரூ2.12 கோடியாக விலை நிர்ணயிக்கப்பட்டு, விற்பனைக்கு வந்துள்ளது. இந்த உயர்தர வாகனம் 5.0 லிட்டர் பெட்ரோல் வகை V8 இஞ்ஜின் கொண்டு சக்தியூட்டப்பட்டுள்ளது. இந்த இஞ்ஜின் 542 bhp சக்தியையும், அதிகபட்சமாக 680 Nm விசையையும் உற்பத்தி செய்யும். இது, போர்ஷ் கெய்ன் டர்போ s மற்றும் மெர்சிடிஸ் ML63 AMG மாடல்களுடன் போட்டியிட தயாராகவுள்ளது.

இந்த வாகனம் JLR -இன் முன்னாள் தலைவரான ஜான் எட்வர்ட் அவர்களின் மேற்பார்வையில் பரிசோதிக்கப்பட்டு, நுர்பர்க்ரிங் பந்தையப் பாதை சுற்றுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க : ரேஞ்ச் ரோவர் எவோக் கன்வர்டபிள் மாடல் நவம்பர் மாதத்தில் வெளிவருவது சந்தேகமாகவே உள்ளது.

செயல்திறன் பற்றி பேசுகையில், SVR மாடல் 100 கி.மீ வேகத்தை அடைய 4.5 வினாடிகளே போதுமானது. மேலும், இது அதிகபட்சமாக 261 kmph வேகத்தில் செல்லக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி செயல்திறனை அடைய, தனது இஞ்ஜினில் மந்திரஜாலம் மிக்க சக்தியை ரகசியமாக வைத்துள்ளது. பேடில் ஷிப்டர்ருடன் இணைந்த 8-ஸ்பீட் கியர்பாக்ஸ், நிரந்தர ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டம், ஆகியவற்றுடன் அதிகபட்ச இழுவை சக்தி பெற டைனமிக் ஆக்டிவ் ரியர் லாக்கிங்க் வசதியையும் கொண்டுள்ளது. கிளட்ச் வகை டார்க் வெக்டரிங் சாதனத்தில் கிடைக்கும் அதே விளைவையே இதில் உள்ள டைனமிக் டார்க் வெக்டரிங் சாதனமும் தருகிறது. மேலும், இதன் நிலையான கட்டுபாட்டு அமைப்பு மிக அதிக வேகத்திலும் சீராக செயல்படும் தன்மையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரிந்து கொள்ள: சிறந்ததில் மிகச்சிறந்த டிஸ்கவரி ஸ்போர்ட் போட்டிக்கு தயாராக உள்ளது!

ஈடு இணையற்ற பந்தைய கார்களின் சப்தத்தைப் போன்ற உறுமலுக்காக, இந்த காரில் இரண்டு கட்ட புகை போக்கி சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள மின்னணு கட்டுப்பட்டால் இயங்க கூடிய வால்வுகள் தன்னிட்சையாக செயல்பட்டு ஸ்போர்ட்ஸ் காரில் வரும் சத்தத்தை போல, இந்த SUV காரிலும் ஒலிக்க செய்கிறது. தற்போது உலகின் மிக சிறந்த சப்தத்தை தர கூடிய ஸ்போர்ட்ஸ் காரான JLR இன் F- டைப் காரைப் போலவே, SVR காரும் அதிக வேகத்தில் செல்லும் போது உறுமலுடனும், கிரீச்சிடும் சத்தத்துடனும் செயல்படுகிறது.

கரடுமுரடான சாலையில் பயணிக்கும் திறன் பற்றி பேசுகையில், SVR மாடல் சிறந்த 850 mm வாடிங்க் டெப்த் செயல்பாடு, குறைந்த விகித கியர்பாக்ஸ், மின்னணு டிப் லாக் மற்றும் அனைத்து சக்கர இயக்க தொழில்நுட்பம் ஆகியவற்றை உட்கொண்டுள்ளது.

21 அங்குல அலாய் சக்கரம், அதனை சுற்றியுள்ள 275/45 R 21 டயர், மற்றும் விருப்பதிற்கு ஏற்ப 22 அங்குல சக்கரத்துடன், 295/40 R 22 ஸ்போர்ட் காண்டாக்ட் 5 ரப்பர் டயர் தெரிவுகளில், இந்த கார் கிடைக்கிறது. இந்த காரில் 6 பிஸ்டன் கல்லிபர் பிரம்போ ப்ரேக் பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்டாண்டர்ட் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மாடல்ளுடன் ஒப்பிடும் போது இதன் தோற்றப் பொலிவில், சிறு சிறு மாற்றங்கள் செய்யபட்டுள்ளது. உதாரணமாக முன் மற்றும் பின்புற பம்பருடன் இணைந்த பெரிய காற்று உள்வாங்கி, புதுமையான கிரில் வடிவம், அழகாக தெரியும் சக்கர வளைவுகள், பின்புறம் ஒருங்கிணைக்கப்பட்ட டிஃபூசர் ஆகிய அருமையான மாற்றங்களைக் கொண்டுள்ளது. இதன் உட்புறம், 4 வகையான வண்ண தெரிவுகளில் உள்ள தோலினால் ஆன விதானம், மற்றும் தேர்தெடுக்கும் வண்ணம் உள்ள அலுமினியம் மற்றும் கார்பன் ஃபைபர் மாடல் ஆகியன, இதன் தனிச்சிறப்புகள் ஆகும்.

போட்டியாளர்களைத் தெரிந்து கொள்ள: மெர்சிடிஸ் பென்ஸ் ML63 AMG / போர்ஷ் கயேன் டர்போ S

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.18.90 - 26.90 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.21.90 - 30.50 லட்சம்*
Rs.9 - 17.80 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.11.82 - 16.55 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை