அதிகாரபூர்வமான சிற்றேடு(ப்ரோஷர்) மூலம் 2016 டொயோட்டா இனோவா பற்றிய தகவல்கள் கசிவு
published on அக்டோபர் 28, 2015 07:38 pm by raunak for டொயோட்டா இனோவா
- 17 Views
- 13 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
அடுத்த மாதம் வெளியிடப் போவதாக தெரிவிக்கப்பட்ட இரண்டாம் தலைமுறை 2016 இனோவா, அதற்கு முன்னதாகவே சிற்றேடு மூலம் அதன் படம் கசிந்துள்ளது. புதிய இனோவாவின் அடி முதல் முடி வரை முழுமையாக மேம்படுத்தியுள்ள டொயோட்டா நிறுவனம், 10 ஆண்டுகளை கடந்துவிட்ட பழைய தற்போதைய தலைமுறையை சேர்ந்த மாடலின், எந்த பகுதியையும் தொடரவில்லை. அடுத்துவர உள்ள ஃபார்ச்யூனரை போலவே, இனோவாவும் ஒரு புதிய என்ஜினை பெற்றிருக்கும். தற்போது சிற்றேடு மூலம் இந்தோனேஷியா ஸ்பேக் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த இனோவா கசிந்துள்ளது. 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த காரை, டொயோட்டா நிறுவனம் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் வடிவமைப்பை குறித்து பார்க்கும் போது, டொயோட்டாவின் சமீபகால மாடல்களின் இன்-லைனை பெற்று, இந்த மாடலின் மூலம் இனோவா தடித்ததாக மாறுகிறது. இதில் பெரிய அளவிலான அறுங்கோண (ஹேக்ஸாகோனல்) கிரில் மற்றும் அதிகமான கிரோம், காம்ரி மற்றும் கரோலா ஆகியவற்றில் உள்ளதை போல கிரில் உடன் ஒருங்கிணைந்த டேடையிம் ரன்னிங் LED-களுடன், LED பிரோஜக்டர்கள் அம்சத்தை பெற்ற ஹெட்லெம்ப்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது. ஃபேக் லெம்ப்கள் உடன் இன்டிகேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிராண்டிற்கான புதிய கேபினை பெற்று, இதன் வடிவமைப்பின் நுட்பமான துணுக்குகளை, கரோலா / ஃபார்ச்யூனர் (இரண்டாம் தலைமுறை) ஆகியவற்றிடம் இருந்து பெற்றுள்ளது. இந்தோனேஷியன் ஸ்பேக் காரை வைத்து பார்க்கும் போது, இந்த புதிய இனோவாவின் ஆடம்பர தன்மைகள் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இதில் கேபின் அம்பியன்ட் லைட்டிங், பெரிய டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், அனைத்தும் ஆட்டோ-டவுன் பவர் விண்டோக்கள் மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது.
இந்தியாவிற்கு உரியது என்று பார்த்தால், ஒரு பெட்ரோல் என்ஜினை கொண்ட இனோவாவை, டொயோட்டா நிறுவனம் அளிக்கிறது. ஆனால் இதை தற்போதைய மேம்பாடோடு கைவிடப்பட்டுள்ளது. எனவே புதிய இனோவாவில் டீசல் தேர்வு மட்டுமே கொண்டதாக அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் புதிய 2.4-லிட்டர் டர்போ-இன்டர்கூல்டு டையரெக்ட்-இன்ஜெக்ஷன் டீசல் பெற்றிருக்கும். இந்த என்ஜின் ஒரு 6-ஸ்பீடு மேனுவல் உடன் பொருத்தப்படும் போது 3,400 rpm-ல் 149 PS-ம், 342 Nm முடுக்குவிசையும் அளிக்கிறது. இதுவே ஒரு 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உடன் பொருத்தப்படும் போது, 360 Nm முடுக்குவிசையை அளிக்கிறது. சர்வதேச அளவில், இதில் ஒரு புதிய 2.0-லிட்டர் இரட்டை VVT-i பெட்ரோல் என்ஜினையும் பெற்றிருக்கும்.
பரிந்துரைக்கப்பட்டவை: