சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2016 மிட்சுபிஷி பாஜிரோ ஸ்போர்ட்ஸ் / சேலன்ஜரின் மறைப்பு திரை விலகியது

published on ஆகஸ்ட் 03, 2015 09:25 am by nabeel for மிட்சுபிஷி பாஜிரோ

ஜெய்ப்பூர்:

நுகர்வோரை நீண்டகாலமாக காத்திருக்க வைத்து களைத்து போகச் செய்த மிட்சுபிஷி, தனது அடுத்த தலைமுறை பாஜிரோ ஸ்போர்ட்ஸ் / சேலன்ஜரை வெளி உலகின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த மிட்-சைஸ் எஸ்யூவியில் அவுட்லாண்டர் ஸ்போர்ட்ஸை போல, நிறுவனத்தின் புதிய “டைனாமிக் ஷில்டு” முன்பக்கம் பொறுத்தப்பட்டுள்ளது. முன்பக்கத்தை பொறுத்த வரை, முன்பக்க விளக்குகள் ஒடுங்கியது போன்ற அமைப்பு கொண்டு, அதனுடன் மெலிந்த பட்டையான எல்இடி விளக்குகள் சென்டர் கிரோம் வரை செல்லுகிறது. பம்பரின் கீழ்புறம் செல்லும் பாதையில் பனி விளக்குகள் (பாக் லேம்ப்) அமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் உள்ள கிரோமின் இழைகள், எல்லா விளக்குகளுடனும் தொட்டு சென்றது போன்ற ஒழுங்கான ஒரு தொகுப்பாக தெரிகிறது.

பக்கவாட்டில் இருந்து பார்த்தால், காரின் முன்பக்கத்தை சற்று இழுத்து, பின்பக்க மேல் முனைக்கு கொண்டு சென்றது போன்ற தோற்றத்தை அளிக்கிறது. பின்பக்க சக்கரத்திற்கும், சக்கர ஆர்ச்சிற்கும் இடையே அதிக இடைவெளி இருப்பதால், பக்கத்தில் இருந்து பார்க்கும் போது அவ்வளவு கவர்ச்சியாக தெரியவில்லை. பாஜிரோவின் பக்கவாட்டு பகுதியில் செல்லும் உடல் கோடுகளில் ஒன்று முன்பக்க விளக்கை, பின்பக்க விளக்கு உடன் இணைப்பது, காருக்கு ஒரு வலுவான காட்சியமைப்பை தருகிறது. பின்புற விளக்குகள் கொத்தாக, பம்பருக்கு செல்லும் வழி வரை உள்ளது போல அமைக்கப்பட்டு, பின்புறத்தை பார்க்க அழகாக மாற்றியுள்ளது. பம்பரில் பின்புற விளக்குகளோடு, சில உடல் கோடுகள் சீராக அமைக்கப்பட்டு, ஒரு கச்சிதமான தோற்றத்தை முழுமைப்படுத்தி உள்ளனர்.

உட்புறத்தை பொறுத்த வரை, பாஜிரோ சுத்தமாகவும், செளகரியமாகவும் தெரிகிறது. லேதர் சீட்கள், சில்வர் ட்ரிம், தகவல் தொடர்புக்கு பெரிய சென்டர் டிஸ்ப்ளே, மேலே பளபளப்பான பிளாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் ஆகியவை சேர்ந்து கேபினை மதிப்பு மிகுந்ததாக நினைக்க வைக்கிறது. பாஜிரோ முதல் முறையாக எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் உடன் வந்துள்ளது. அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கும் போது, 8-ஸ்பீட் ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் உடன் 2.4 லிட்டர் எம்ஐவிஇசி டர்போ டீசல், இந்த காருக்கு சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முடிவில் தாய்லாந்தில் இந்த கார் விற்பனைக்கு வரும். அதன்பிறகு வெகுவிரைவில் இந்த எஸ்யூவி, ஆசியான் நாடுகள், ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ரஷ்யா உட்பட 90க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனையை துவங்கும். இந்திய சந்தையை பொறுத்த வரை, இந்த மறுசீரமைப்பு பெற்ற பாஜிரோவை 2016 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கலாம்.

n
வெளியிட்டவர்

nabeel

  • 13 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது மிட்சுபிஷி பாஜிரோ

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.67.65 - 71.65 லட்சம்*
Rs.11.39 - 12.49 லட்சம்*
Rs.20.69 - 32.27 லட்சம்*
Rs.13.99 - 21.95 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை