2016 மெர்சிடீஸ் -பென்ஸ் E – க்லாஸ் டீசர் வீடியோ மற்றும் படங்கள் வெளியீடு

published on ஜனவரி 04, 2016 01:52 pm by nabeel for மெர்சிடீஸ் இ-கிளாஸ் 2017-2021

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் 2016 ஆம் ஆண்டை படு அமர்களமாக தொடங்க முடிவு செய்து விட்டதாகவே தெரிகிறது. ஜனவரி 11, 2016 ல் உலக சந்தையில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட உள்ள E - க்ளாஸ் செடான் கார்களின் வரைபடங்களை பென்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதைத் தவிர காரின் முக்கிய உடல் பகுதி அம்சங்களையும் , 84 தனித்தனியாக இயக்கிக் கொள்ளும் வசதியுடன் கூடிய, அதிக - செயலாற்றல் கொண்ட LED களை உள்ளடக்கிய மல்டிபீம் LED முகப்பு விளக்குகள் ஆகியவைகளை தெளிவாகக் காட்டும் டீசர் வீடியோ ஒன்றையும் பென்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜனவரி 1, 2016 அன்று இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு வெளியிடப்பட்ட வீடியோவில் காரின் உட்புறத்தை விளக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதில் பென்ஸ் S- க்ளாஸ் கார்களில் உள்ளது போன்ற டிஜிடல் டேஷ்போர்ட் பொருத்தப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது. ஆனால் S - கிளாசில் உள்ளது போல இரண்டு தனிதனி ஸ்க்ரீன்களாக (திரைகள் ) இல்லாமல் ஒரே யூனிட்டில் இரண்டு 12.3” திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. 2016 ல் டெட்ராய்ட் நகரில் நடக்க உள்ள வட அமெரிக்க சர்வதேச ஆட்டோ ஷோவில் ( NAIAS) இந்த கார் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிய வருகிறது. இதுவரை நமக்குகிடைதுள்ள தகவல்கள் , படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளைக் கொண்டு பார்க்கையில், இந்த புதிய E - க்ளாஸ் செடான் கார்கள் , S -க்ளாஸ் மற்றும் C - க்ளாஸ் செடான் கார்களைப் போன்று மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு கோட்பாட்டை பின்பற்றியே தயாரிக்கப் பட்டுள்ளது என்று சொல்ல முடிகிறது. காரின் முன்பகுதியில் வலிமையை பறைசாற்றும் விதத்தில் 2 ஸ்லேக் கிரில் அமைப்பும் அதன் நடுவே பென்ஸ் நிறுவனத்தின் மூன்று கோணங்களைக் கொண்ட நட்சத்திர சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த E - க்ளாஸ் செடான் கார்கள் ஆடி A6 மற்றும் BMW – 5 - சீரிஸ் கார்களுடன் போட்டியிடும்.

மெர்சிடீஸ் பென்ஸ் GLE கூபே இந்தியாவில் அறிமுகமாவதற்கு ஒரு நாளைக்கு முன்னர் இந்த E - க்ளாஸ் உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிகிறது. ரூ.85-90 லட்சங்களில் அறிமுகமாக உள்ள இந்த GLE கூபே கார்கள் BMW நிறுவனத்தின் X6 கார்களுக்கு போட்டியாக களமிறங்க உள்ளது. 3.0 லிட்டர் பை - டர்போ V6 பெட்ரோல் என்ஜின் மூலம் சக்தியூட்டப்பட உள்ள இந்த GLE கூபே கார்கள் 357 பிஎச்பி சக்தியையும் 520 Nm அளவு டார்கையும் வெளியிடும் ஆற்றல் கொண்டவை. BMW X6 உடன் ஒப்பிடுகையில் டார்க் அளவு 110 nm அளவுக்கு குறைவு தான் என்றாலும், 46 பிஎச்பி அளவுக்கு கூடுதல் ஆற்றலை உற்பத்தி செய்யும் திறன் இந்த GLE கூபே கார்களுக்கு உண்டு என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே என்ஜின் செயல்திறனை காரின் அறிமுகம் வரை பொறுத்திருந்து தான் கணிக்க முடியும்.

இதையும் படியுங்கள்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மெர்சிடீஸ் இ-கிளாஸ் 2017-2021

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingசேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience