2016 எண்டேவர் மாடலின் விலை நிர்ணயம் – சரியா? தவறா?
raunak ஆல் பிப்ரவரி 19, 2016 02:31 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் பிரிமியம் SUV கார்களின் பிரிவில் முன்னணியில் இருக்கும் மூன்று முக்கிய நிறுவனங்கள், தங்களது SUV கார்களின் அடுத்த ஜெனரேஷன் மாடல்களை சென்ற ஆண்டு வெளியிட்டன. அவை ஃபார்ச்சூன்னர், பஜெரோ ஸ்போர்ட், மற்றும் எண்டேவர் ஆகும். ஃபோர்ட், டொயோட்டா மற்றும் செவ்ரோலெட் என்ற இந்த மூன்று போட்டி நிறுவனங்களில், ஃபோர்ட் இந்தியா நிறுவனம், தனது புத்தம் புதிய எண்டேவர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது, ஆனால் மற்ற இருவரும் தங்களது பழைய ஜெனரேஷன் மாடலை மேலோட்டமாக மெருகேற்றி வெளியிட்டனர். இதற்கு முந்தைய எண்டேவர், SUV பிரிவில் முதல் முதலில் அறிமுகமான கார் என்பதால், தற்போது வெளிவந்துள்ள மாடலை இந்நிறுவனம் முழுவதுமாகப் புதுப்பித்துள்ளது. அது மட்டுமல்ல, இந்த போட்டியில் எண்டேவரின் போட்டியாளராக, செவ்ரோலெட்டின் டிரைல்பிளேசரும் உள்ளது, ஆனால் செவ்ரோலெட் நிறுவனம், டிரைல்பிளேசரில் இதுவரை 2WD அமைப்பை மட்டுமே வழங்குகிறது.
இந்த சுவாரஸ்யமான போட்டியில், நமது கவனத்தை ஈர்க்கும் முக்கிய விஷயம் என்னவென்றால், 2016 எண்டேவர் மாடலின் விலை, தற்போது சந்தையில் உள்ள ஃபார்ச்சூனர் மாடலின் விலையை விட குறைவாகவே இருக்கிறது. அது மட்டுமல்ல, வெளியான முதல் மாதத்திலேயே, கிட்டத்தட்ட 480 எண்டேவர் கார்களை ஃபோர்ட் நிறுவனம் விற்பனை செய்திருப்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். மேலும், 2016 எண்டேவர் பலவிதமான உயர்தர ஸ்டாண்டர்ட் உபகரணங்கள் மற்றும் ஏராளமான ஆடம்பர வசதிகளுடன் வருகிறது. புதிதாக வந்துள்ள மற்ற மாடல்களில் உள்ள பலவித அம்சங்களை ஒப்பிடுவதன் மூலம், ஃபோர்ட் இந்தியா நிறுவனம், தனது புதிய எண்டேவருக்கு இந்த விலையை நிர்ணயம் செய்தது சரியா அல்லது தவறா என்பதை நாம் இப்போது கண்டறியலாம்.
அனைத்து SUV மாடல்களும் 4x4 ஆப்ஷனுடன், இரண்டு சக்கர ட்ரைவ் (RWD 4x2) வகையை வழங்குகின்றன. எனினும், தற்போது செவ்ரோலெட் நிறுவனம், நமது நாட்டில் உள்ள டிரைல்பிளேசர் மாடலில் 4x4 வெர்ஷனை வழங்கவில்லை. 4x4 வெர்ஷனில் வரும் மற்ற வாகனங்கள் மேனுவல் மற்றும் ஆட்டோமாட்டிக் ஆப்ஷன்களுடன் வருகின்றன. இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், மிட்சுபிஷி தனது பஜெரோ ஸ்போர்ட் மாடலில் 4x4 ட்ரைவுடன், ஆட்டோமாட்டிக் ஆப்ஷனையும் புதிதாக இணைத்துள்ளது.
சிறப்பம்சங்கள் அடிப்படையில் எந்த ஒரு SUV காரையும் புதிய எண்டேவருடன் ஒப்பிட முடியாது. ஏனெனில், இதில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் நிகரற்றதாக இருக்கின்றன. அது மட்டுமல்ல, சந்தையில் உள்ள பிற நிறுவனங்களின் SUV கார்கள் அனைத்தும், இந்த புதிய வரவை விட ஒரு ஜெனரேஷன் பழமையானதாக உள்ளன. 7 – ஏர் பேக்குகள் உட்பட, முழங்கால் ஏர் பேக், அகலமான சன்ரூஃப், 8 அங்குல SYNC 2 டச்ஸ்கிரீன் அமைப்பு, ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியுடன் 10 ஸ்பீக்கர்கள் கொண்ட அமைப்பு, 4WD வேரியண்ட்களில் வரும் ஸ்டாண்டர்ட் டெர்ரைன் மேனேஜ்மெண்ட் சிஸ்டம், பார்க்கிங் அஸ்சிஸ்ட் சிஸ்டம் என்று இதன் சிறப்பம்சப் பட்டியல் முடிவுறாமல் நீண்டு கொண்டே போகிறது. கூடுதல் ஆட்-ஆன் பிரிவில் உள்ள ஒரு சில அம்சங்கள் மற்ற வாகனங்களிலும் வழங்கப்படுகிறன. உதாரணமாக, பஜெரோ ஸ்போர்ட்டின் அனைத்து வேரியண்ட்களிலும் 4 டிஸ்க்குகள் கட்டாயமாக வழங்கப்படுகிறன. ஆனால், எண்டேவரின் நேரடி போட்டியாளரான ஃபார்ச்சூனரில் இந்த வசதி இல்லை. எனவே, ஃபார்ச்சூனருடன் ஒப்பிடும் போது, இந்த அமைப்பை எண்டேவர் கூடுதலாக வழங்குகிறது.
இறுதியாக, மிட்சுபிஷி மற்றும் டொயோட்டா போன்ற நிறுவனங்கள் தங்களது SUV கார்களில் புதிய ஜெனரேஷன்களை அறிமுகப்படுத்தும் வரை அல்லது செவ்ரோலெட் தனது டிரைல்பிளேசர் காரை இந்தியர்களின் தேவைக்கேற்றவாறு மாற்றி அமைக்கும் வரை, டிரைல்பிளேசரில் 4WD ஆப்ஷனுடன் கூடுதலாக வேரியண்ட்களை அறிமுகப்படுத்தும் வரை, புதிய எண்டேவர் இந்தப் பிரிவின் அரசனாகத் திகழும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதையும் படிக்கவும் விடாரா ப்ரீஸா Vs போர்ட் ஈகோஸ்போர்ட் Vs மஹிந்திரா TUV 300