விடாரா ப்ரீஸா Vs போர்ட் ஈகோஸ்போர்ட் Vs மஹிந்திரா TUV 300
published on பிப்ரவரி 03, 2016 04:56 pm by அபிஜித் for மாருதி விட்டாரா பிரீஸ்ஸா 2016-2020
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி விடாரா ப்ரீஸா காம்பேக்ட் SUV வாகனங்கள் நடைபெற்று வரும் 2016 எக்ஸ்போவில் அரங்கேற்றம் ஆகி உள்ளது. இதே சப் - 4 மீட்டர் SUV வாகனங்களான ஈகோஸ்போர்ட் மற்றும் TUV 300 வாகனங்களுடன் இந்த புதிய ப்ரீஸா வாகனங்களை ஒப்பிட்டு ஒரு விரிவான ஒப்பீட்டை வெளியிட்டுள்ளோம். இந்த பிரிவில் உள்ள ஈகோஸ்போர்ட் மற்றும் TUV 300 நல்ல முறையில் விற்பனை ஆகி வருகின்றன. தன்னுடைய கட்டுறுதியான உடலமைப்பு , சேஸிஸ் மற்றும் டைனமிக்ஸ் மூலம் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளது போர்ட் நிறுவனத்தின் ஈகோஸ்போர்ட் வாகனங்கள். இன்னொருபுறம் புதிய வரவான TUV 300 வாகனங்களும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளன. இந்த மூன்று வாகனங்களையும் தோற்ற பொலிவு மற்றும் தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்டையில் ஒப்பிட்டு இந்த கட்டுரையை தொகுத்துள்ளோம்.
தோற்றம்
புதிய ஈகோஸ்போர்ட் வாகனங்கள் சSUV வாகனங்களுக்கே உரித்தான உயரமான தோற்றதை பெற்றுள்ளது மட்டுமின்றி மிக அழகான உடல் பகுதி வடிவமைப்பையும் பெற்று SUV பிரியர்களின் விருப்ப தேர்வாக உள்ளது. மஹிந்திரா நிறுவனமும் இத்தாலிய வடிவமைப்பு நிறுவனமும் ஒன்றாக இணைந்து வடிவமைத்துள்ள TUV 300 SUV ஒரு ராணுவ டேன்க் போன்ற தோற்றத்தை விரும்பும் வாடிக்கையாளர்களின் விருப்பதை பூர்த்தி செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
சரி , இப்போது விடாரா ப்ரீஸாவின் சிறப்பம்சங்களை பாப்போம். முதல் பார்வைக்கு ஒரு SUV வாகனம் போன்று இல்லாமல் ஒரு ப்ரீமியம் காரைப் பார்ப்பது போன்ற உணர்வு நமக்குள் எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஃப்லோடிங் ரூஃப்லைன் , எதிர்மறையான கலர் ஸ்கீம் , ப்ரொஜெக்டர் ஹெட் லேம்ப்ஸ், ரைசிங் பெல்ட்லைன் மற்றும் இன்னும் பல நேர்த்தியான வடிவமைப்பு உத்திகள் இந்த வாகனத்தின் வடிவமைப்பில் கையாளப்பட்டு மற்ற வாகனங்களில் இருந்து தனித்து மிடுக்காக தெரியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சக்தி
TUV 300 வாகனத்தின் என்ஜின் 82 bhp அளவு சக்தியையும் , புதிய ஈகோஸ்போர்ட் வாகனங்களின் என்ஜின் 99 bhp சக்தியையும் வெளியிடும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. சக்தியை பொறுத்தவரை இந்த பிரிவில் மற்ற வாகனங்களை பின்னுக்கு தள்ளி ஈகோஸ்போர்ட் வாகனங்கள் புதிய அளவுகோலை நிறுவி உள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்னொருபுறம் விடாரா ப்ரீஸா வாகனங்கள் 89 bhp அளவு சக்தியை உற்பத்தி செய்யும் வகையில் ட்யூன் செய்யப்பட்ட அதே 1.3 லிட்டர் DDiS மோட்டார் பொருத்தப்பட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி நிறுவனம் தங்களது வாகனங்களை குறைந்த எடையுடன் உருவாக்குவதில் முழுக் கவனமும் செலுத்தி வருகிறது. இந்த விடாரா ப்ரீஸா வாகனங்களும் குறைந்த எடையுடன் தயாரிக்கப்படும் பட்சத்தில் இதன் என்ஜின் ஆற்றல் இந்த பிரிவில் உள்ள மற்ற வாகனங்களுக்கு சவால் விடும் வகையில் இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful