2015 டோக்யோ மோட்டார் ஷோ : நிஸ்ஸான் நிறுவனத்தின் IDS கான்சப்ட் வெளியீடு!
modified on அக்டோபர் 29, 2015 01:09 pm by raunak
- 19 Views
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
தற்போது நடந்து கொண்டிருக்கும் 2015 டோக்கியோ மோட்டார் ஷோவில் தனது தன்னிச்சையான டிரைவிங் மற்றும் ஸீரோ எமிஷன் EV க்கள் ( மின்சாரத்தில் இயங்கும் வாகனம்) ஆகியவற்றை உள்ளடக்கிய IDS கான்சப்டை ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான நிஸ்ஸான் நிறுவனம் வெளியிட்டது. “ காருக்கும் ஓட்டுனருக்கும் இடையே உள்ள உறவிலும், எதிர் கால வாகன போக்குவரத்து ஆகியவற்றில் ஒரு மிகப்பெரிய புரட்சிகரமான மாற்றத்தை நிஸ்ஸான் நிறுவனம் கொண்டுவரும் என்று பெருமையுடன் இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் சிஇஒ திரு. கார்லஸ் க்ஹோஷ்ன் கூறினார். ஆனால் தற்போது நிஸ்ஸான் நிறுவனத்தின் தயாரிப்பில் உள்ள வாகனங்கள் பற்றிய எந்த தகவளையும் அவர் வெளியிடவில்லை. . எப்படி இருப்பினும் 2020 ஆண்டு இறுதிக்குள் நிஸ்ஸானுடைய இன்டெலிஜென்ட் டிரைவிங் தொழில்நுட்பம் உலக அளவில் அனைத்து நகரங்களில் உள்ள கார்களிலும் செயல்படுத்தப்படும் என்று நிஸ்ஸான் தெரிவித்துள்ளது.
இந்த புதிய IDS கான்சப்டை பொறுத்தவரை இரண்டு வகையில் இயங்குகிறது. . தன்னிச்சையாக இயங்கும் பைலடெட் டிரைவிங் மோட் மற்றும் மேனுவல் மோட். ஓட்டுனர் மேனுவல் மோட் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கும் போது , ஓட்டுனருக்கு வாகனத்தை இயக்கும் கட்டுப்பாடு கிடைத்தாலும் கூட தொடர்ந்து இந்த IDS தொழில் நுட்பம் தன்னுடைய சென்சார்களின் உதவியுடன் வாகனத்தின் இயக்கத்தை கண்காணித்துக்கொண்டே இருந்து தக்க சமயத்தில் உதவும். விபத்து போன்ற அசம்பாவித சம்பவங்களின் போது ஓட்டுனருக்கு சரியான முடிவு எடுக்க பெரிதும் உதவும். மேலும் ஒரு உற்ற நண்பனாக, சக ஓட்டுனர் போல தன்னுடைய AI மூலம் ஓட்டுனருடன் ட்ராபிக் மற்றும் ஓட்டுனரின் ஸ்கெட்யூல் போன்றவற்றை நினைவு படுத்தும். சுருக்கமாக சொல்வதென்றால் , ஓட்டுனர் எந்த மோட் தேர்ந்தெடுத்திருந்தாலும் வாகனத்தை வேகம் கூட்டுவதில் தொடங்கி ப்ரேக் போட்டு நிறுத்தும் வரை உன்னிப்பாக வாகனத்தின் இயக்கத்தை கவனித்துக் கொண்டிருக்கும் ஒரு சக ஓட்டுனரைப் போல், அந்த ஓட்டுனரின் ஸ்டைலுக்கு ஏற்ப ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கும்.
“ தகவல் தொடர்பு தான் இந்த IDS கான்செப்டின் மிக முக்கிய அம்சமாகும். நிஸ்ஸான் நிறுவனத்தின் இந்த தன்னிச்சையான டிரைவிங் தொழில்நுட்பம் ( அட்டானமஸ் டைவிங் ) கனவு சாத்தியப்பட வேண்டுமென்றால் ஓட்டுனர் மற்றும் காருக்கு இடையே ஆன தகவல் பரிமாற்றங்கள் மட்டும் போதாது. காருக்கும் மக்களுக்கும் இடையேயான தகவல் பரிமாற்றமாக அது வளர வேண்டும். அதற்கு ஒரு சமுதாயமாக ஒன்றாக இணைந்து நாம் உழைக்க வேண்டும். இந்த IDS கான்சப்டின் அடிநாதமாக நாங்கள் குறிப்பிட்டுள்ளதைப் போல் இணைந்தே பயணிப்போம்" என்று நிஸ்ஸான் நிறுவனத்தின் வடிவமைப்பு இயக்குனர் மிட்சுநோரி மொரிடா கூறினார்.
இந்த IDS கான்சப்டில் உயர் திறன் கொண்ட 60 கிலோ வாட் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. . மேலும் அதிநவீன ஏரோ டைனமிக்ஸ் , லோ ஸ்டேன்ஸ், மற்றும் முழுதும் கார்பன் பைபர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள எடை குறைந்த உடல் பகுதி போன்ற அம்சங்கள் வாகனங்கள் நெடுந்தூரம் பயணிக்கையில் உதவும் வகையில் உள்ளன. இதைத் தவிர இந்த நிஸ்ஸான் IDS கான்சப்டில் ஸ்மார்ட் போன் அல்லது டேப்லட் மூலம் இயக்ககூடிய பைலட்டெட் பார்க் வசதி மற்றும் ஒயர்லெஸ் சார்ஜிங் தொழில்நுட்பம் போன்றவைகளும் இணைக்கப்பட்டுள்ளது. . பார்கிங் மற்றும் சார்ஜிங் செயல்களை தன்னிச்சையாக செய்து கொள்ளும் விதத்தில் அந்த பொறுப்புக்களை காரிடமே விட்டுவிடவும் முடியும் என்பது கூடுதல் தகவல்.
“ நிஸ்ஸான் நிறுவனத்தின் இந்த IDS தொழில்நுட்பம் தயாரிப்புக்களில் உள்ள கார்களில் இணைக்கப்படும் காலத்தில் ஏராளமான EV மின்சார வாகனங்கள் புழக்கத்தில் வந்திருக்கும். அவை நீண்ட தூரம் ஒரே ஒரு முறை சார்ஜ் செய்து கொண்டு பயணிக்கும் வல்லமை கொண்டதாக இருக்கும். இதை சொல்லும் போது நிச்சயம் பேட்டரி தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சி அடைந்தும், ஏரோடைனமிக் தொழில்நுட்பமும் மேலும் சிறப்பாக முன்னேறி இருக்கவேண்டும் என்பதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாங்கள் அதி நவீன ஏரோடைனமிக் தொழில்நுட்பத்தை தான் எங்கள் IDS கான்சப்டில் பயன்படுத்தி இருக்கிறோம்" என்றும் அவர் மேலும் பேசுகையில் கூறினார்.
இதையும் படியுங்கள் :
0 out of 0 found this helpful